இதற்கு என்ன பெயர் வைக்கலாம்...?
--------------------------------------------------
பூவையின் எண்ணங்களில் பதிவிட்டுச் சில காலம் ஆகிறது. அதையும் அவ்வப்போது கவனிக்க வேண்டும் அல்லவா.ஒரு வித்தியாசமான ரெசிபி என்று எழுதினால் அது எல்லோருகும் தெரிந்ததாயிருக்கிறது. இருந்தாலும் இது சாதாரணமாக இடப்படும் ரெசிபி போல் இருக்காது என்ற நம்பிக்கையில்,
வீடுகளில் பொதுவாக சமைக்கும்போது ஒரு சாம்பார். ஒரு ரசம் ஒரு
பொறியல் என்று காய்கறிகளின் மாற்றத்தோடு வரும் ஒரு மாற்றத்துக்காக இதை சமைத்துப்
பார்க்கலாமே.இதற்குப் பெயர் நீங்களே சூட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான்
பதிவிட்ட்பின் பலரது வீடுகளிலும் சிறிய மாற்றங்களுடன் இது சமைக்கப் பட்டிருக்கும்
தேவையான பொருட்கள்
தக்காளி ,வெங்காயம் இஞ்சிப்பூண்டு விழுது, பட்டை, லவங்கம்.ஏலக்காய்,
அளவுகள் நான் கூறப்போவதில்லை. அவரவர் ருசிக்கேற்ப உபயோகிக்க வேண்டியது. மஞ்சப்பொடி.
மிளகாய்ப் பொடி, தாளிக்கவும் வதக்கவும் எண்ணை, உப்பு, அரிசி.
.
செய்முறை
முதலில் அரிசியைக் கழுவி வைத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை
நறுக்கிக் கொள்ளவும் (மீடியம் சைசில்). தக்காளியை விழுதாக அரைத்துக் கொள்ளவும்
குக்கரில் எண்ணை விட்டு தாளிக்கும் போது பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும் அதில்
வெங்காயத்தை வதக்கவும் வதக்கிய வெங்காயத்தில் சிறிது இஞ்சிப் பூண்டு விழுது
சேர்த்து வதக்கவும் அதன் பின் அரைத்து வைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கவும்
இப்படி வதக்கியபின் அதில் கழுவி வைத்த
அரிசியைச் சேர்த்துக் கிளறவும் (ஏறத்தாழ வறுபடும் அளவுக்கு ) நன்றாக மிக்ஸ் ஆனவுடன் ஒரு கப் அரிசிக்கு இரண்டு
கப் என்று நீர் ஊற்றி தேவையான அளவு உப்பு
மஞ்சப்பொடி மிளகாய்ப் பொடி சேர்த்துக் குக்கரை மூடி இரண்டோ மூன்றோ விசில் வரும்
வரை வேக விடவும்.
வெந்தபின் எடுத்துப் பார்த்தால் ரெடி டு ஈட் சாதம் ரெடி.
வெங்காயத்தை வதக்கும்போது விரும்பினால் காரட் பீன்ஸ் போன்ற
காய்கறிகளையும் சேர்க்கலாம். விரும்பினால் சிறிது புதினாவையும் அரைத்த்ச்
சேர்க்கலாம் இதற்கு உடன் சாப்பிட( தொட்டுக்க) தயிரில் பொடியாக நறுக்கிய வெங்காயம்
சேர்த்து வைக்கலாம் செய்து பார்த்துச் சொல்லுங்கள். என்ன பெயரில் அழைக்கலாம்
என்றும் தெரியப் படுத்தவும்
ஃப்ரைட் ரைஸ், அல்லது மசாலா சாதம். பொதுவாக எல்லோர் வீடுகளிலும் மாறுதலுக்குச் செய்வது தான். கொண்டைக்கடலை போட்டுக் கூடச் செய்யலாம். வெறும் பட்டாணி மட்டும் போட்டும் செய்யலாம். எங்க வீடுகளில் நீர் சேர்க்காமல் தக்காளி விழுதில் இருக்கும் நீரோடு தேங்காய்ப் பால் கொஞ்சம் ஊற்றி அரிசியை வேக வைப்பது உண்டு. :))))
ReplyDeleteஇதை வவ்வேறு விதங்களில் செய்வதுண்டு. ரெடிமேட் சாம்பார் சாதம், தக்காளி சாதம், எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்! :))))
ReplyDeleteசகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சொல்வது போல் இது செய்வதுண்டு சார்! கொண்டைக்க்டலை, பட்டாணி போட்டும் செய்வதுண்டு.....அவர்கள் சொல்லுவது போலவே...தேங்காய் பால் சேர்த்தும்...சேர்க்காமலும் கூட......நாங்கள் மசாலா ரைஸ் என்று சொல்வதுண்டு.....
ReplyDeleteஃப்ரைட் ரைஸ் வேறு, பிரியாணி வேறு, தக்காளி சாதம் வேறு...எல்லாம் கலந்த கலவையாதலால்.....சிம்பிள் மசாலா ரைஸ்
fried rice is different, I know. அரிசியைச் சோறாக்கிவிட்டுப் பின்னர் கலவையில் சேர்த்துக்கலப்பதே ஃப்ரைட் ரைஸ். சைனீஸ் ஃபரைட் ரைஸ் அடிக்கடி செய்வதுண்டு, முன்னெல்லாம். :)))) இப்போல்லாம் இங்கே அதற்கேற்ற பொருட்களும் கிடைப்பதில்லை. செய்தாலும் சாப்பிட ஆளில்லை. :)))
ReplyDeleteதக்காளி சாதம் செய்முறை அருமை்
ReplyDeleteஎன்ன பெயர் வைத்தாலும் சரி, ஏற்றுக்கொள்கிறோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவண்ணமிகு வலைச் சரத்தில்
இன்று!
வாசமிகு பூ வானீர்!
அருந்தேன் அமுதமென அற்புத
படைப்பினை படைத்தமைக்கு!
வாழ்த்தும் நெஞ்சம்;
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR
வணக்கம்!
ReplyDeleteஎனது "நாராய் இளந் நாராய்"
கவிதைக்கு கருத்திட தங்களை வாராய் என அழைகின்றேன் வாருங்கள்§
(18/12/2014) நன்றி!
புதுவை வேலு
ReplyDeleteவணக்கம்!
பொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.
ReplyDeleteபுத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
குஸ்கான்னு சொல்லலாம்
ReplyDeleteகாய்கறி சேர்த்தா பிரியாணின்னு சொல்லலாம் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)
செய்முறை நன்று.
ReplyDelete"வெங்காய தக்காளி சாதம்" என்று பெயர் வைக்கலாம் ... பெயர் வைத்த உடனே இதற்கான "கார்ப்பரேட் உரிமை" யையும் பதிவு செய்து விட வேண்டும். இல்லைனா எவனாவது வக்காளி இது தக்காளி சாதம் .. என்னோடதுன்னுகிட்டு வந்துடப் போறான் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete