பிசி பேளா ஹுளி அன்ன
=========================
இது என்னவோ
என்று பயபடவேண்டாம். கர்நாடகாவில் பிரசித்தமான உணவு வகை முதலில் இதன் பொருள் என்னவென்று
காண்போம் பிசி என்றால் சூடான , பேளா என்றால் பருப்பு, ஹுளி என்றால் புளி அன்னா
என்றால் சாதம் . அதாவது சூடான பருப்பு புளி சாதம் செய்து முடித்தபின் பிசைந்து வைத்த
தளராக இருக்கும் சாம்பார் சாதம் போல் இருக்கும்
தனியாக சாதம் சாம்பார் வைத்து கலந்து சாப்பிடுவதற்குப் பதில் ஒரு ரெடி மேட்
சாம்பார் சாதம்
இது இருவிதமான செய்முறைகளில் செய்யலாம் முதலில்
அரிசி துவரம் பருப்பு ஒன்றுக்குப் பாதி என்னும் அளவில் குக்கரில் வேகவைக்கப்
படுகிறது ஒன்றுக்கு மூன்று என்று நீரின் அளவை நிர்ணயிக்கலாம் தளரான சாதம் தயார்.
ஒரு
கடாயில்எண்ணை ஊற்றித் தாளித்து தேவைப்பட்ட காய்கறிகளை நறுக்கியதை வதக்கி
எடுக்கவும் ( பிரியப் பட்ட காய்கறிகளை உபயோகிக்கலாம்) பொதுவாக சின்ன வெங்காயம்
தக்காளி காரட் முருங்கைக்காய் எடுத்துக்
கொள்ளலாம் வதக்கி வைத்த காயில் அவரவர்
ருசிக்கேற்ப புளிக் கரைசலை ஊற்றி உப்பு மஞ்சப் பொடி போட்டு கடாயில் காய்களை
வேகவிடவும் இந்தப் புளிக் குழம்பை வேக வைத்த சாதத்தில் ஊற்றி நன்கு கிளறவும் இதில்
நான் நீரின் அளவோ புளியின் அளவோ தரவில்லை. சிலருக்கு கெட்டியாக இருந்தால் பிடிக்கும். சிலருக்குத்
தளராக இருந்தால் பிடிக்கும் ஆனால் பொதுவாக பிசிபேளா ஹுளி அன்னா சற்றுத் தளராகவே
இருக்க வேண்டும். சாதம் புளிக் கரைசலில் பிசி பேளா பொடி போட்டு இறக்கி வைக்கலாம்.
ஆனால்
புளிக்கரைசலிலேயே மல்லி மிளகாய் வெந்தயம் உ. பருப்பு வதக்கிப்மிக்சியில் சிறிது
தேங்காய் சேர்த்து அரைத்துக் கொண்டு
கலக்கி அதை வேகவைத்த சாதத்தில் கலக்கவும் செய்யலாம் பிசி பேளா பொடிக்கு பதில்
இவ்வாறு செய்யலாம் இறக்கி வைத்த
அன்னத்தில் சிறிது நெய் ஊற்றி கருவேப்பிலையும் தூவலாம்
இரண்டாவது
செய்முறையில் குக்கருக்குப்பதில் ஒருபெரிய பாத்திரத்தில் அரிசி பருப்பு வதக்கிய
காய்கறிகளுடன் புளிக் கரைசலையும் ஊற்றி உப்பு மஞ்சள் பொடி போட்டு ஒன்றாக வேகவைக்கலாம் நன்றாக வெந்து வரும் சமயம்
சாம்பார்பொடியுடன் அரைத்து வைத்த தேங்காயையும் சேர்க்கலாம்
இறக்கி வைத்து
நெய்யில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கலாம்