Monday, 27 July 2015

காராமணி புளிக்குழம்பு


                                      காராமணி புளிக்குழம்பு
                                      ----------------------------------


ட்டைப் பயறு புளிக்குழம்பு
தினமும் பருப்புப் போட்டு சாம்பார் ரசம் என்று வைப்பதில் இருந்து கொஞ்சம் விலகி ஒரு புளிக்குழம்பு செய்முறை இம்முறை
.
தேவையான பொருட்கள்
இரண்டு கைப்பிடி அளவு தட்டைப் பயறு (காராமணி) சிறிது புளி கொஞ்சம் தேங்காய் மல்லித் தூள், மிளகாய்த்தூள் மஞ்சத்தூள் கருவேப்பிலை,  வெங்காயம்(பெரியது ஒன்று அரைக்க, அரிந்து எடுத்த வெங்காயம் சிறியது தாளிதத்தில் வறுக்க.) எண்ணை

செய்முறை
காராமணியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும் தேங்காயுடன் மல்லித் தூள், மிளகாய்த்தூள் வெங்காயம்  சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும் புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும் கடாயில் எண்ணைவிட்டுகருவேப்பிலையுடன்  தாளிக்கவும் அதில் அரிந்த வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும் அதில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய்க் கலவையையும் சேர்த்து வதக்கவும்  புளிக்கரைசலை ஊற்றி மஞ்சத்தூள் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் நன்கு கொதித்தவுடன்  அதில் வேக வைத்தக் காராமணியையும் சேர்க்கவும் நன்றாகக் கலந்து கொதித்தவுடன் இறக்கி வைக்கவும் சாதத்தில் பிசைந்து சாப்பிட குழம்பு ரெடி.
சாதத்தில் பிசைந்து சாப்பிடும்போது, சிறிது நல்லெண்ணையையை ஊற்றிக் கலந்து சாப்பிடுவது அவரவர் விருப்பம்    

12 comments:

  1. இது போன்ற அரைத்து விட்ட புளிக் குழம்பு எப்போதாவதுதான் செய்வோம்.

    ReplyDelete
  2. தேங்காய்க் கலவையை மட்டும் சேர்ப்பதில்லை...

    ReplyDelete
  3. டிடியை ஆமோதிக்கிறேன். தேங்காய்க் கலவை இல்லாமல் செய்யறது உண்டு.

    ReplyDelete
  4. தேங்காய் கலவை இல்லாமலும், வெங்காயத்தை அரைக்காமலும் செய்வோம்.
    தேங்காய் எப்போதாவது தேங்காய்+ சீரகம் சேர்த்து அரைத்து செய்வோம்.

    ReplyDelete
  5. வணக்கம்

    தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  6. நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் காராமணி என்றால் எது என்று தெரியலை..... பதிவுக்கு நன்றி !

    ReplyDelete
  7. காராமணிப் புளிக்குழம்பு இதுவரை வெங்காயம் அரைத்துவைத்ததில்லை. செய்துபார்க்கிறேன். பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. வணக்கம் !
    மன்னிக்க வேண்டும் ஐயா நான் எழுதிய வெண்பாவில் ஈற்றுச் சீர் ஓர்
    இடத்தில் "ஏன் பிறந்தேன்" என்று எழுதியதால் பிழைத்து விட்டது மறுபடியும் ஏன்வந் தேன் என்று திருத்தம் செய்து வெளியிட்டதால் தங்களின் கருத்தும் இடம்பெறாமல் போய்விட்டது தவிர வேறு காரணங்கள் எதுவும் இல்லை .இந்த வெண்பாவை முற்று முழுதாக எனது ஆசான் கி .பாரதிதாசன் ஐயா மேற்பார்வை செய்த பின்னரே வெளியிட்டும் உள்ளேன் என்பதும் குறிப்பிடத் தக்கது .மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு.

    ReplyDelete
  9. அருமையான சமையற் குறிப்பு !மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  10. ஒன்று நன்றாக தெரிகிறது. ஆண் வலைப்பதிவர்கள் பலர் சமையல் கலையில் கெட்டிக் காரர்களாய் இருகிறார்கள்

    ReplyDelete
  11. ஒன்று நன்றாக தெரிகிறது. ஆண் வலைப்பதிவர்கள் பலர் சமையல் கலையில் கெட்டிக் காரர்களாய் இருகிறார்கள்

    ReplyDelete