Friday 23 September 2016

வெண்டைக்காய் இஜுரு......!?


                                              வெண்டைக்காய் இஜுரு .......!?
                                               ------------------------------------


பூவையின் எண்ணங்களில் பதிவு எழுதி நாட்களாகி விட்டன. இந்த உணவு , பதார்த்தம்  என்ன வேண்டுமானாலும்  பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். என்  மனைவி இது ஒரு ஆந்திர உணவுவகை என்றும் வெண்டைக்காய் இஜுரு என்று ஏதோ சொன்னாள். பெயரா முக்கியம் செய்முறை தருகிறேன் செய்து பார்த்து பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்செய்முறையில் நான் அளவுகள் கொடுக்கப் போவதில்லை. அவரவர் சுவைக்கேற்ப  எடுத்துக் கொள்ளலாம் ஆனால் கொடுத்திருக்கும் பொருள்கள் அவசியம் வேண்டும் வெண்டைக்காய்  எண்ணைய் வெங்காயம் தக்காளி இஞ்சிப் பூண்டு விழுதுபட்டை லவங்கம் ஏலக்காய்   தேங்காய்  முந்திரிப் பருப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சப்பொடி, உப்பு கொத்தமல்லிப் பொடி .
 செய்முறை.
 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்  தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும் வெண்டைக்காயை சுமார் முக்கால் அங்குலத்திலிருந்து, ஒரு அங்குல நீளத்துக்குள் நறுக்கிக் கொள்ளவும் 
கடாயில் எண்ணையை தாராளமாக ஊற்றி  வெண்டைக்காயை நன்கு வதக்கிக் கொள்ளவும் வெண்டைகாயை எடுத்து தனியே வைத்து, பட்டை லவங்கம்இஞ்சிப் பூண்டு விழுது விட்டு அதே காடாயில் எண்ணையில் பொறிக்கவும்  பின்  அதிலேயே  வெங்காயத்தை வதக்கவும் பொன்னிறமாக வதக்கிய வெங்காயத்தில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சப்பொடி தனியாப்பொடி மிளகாய்ப்பொடி போட்டுக் கிளறவும் அதன் பின் தண்ணீர்  தேவையான அளவு ஊற்றி கொதிக்க விடவும் அந்த வதக்கிய வெங்காய தக்காளி கரைசலில்  தேங்காய் முந்திரிப் பருப்பு அரைத்து விடவும்இந்தக் கரைசலில் தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்  பச்சை வாசனை போனபின் வெண்டைக்காய் துண்டுகளைப் போடவும் உப்பு காரம் வெண்டைக்காயில் பிடித்தவுடன் இறக்கி வைக்கவும்

ருசி பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்