Tuesday, 26 April 2016

தக்காளி செய்முறை ஒன்று உபயோகம் பல


                                       தக்காளி செய்முறை ஒன்று உபயோகம் பல
                                       --------------------------------------------------------------------

தக்காளி ஒரு செய்முறை பல உபயோகம்
பூவையின் எண்ணங்களில் தொடர்ந்து எழுத ஆசை. ஆனால் எழுதும் சமையற் குறிப்புகள் எடுபடுமா என்பதே சந்தேகம் இருந்தாலும் எளிய சில குறிப்புகள் பலருக்குத் தெரிந்திருந்தாலும் சிலருக்குப் புதிதாக இருக்கலாம் ஒரு எளிய முறையில் தக்காளியை உபயோகிக்கும் விதமே இது செய் முறையும் எளிது
 முதலில் தக்காளியை தேவையான அளவு எடுத்துக் கொண்டு நன்கு கழுவி மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும் அரைக்கும் போதே தேவையான உப்பு மிளகாய்த் தூள்பெருங்காயத்தூள்  மஞ்சத்தூள்சேர்த்து நன்கு அரைக்க வேண்டும் . இந்த விழுதை ஒரு கடாயில் எள் எண்ணை விட்டு கடுகு வெந்தயத்தூள்  சீரகத் தூள் சேர்த்துஅவை வறுபட்டவுடன்  தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கிளற வேண்டும்எண்ணை சற்று தாராளமாகவே இருக்கலாம் நன்கு வதங்கிய விழுதை ஆறவிட்டு பாட்டிலில் சேமிக்கலாம்  இதை இட்லி தோசை முதலியவற்றுக்குத் தொட்டுக்கொள்ள உபயோகிக்கலாம் சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் உபயோகிக்கலாம் இன்னும் அவரவர் சுவைக்கேற்ப உபயோகிக்கலாம் ஈரம் படாமல் வைத்திருந்தால் பல நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்      






 


Saturday, 23 April 2016

ஆவக்காய் ஊறுகாய்


                                              ஆவக்காய் ஊறு காய்
                                             ------------------------------------
 நல்ல முற்றிய மாங்காய்களை எடுத்துக் கொள்ள வேண்டும் பழுத்திருக்கக் கூடாது அவரவர் தேவையைப் பொறுத்தும் கிடைக்கும் மாங்காய்களைப் பொறுத்தும் வேண்டிய அளவு செய்யலாம் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாண்டால்  ஊறுகாய் கெடாமல் பல மாதங்கள் வரும்
முதலில் மாங்காய்களை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் அவற்றை நல்லதுணியால் ஈரம் போகத் துடைக்க வேண்டும் மாங்காய்கள் ஈரமாக இருக்கக் கூடாது. அவற்றை எட்டு ஆகவோ மாங்காய் பெரிதாயிருந்தால் எந்த சைஸ் வேண்டுமோ அதன்  படியும் நறுக்கிக் கொள்ள வேண்டும் கொட்டைகளை எடுத்து விட வேண்டும்  நறுக்கிய காய்களை ஏதாவது பாத்திரத்தில் போட்டு நிரப்பி அளந்து கொள்ள வேண்டும் இதை  ஏன்  செய்ய வேண்டும்  என்றால் உப்பின்  அளவை நிர்ணயிக்கத்தான் . ஐந்து பாத்திர காய்களுக்கு ஒரு பாத்திர உப்பு என்பது அளவு. கல் உப்பே உபயோகிக்கவேண்டும்உப்பு சேர்த்த மாங்காயுடன்  மிளகாய்த்தூளையும் கலக்க வேண்டும் உப்பின் அளவில் முக்கால் அளவு மிளகாய்த்தூள் என்றும்  அரை அளவு கடுகுப் பொடியும் கால் அளவு வெந்தையப் பொடியும் சேர்க்கலாம் இதில் நல்ல எள் எண்ணையையும்  சேர்த்துக் கிளறவேண்டும் மாங்காய் உப்பு மிளகாய்த்தூள் கலவையில் எண்ணையை ஊற்றினால் எண்ணையில் கலவை மூழ்கி இருக்க வேண்டும் இந்தக் கலவையை ஒரு பெரிய பரணியில் போட்டு பரணியின் வாயை நல்ல துணியால் கட்டி மூட வேண்டும்  சிலர் இந்தக் கலவையில் பூண்டும் பச்சைக் கொத்துக்கடலையும் போடுவார்கள்அது அவர்களின் சுவையைப் பொறுத்தது இரண்டு நாட்களுக்கு  ஒரு முறை பரணியைத் திறந்து மீண்டும் நன்கு கிளறி  ஊற விட வேண்டும் ஊறு காய் போடட பத்து நாட்களுக்குப் பின் உபயோகிக்கலாம்