Friday, 23 September 2016

வெண்டைக்காய் இஜுரு......!?


                                              வெண்டைக்காய் இஜுரு .......!?
                                               ------------------------------------


பூவையின் எண்ணங்களில் பதிவு எழுதி நாட்களாகி விட்டன. இந்த உணவு , பதார்த்தம்  என்ன வேண்டுமானாலும்  பெயர் சூட்டிக் கொள்ளுங்கள். என்  மனைவி இது ஒரு ஆந்திர உணவுவகை என்றும் வெண்டைக்காய் இஜுரு என்று ஏதோ சொன்னாள். பெயரா முக்கியம் செய்முறை தருகிறேன் செய்து பார்த்து பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்செய்முறையில் நான் அளவுகள் கொடுக்கப் போவதில்லை. அவரவர் சுவைக்கேற்ப  எடுத்துக் கொள்ளலாம் ஆனால் கொடுத்திருக்கும் பொருள்கள் அவசியம் வேண்டும் வெண்டைக்காய்  எண்ணைய் வெங்காயம் தக்காளி இஞ்சிப் பூண்டு விழுதுபட்டை லவங்கம் ஏலக்காய்   தேங்காய்  முந்திரிப் பருப்பு, மிளகாய்ப் பொடி, மஞ்சப்பொடி, உப்பு கொத்தமல்லிப் பொடி .
 செய்முறை.
 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்  தக்காளியையும் நறுக்கிக் கொள்ளவும் வெண்டைக்காயை சுமார் முக்கால் அங்குலத்திலிருந்து, ஒரு அங்குல நீளத்துக்குள் நறுக்கிக் கொள்ளவும் 
கடாயில் எண்ணையை தாராளமாக ஊற்றி  வெண்டைக்காயை நன்கு வதக்கிக் கொள்ளவும் வெண்டைகாயை எடுத்து தனியே வைத்து, பட்டை லவங்கம்இஞ்சிப் பூண்டு விழுது விட்டு அதே காடாயில் எண்ணையில் பொறிக்கவும்  பின்  அதிலேயே  வெங்காயத்தை வதக்கவும் பொன்னிறமாக வதக்கிய வெங்காயத்தில் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சப்பொடி தனியாப்பொடி மிளகாய்ப்பொடி போட்டுக் கிளறவும் அதன் பின் தண்ணீர்  தேவையான அளவு ஊற்றி கொதிக்க விடவும் அந்த வதக்கிய வெங்காய தக்காளி கரைசலில்  தேங்காய் முந்திரிப் பருப்பு அரைத்து விடவும்இந்தக் கரைசலில் தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும்  பச்சை வாசனை போனபின் வெண்டைக்காய் துண்டுகளைப் போடவும் உப்பு காரம் வெண்டைக்காயில் பிடித்தவுடன் இறக்கி வைக்கவும்

ருசி பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்       






20 comments:

  1. நேத்திக்குத் தான் வெங்கடேஷ் பட்டின் சமையல் சமையல் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் இதைக் காட்டினார்கள். கூடவே டொமெட்டோ பப்பு மற்றும் இரு சமையல் குறிப்புகள், ஒண்ணு கத்தரிக்காயில்! :)

    ReplyDelete
  2. செய்து கொடுக்கச்சொல்கிறேன்.

    ReplyDelete
  3. எல்லாவற்றிலும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி எடுத்தால் தனிச் சுவைதான். 15 நாட்கள் போகட்டும். செய்து பார்த்து விடுவோம்!

    ReplyDelete
  4. நீங்கள் எப்போதிலிருந்து சமையல்புலி ஆனீர்கள் என ஆச்சரியப்பட்டேன். ஓ! இது உங்கள் துணைவியின் கைவண்ணமா!
    வெண்டைக்காய் சங்கதி படிக்கும்போதே சுவாரஸ்யம் தட்டுகிறது. எங்கள் வீட்டில் வெண்டைக்காய்ப் ப்ரியன் நான் மட்டும்தான். அதனால் வெண்டைக்காயால் மைனாரிட்டி சப்போர்ட்டில் எங்கள் வீட்டில் கோலோச்சமுடிவதில்லை!

    ReplyDelete
  5. இதை எங்கள் வீட்டில் செய்வார்கள் . நல்ல குறிப்பு !

    ReplyDelete
  6. @ கீதா சாம்பசிவம்
    நேற்று என் மனைவி செய்தாள் நன்றாய் இருந்தது வெங்கடேஷ் பட்டின் சமையல் குறிப்பிலிருந்தா தெரியாது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  7. @ டாக்டர் கந்தசாமி
    எனக்குப் பிடித்திருந்தது செய்து கொடுக்கச் சொல்லுங்கள் நீங்களும் ருசிப்பீர்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  8. @ ஸ்ரீ ராம்
    உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் எனக்கு இந்த இஞ்சிப் பூண்டு வாசனையே பிடிக்காது அது தெரிந்தே அவற்றை மிகக் குறைந்த அளவில் உபயோகிப்பாள் என்மனைவி. அது என்ன 15 நாள். வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  9. @ ஏகாந்தன்
    ஒன்ஸ் இன் எ வே வெண்டைக்காய் செய்து தரக் கேளுங்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. @ மோகன் ஜி
    என் மனைவியும் இது ஆந்திர சமையல் என்றாள் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete
  11. செம டேஸ்ட் ,வெண்டைக் காய்னா எனக்கு உசுரு:)

    ReplyDelete
  12. செய்து பார்த்து விடுகிறேன்.

    ReplyDelete
  13. @ பகவான் ஜி
    வெண்டைக்காயை இப்படியும் செய்து பாருங்களேன் டேஸ் தூக்கும் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete
  14. @கோமதி அரசு
    செய்து பாருங்கள் ருசிப்பீர்கள் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  15. பெயர்தான் வித்தியாசமாக உள்ளது ஐயா.

    ReplyDelete
  16. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அதுதான் எழுதி இருந்தேனே ஆந்திரப் பெயர் என்று வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  17. ருசி மிகவும் பிடித்திருக்கிறது சார்,,,,/

    ReplyDelete
  18. ஐயா இது அரபிதான் சவூதி அரேபியா நாட்டின் ரியாத் என்ற இடத்திலிருக்கும் வாட்டர் பைப் கம்பெனியின் விளம்பரம். அதை இதில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை மேலும் இது பைப் பிட்டிங் கம்பெனிகள் கண்டால் பலன் பெறலாம் காரணம் உற்பத்தி செய்யும் விடயங்கள் பற்றி நிறைய செய்திகள் உள்ளன.

    எனக்கும், தங்களுக்கும் அவசியமற்றது ஆகவே இதனைக்குறித்து மனதில் குழப்பம் வேண்டாம்.

    அன்புடன்
    கில்லர்ஜி தேவகோட்டை

    ReplyDelete
  19. நீங்கள் கொடுக்கும் சமையல் ரெசிபிகளை பார்க்கும் போது உங்கள் வீட்டில் நீங்கள்தான் சமையல் மாஸ்டராக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறதே? ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete