Saturday, 13 June 2015

தோசை இது ஒருவிதம்


                                             தோசைஇது ஒருவிதம்
                                              ---------------------------------

இனி பூவையின் எண்ணங்கள் தளத்தில் தொடர்ந்து இடுகைகள் வரும் . இது ஒரு பிரசவ வைராக்கியம் ஆகக் கூடாது என்று எண்ணுகிறேன் தோசைகள் பற்றிய பதிவுகள்பலரும் எழுதி இருக்கிறார்கள். என் பதிவில் இது ஒரு வித்தியாசமான தோசை என்று எண்ணுகிறேன்
தோசைக்குத் தேவையான பொருட்கள்பச்சரிசி , புழுங்கல் அரிசி உளுத்தம் பருப்பு இவை இரண்டுக்கு ஒன்றுக்கு அரை என்னும் விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் இத்துடன் ஒரு கைப்பிடி கடலைப் பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்புஇரண்டு கைப்பிடி கெட்டி அவல், சிறிது வெந்தயம் இவற்றை நன்றாகக் கழுவி ஊறவைக்க வேண்டும்  ஊறின பின் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் தோசை எளிதாக வார்க்கும் அளவுக்கு உப்பு சேர்த்துக் கரைத்துக் கொள்ள வேண்டும் பிறகு நான் ஸ்டிக் தவாவில் தோசை வார்த்து எடுக்கவேண்டும் தோசை மிகவும் மெலிசாக வார்க்கக் கூடாது.
தோசை செய்து பார்த்துக் கருத்துக் கூறுங்களேன்

11 comments:

  1. சார் இந்தத் தோசை ஸ்பாஞ்ச் தோசை என்றும், வெந்தயம் சிறிது அதிகம் சேர்த்து வெந்தய தோசை என்றும், பன் தோசை என்றும், சொல்லபடுகின்றது....இதைச் செய்வதுண்டு இழுத்துத் தேய்க்காமல்....கொஞ்சம் தடிமனாக....இரும்புக் கல்லிலேயே நன்றாக வரும் சார். செய்வதுண்டு....ஆனால் உடனே செய்வதில்லை...கொஞ்ச நேரம் வைத்துவிட்டு செய்தால் மிகவும் ஸ்பாஞ்சாக வரும்....நான் சொல்லுவது சரியா சார்?

    -கீதா

    ReplyDelete
  2. பெசரெட் போலவும், அடை போலவும் மயங்க வைக்கும் தோசை!

    ReplyDelete
  3. தோசை நூறு வகை..எல்லோருக்குமே தோசை என்றால் ஒரு ஆசை இருக்கத்தான் செய்கிறது

    ReplyDelete
  4. இந்த ஸ்பாஞ்ச் தோசைஎனக்கு ரொம்ப பிடித்தம் ,என்ன கஷ்டம்னா இது வீட்டிலும் கிடைப்பதில்லை ,வெளியிலும் கிடைப்பதில்லை :)

    ReplyDelete
  5. ஒரு பாட்டு நினைவிற்கு வருகிறது.
    நிலவைக் காட்டி அம்மா தன் குழந்தைக்கு தோசை ஊட்டும்போது பாடுவது போல் அமைந்தது.

    தோசையம்மா தோசை
    அம்மா சுட்ட தோசை
    அப்பாவுக்கு மூணு
    அம்மாவுக்கு ரெண்டு
    எனக்கு ஒண்ணு
    உனக்கு ஒண்ணுமில்லை,
    போ.

    ReplyDelete
  6. வெந்தயம் சேர்த்தால் மொருமொரு தோசை சற்று அதிகமாகவே வரும்...

    ReplyDelete
  7. ம்ம்ம்ம், இந்த முறையில் செய்திருக்கேன். ஆனால் எங்க வீட்டில் போணி ஆகவில்லை. :) வெங்காயத் துவையல் இதற்குச் சரியான ஜோடி என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா !ஆமா அப்போ இது புளிக்க வைப்பதில்லையா ? அடை என்று சொல்வதும் இதை தானா ?தோசை எனக்கு நன்றாகப் பிடிக்கும். ட்ரை பண்ணுகிறேன். நன்றி ஐயா. வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  9. அரிசி + து பருப்பு சேர்த்தும்,அவல் + அரிசி + ரவை சேர்த்தும். என தனித்தனியாகவும், அரிசி + பருப்புகள் என அடையாகவும் செய்வோம். இது வேற மாதிரி இருக்கு செய்து பார்க்கிறேன் ஐயா.நன்றி

    ReplyDelete
  10. ஐயா, தாங்கள் திரு கில்லர்ஜி அவர்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும், தங்களது ஜி-மெயிலில் மேலும் தகவல்கள் அனுப்பியுள்ளேன். நன்றி.

    ReplyDelete
  11. தோசை மீது ஆசை பட வைத்து விட்டீர்கள் ... ஆனால் வீட்டில் செய்து கேட்டால் பூசை விழுமோ என கொஞ்சம் பயமாக இருக்கிறது ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete