ஒரு புதுமையான மாங்கோ ஜூஸ்
----------------------------------------------------
பூவையின் எண்ணங்கள்
வலைத்தளம் என்னை ஏன் வருகைதந்து பதிவெழுதுவதில்லை என்று கேட்கிறாற்போலிருந்தது,
அதுவும் என் வலைத்தளம்தானே. கவனிக்காவிட்டால் சவலையாகிவிடும். இருந்தாலும்
எழுதுவது சற்று வித்தியாசமான உணவுப் பொருள் பற்றி இருக்க வேண்டாமா. கோடைக் காலம்
கொளுத்த ஆரம்பித்துவிட்டது. மாம்பழ சீசன் தொடங்குகிறது மாங்கோ ஜூஸ்
குடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஆனால் நான் சாதாரண மாங்கோ ஜூஸ் பற்றி எழுதப்
போவதில்லை. சீசன் சூடு பிடிக்கும் முன் மாங்காய்கள் மார்க்கெட்டில் வந்திருக்கும்
. கோடைக்குக் குளுமையாக ஒரு ஜூசின் ரெசிப்பி தருகிறேன் செய்து பாருங்கள்.
நல்ல முற்றிய
மாங்காயை குக்கரில் ஓரிரு நிமிஷங்கள் வேக வைக்கவும் குக்கர் இல்லாவிட்டால்
கொதிக்கும் நீரில் சிறிது நேரம் வேக வைக்கலாம் வெந்த மாங்காயின் தோலை எடுத்து
மாங்காய்ப் பல்ப்பை மட்டும் எடுத்து மிக்சியில் அடித்து கூழ் போலாக்கிக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில்
வெல்லத்தைப் போட்டு நீரில் கரையும் வரை கொதிக்க வைக்கவும் அந்த நீரை வடிகட்டி
எடுத்துக் கொள்ளவும் மாங்காய்ப் பல்ப்பை அதில் நன்றாகக் கலக்கவும் கொஞ்சம்
சுக்குப் பொடி. ஏலக்காய்ப் பொடி சிறிது வறுத்து அரைத்த சீரகப் பொடி போட்டு கலக்கவும்
. கலக்கிய ஜீசை பாட்டிலில் நிரப்பி
ஃப்ரிட்ஜில் வைக்கவும் தேவைப்பட்ட போது நீரில் கலக்கிக் குடிக்கவும்
இதில் நான் அளவு ஏதும் தரவில்லை. நாக்கின்
ருசியைக் கண்பார்த்துக் கை செய்யவேண்டும்
ஆரோக்கியமான
குளிர்பானம் /
இதையே ஜாம் மாதிரி செய்திருக்கோம். அதிலேயே குளிர்ந்த நீர் விட்டு ஜூஸாகவும் குடித்திருக்கோம். எங்க வீட்டிலே இது அடிக்கடி பண்ணுவது உண்டு. இப்போத் தான் நாலைந்து வருஷமாக மாம்பழமே வாங்கறது இல்லை. செங்காயாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். சென்னையில் எல்லாம் ஒட்டு மாங்காய்னு சொல்றாங்க அந்த மாங்காயோ அல்லது மதுரைப்பக்கம் கல்லாமைனு சொல்வோம், அந்த மாங்காயிலோ பண்ணினால் நன்றாக இருக்கும். இந்த வகை மாங்காயில் புளிப்புக் குறைச்சலாக இருக்கும்.
ReplyDeleteசெய்து பார்க்கிறோம் ஐயா...
ReplyDeleteஏனோ எனக்கு மாம்பழ ஜூஸ் பிடிப்பதில்லை! முற்றிய மாங்காய் கிடைத்தால் காரமாக, வாசனையாக வயிற்றைப்பற்றிக் கவலைப்படாமல் தொக்கு செய்து விடுவோம்! :)))
ReplyDeleteஆரோக்கியமான குளிர்பானம் குளிர்ச்சியாக ..அருமை..!
ReplyDeleteநல்ல பானம் தான். ஆசைப்படலாம்.தாசில் பண்ண>}}
ReplyDeleteஸ்ரீராம்....பார்த்து,பார்த்துச் சாப்பிடவும். மாங்காயும் வயிறும் சண்டை போட்டுக் கொள்ளாமல் இருக்கட்டும்.
ReplyDeleteகோடைக்கு ஏற்ற இதமான பானம். ஆரோக்கியமான குளிர் பானத்தை எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமாம்பழம் சூடு தானே ஐயா? கோடை காலத்தில் மாம்பழ ஜூஸ் குடித்தால் இன்னும் உடல் உஷ்ணம் அதிகம் ஆகும் தானே!
ReplyDeleteநல்ல ஜூஸ்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete@ஸ்கூல் பையன், அளவோடு சாப்பிட்டால் சூடெல்லாம் இல்லை. அதோடு மாம்பழம் சாப்பிடும் நாளில் மட்டும் கட்டாயமாய்ப்பால் குடிக்க வேண்டும். மாம்பழத்தையே பாலில் கலந்தும் சாப்பிடலாம். சூடெல்லாம் வராது. ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் என்னும் கணக்கில் சாப்பிடலாம். :)))))
ReplyDeleteதொடர
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
எழிமையான முறை.. செய்து பார்க்கிறோம் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கோடைக்கு ஏற்ற பானம்
ReplyDeleteநன்றி ஐயா
வெல்லம் சேர்க்காமல் செய்து பார்த்தேன். நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநல்ல முற்றிய மாங்காயா? அப்போ நன்குபழுத்த மாம்பழம் வேண்டாமா? >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete