Showing posts with label சமையல் குறிப்புகள்- காஃபி..... Show all posts
Showing posts with label சமையல் குறிப்புகள்- காஃபி..... Show all posts

Wednesday, 3 April 2013

அடிப்படை சமையல்

                                            
                                  அடிப்படை சமையல்.
                                  ------------------------------
இது ஒரு புதிய வலைப் பூ.பெரும்பாலான வலைப் பூக்களில் சமையலும் சில பதிவுகளாக வருகிறது. ஆனால் இந்த வலைப்பூவில் சமையலைப் பற்றிய பதிவுகள் மட்டுமே வரும். ஏதோ ஒரு உந்துதலில் ஆரம்பிக்கிறேன். இதன் பின்னணியில் எனக்கு உதவி செய்ய என் மனைவி இருக்கிறாள் என்ற தைரியம்தான். இதன் அடிநாதமே இதை வாசிப்பவர்களுக்கு ஏதும் தெரியாது என்ற எண்ணம்தான். ( assumption ) தெரிந்தவர்களும் படிக்கலாம். குறைகள் இருந்தால் தாராளமாகத் தெரியப் படுத்தலாம். cooking is an ever learning process.

முதலில்  சில முன் குறிப்புகள். gas அடுப்பில் சமைக்கும்போது கவனம் மிகவும் தேவை. பர்னர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். வேலை துவங்கும்போது காஸை திறந்தால் போதும். வேலை முடிந்தவுடன். காஸை மூடிவிடவும். இண்டக்‌ஷன் ஸ்டவ் -ஆக இருந்தால், அது உபயோகிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும். தேவை இல்லாதபோது ஸ்டவ்வை அணைத்து விடவும்.

முதலில் காஃபி , மற்றும் டீ போடும் முறைகளைப் பார்ப்போம். காஃபிகுடிப்பவர்கள் பல ரகம். காப்பி காய்ச்சுபவர்களும் இருக்கிறார்கள். டிகிரி காஃபி தேவைப் படுபவர்களும் இருக்கிறார்கள். காஃபி போட முக்கியமாகத் தேவைப்படுவது காஃபி பௌடர், நல்ல பால், சர்க்கரை. and of course water..!காஃபி நன்றாக திக்காக இருக்கவேண்டும் என்பவர்கள், சிக்கரி அதிகம் கலந்த காஃபித் தூளை உபயோகிக்கிறார்கள். சிக்கரியே கலக்காத ப்யூர் காஃபி நீர்த்தது போல் இருக்கும். என் பரிந்துரை. புதிதாக காஃபிக் கொட்டையை வறுத்து அரைக்கப்பட்ட காஃபித் தூளில் சுமார் 15% சிக்கரி கலக்கலாம். நன்றாக இருக்கும். டிகிரி காஃபிக்கு நல்ல ஃபில்டர் தேவை. ஃபில்டரில் துவாரங்கள் பெரிதாக இருந்தால் நீரில் காஃபி இறங்காது. இரண்டு டம்ளர் காஃபி போட ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து ஃபில்டரில் நான்கு டீஸ்பூன் காஃபி தூள் போட்டு  ஊற்றவும். அது  இறங்கும் நேரத்தில் நல்ல பாலைக் கொதிக்க வைத்துக் கொள்ளவும் பிறகென்ன. அவரவர் ருசிக்கு ஏற்றார்போல் டிகாக்க்ஷனுடன் பாலும் சர்க்கரையும் சேர்க்கவும். லேசான கசப்புடன் இருக்கும் சூடான காஃபி குடித்துவிட்டுச் சொல்லுங்கள்.  ‘பேஷ், பேஷ், ஜோர் ஜோர்.”
மீதி அடுத்தபதிவில்...!