இதற்கு என்ன பெயர் வைக்கலாம்...?
--------------------------------------------------
பூவையின் எண்ணங்களில் பதிவிட்டுச் சில காலம் ஆகிறது. அதையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும் அல்லவா.ஒரு வித்தியாசமான ரெசிபி என்று எழுதினால் அது எல்லோருகும் தெரிந்ததாயிருக்கிறது. இருந்தாலும் இது சாதாரணமாக இடப்படும் ரெசிபி போல் இருக்காது என்ற நம்பிக்கையில்,
வீடுகளில் பொதுவாக சமைக்கும்போது ஒரு சாம்பார். ஒரு ரசம் ஒரு
பொறியல் என்று காய்கறிகளின் மாற்றத்தோடு வரும் ஒரு மாற்றத்துக்காக இதை சமைத்துப்
பார்க்கலாமே.இதற்குப் பெயர் நீங்களே சூட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான்
பதிவிட்ட்பின் பலரது வீடுகளிலும் சிறிய மாற்றங்களுடன் இது சமைக்கப் பட்டிருக்கும்
தேவையான பொருட்கள்
தக்காளி ,வெங்காயம் இஞ்சிப்பூண்டு விழுது, பட்டை, லவங்கம்.ஏலக்காய்,
அளவுகள் நான் கூறப்போவதில்லை. அவரவர் ருசிக்கேற்ப உபயோகிக்க வேண்டியது. மஞ்சப்பொடி.
மிளகாய்ப் பொடி, தாளிக்கவும் வதக்கவும் எண்ணை, உப்பு, அரிசி.
.
செய்முறை
முதலில் அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை
நறுக்கிக் கொள்ளவும் (மீடியம் சைசில்). தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
குக்கரில் எண்ணை விட்டு தாளிக்கும் போது பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும் அதில்
வெங்காயத்தை வதக்கவும் வதக்கிய வெங்காயத்தில் சிறிது இஞ்சிப் பூண்டு விழுது
சேர்த்து வதக்கவும் அதன் பின் அரைத்து வைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும்
இப்படி வதக்கியபின் அதில் கழுவி வைத்த
அரிசியைச் சேர்த்துக் கிளறவும் (ஏறத்தாழ வறுபடும் அளவுக்கு ) நன்றாக மிக்ஸ் ஆனவுடன் ஒரு கப் அரிசிக்கு இரண்டு
கப் என்று நீர் ஊற்றி தேவையான அளவு உப்பு
மஞ்சப்பொடி மிளகாய்ப் பொடி சேர்த்துக் குக்கரை மூடி இரண்டோ மூன்றோ விசில் வரும்
வரை வேக விடவும்.
வெந்தபின் எடுத்துப் பார்த்தால் ரெடி டு ஈட் சாதம் ரெடி.
வெங்காயத்தை வதக்கும்போது விரும்பினால் காரட் பீன்ஸ் போன்ற
காய்கறிகளையும் சேர்க்கலாம். விரும்பினால் சிறிது புதினாவையும் அரைத்த்ச்
சேர்க்கலாம் இதற்கு உடன் சாப்பிட( தொட்டுக்க) தயிரில் பொடியாக நறுக்கிய வெங்காயம்
சேர்த்து வைக்கலாம் செய்து பார்த்துச் சொல்லுங்கள். என்ன பெயரில் அழைக்கலாம்
என்றும் தெரியப் படுத்தவும்