பன்னீர் போண்டாவும் மசாலாவும்
------------------------------------------------------
பூவையின் எண்ணங்கள் தளமே என் கவனத்தில் இல்லாமல் சவலைக் குழந்தை மாதிரி இருந்தது. பலரும் அவர்களது மெயின் தளங்களிலேயே சமையல் குறிப்புகள் தருகிறார்கள்சமையலுக்கென்று தனித் தளம் வைத்துக் கொண்டிருக்கும் நான் அப்படி செய்ய விரும்பவில்லை. திடீர் ஞானோதயம் வந்து பதிவிடுகிறேன் முதலில் பன்னீர் போண்டா செய் முறையைக் கூறுகிறேன் செய்வதற்கு எளிமையானது இது
கொஞ்சம் கடலை மாவு ( வழக்கம் போல் அளவுகள் கொடுக்கவில்லை.) செய்யும் குவாண்டிடியைப் பொறுத்து) எடுத்துக் கொள்ளுங்கள் சிறிது அரிசி மாவு, சிறிது கார்ன் மாவு மிளகாய்த் தூள் உப்பு சீரகப் பொடி, பெருங்காயத்தூள் இவற்றைக் கலந்து சிறிது நீர் ஊற்றிகொஞ்சம் கெட்டியாகவே பஜ்ஜிக்கு செய்யும் பதத்தில் தயார் செய்யவும்
பன்னீரை முக்கால் அங்குல க்யூப்களாக வெட்டி எடுத்துக் கொண்டு அதை இந்த பிசைந்த கலவையில் போட்டு சிறிது நேரம் ஊற விடவும் ஒரு கடாயில் தேவையான எண்ணை ஊற்றி இந்த மாவில் ஊறிய பன்னீரைப் பொரித்து எடுக்கவும் பன்னீர் போண்டா ரெடி
ஒரு கடாயில் சிறிது எண்ணை ஊற்றி தாளிதப் பொருட்களுடன் நன்கு பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது இஞ்சிப் பூண்டு விழுது சிறிது கரம் மசாலா உப்பு போட்டுக் கிளரவும் நன்றாகக் கிளரிய விழுதில் பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்க்கவும் மிகவும் நீராக இல்லாமலும் மிகவும் கெட்டியாக இல்லாமலும் இருக்கும் மாதிரி நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும் இந்தக் கலவையில் பன்னீர் போண்டாவைப் போட்டுக் கலக்கவும்
பன்னீர் போண்டாவாகவோ க்ரேவி கலந்தோ அவரவர் விருப்பபடி உண்டு மகிழலாம்
ரூமில் நண்பர்களுடன் செய்து பார்க்க முயற்சிக்கின்றேன் ஐயா.
ReplyDeleteநானும் சமையல் பதிவு எழுதலாம் என்று நினைக்கின்றேன் ஐயா ஆனால் தெரியாதே....
ஈஸியா இருக்கே....
ReplyDeleteஈஸியா இருக்கே....
ReplyDeleteநல்ல டிஷ் மாதிரி தெரியுது.
ReplyDeleteபனீர் கோஃப்தா என்போம். இது அடிக்கடி செய்வது தான். நான் சமையலுக்கெனத் தனிப் பதிவு வைச்சிருக்கேன். ஆனாலும் அங்கே யாரும் வரதில்லை. சமைச்ச சாப்பாடு போணி ஆவதில்லை என்பதால் எண்ணங்கள் தளத்திலேயே போட்டுடறேன். :))))) எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!
ReplyDeleteஇதுக்குத் தக்காளியை முழுதாகப் போடாமல் தக்காளி ப்யூரி எனப்படும் தக்காளி விழுதைத் தான் சேர்ப்போம். ப்யூரியும் வீட்டிலேயே செய்து வைச்சுக்கலாம். சீக்கிரம் பயன்படுத்த வேண்டும்.
ReplyDeleteசெய்து பார்க்கிறோம் ஐயா... நன்றி...
ReplyDeleteகில்லர்ஜி,
ReplyDeleteஸ்ரீராம்.
டாக்டர் கந்தசாமி,
கீதா சாம்பசிவம்,
திண்டுக்கல் தனபாலன்
வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி
பனீர் க்யூப்ஸ் வாங்கி வச்சுருக்கேன். இந்த வீக் எண்டில் செஞ்சு பார்க்கிறேன். நன்றி.
ReplyDeleteசார் இதுவும் பன்னீர் மஞ்சூரியன் க்ரேவி என்று..கிட்டத்தட்ட....கடலைமாவு தவிர்த்தால்...பின்னர் வெங்காயம் தக்காளி பூண்டு வதக்கி அரைத்து பின்னர் சிறிது வதக்கி நீங்கள் சொல்லியபடி செய்தால் க்ரேவி இன்னும் நிறைய வரும்....
ReplyDeleteபன்னீர் போண்டா என்று நாங்கள் செய்வது...பன்னீரை நன்றாக உதிர்த்துக் கொண்டு அதில் பச்சைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சி எல்லாம் கலந்து உருளைக்கிழங்கு பூர்ணம் செய்வது போல் தாளித்துச் சேர்த்து பன்னீரை உருண்டைகளாக உருட்டி கடலை மாவு கரைத்து அதில் தோய்த்து உருளைக் கிழங்கு போண்டோ செய்வது போல் செய்வதுண்டு சார்...அதுவும் நன்றாக இருக்கும்..
கீதா