பெசரெட்
--------------
இன்னும் ஒரு எளிய சமையல் குறிப்பு
--------------
இன்னும் ஒரு எளிய சமையல் குறிப்பு
தோசை
வகையில் இதுவும் ஒன்று ஆந்திரா
ஸ்பெஷல் செய்வது எளிது ஒரு டம்ளர் பாசிப்பருப்புடன் இரண்டு ஸ்பூன் பச்சரிசியும் கலந்து ஊறவைத்து
அரைக்கவேண்டும் அரைக்கும் போது சிறிது இஞ்சியும்
பச்சை மிளகாயும் சேர்த்து தோசைக்கு
அரைப்பது போல் அரைத்து கொள்ளவும்
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன்
சிறிது கொத்துமல்லித் தழையும்
சேர்க்கவும் உப்பு சேர்த்து
கலக்கவும் அதன் பின்
என்ன தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும் தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி அல்லது சற்றே
உரைக்கும் சட்னி ஏதாவது அவரவர்
சுவைக்கேற்ப செய்து பார்த்து
சாப்பிடுங்கள்
புதுமையாக இருக்கும் போல செய்யச் சொல்லணும்
ReplyDeleteசூப்பர். ஆனா நான் பச்சரிசியும் பாசிப்பருப்பும் சம அளவில் சேர்ப்பேன். இதை செய்து பார்க்கிறேன். :)
ReplyDeleteஆந்திரா பெசரட், அதுவும் எம்.எல்.ஏ. பெசரட்! :) முழுப்பயறை ஊற வைச்சுச் செய்வாங்க. செய்திருக்கேன். பாதி கூட தின்ன முடியாது! :) இம்முறையிலும் செய்திருக்கேன். வெங்காயம் சேர்த்தும் சேர்க்காமலும்!
ReplyDeletehttp://geetha-sambasivam.blogspot.com/2012/08/blog-post.html
ReplyDeleteபெசர்ட்டின் சுவையே, அதில் தூவப்படும் ஏராளமான பச்சை மிளகாய்த் துண்டுகளில்தான் இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பண்டங்களில் பெசரட்டும் ஒன்று. ஹய்தராபாதில் மூன்று ஆண்டுகள் இதன் சுவையை வெவேறு ஓட்டல்களில் அனுபவித்திருக்கிறேன். இதோ இப்போது நியூஜெர்சியிலும் எல்லா இந்திய ஓட்டல்களிலும் கிடைக்கிறது.
ReplyDelete- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.
ஆகா
ReplyDeleteஇப்பொழுதே செய்து சாப்பிட்டாகவேண்டும் போல் இருக்கிறது
அடிக்கடி செய்வதுண்டு சார் பெசரெட்...பச்சை பயறிலும் செய்யலாம் இல்லையா சார்...அது போல பச்சை மிளகாயுடன் வற்றல் மிளகாயும் சம அளவில் போட்டும் செய்யலாம் இல்லையா...
ReplyDeleteகீதா
அருமை ஐயா...
ReplyDelete#அவரவர் சுவைக்கேற்ப செய்து பார்த்து சாப்பிடுங்கள்#
ReplyDeleteஎங்கள் சாய்சிலேயே விட்டதுக்கு மிக்க நன்றி :)
அருமையான பெரசெட்...
ReplyDeleteநல்ல டிபன். புரொட்டீன் உள்ளது.
ReplyDeleteஐயா, தாங்கள் தொடாத துறையே இல்லை என்பதை உணர்த்துகின்றன இவை போன்ற பதிவுகள். நன்றி.
ReplyDeleteவருகைதந்த அனைவருக்கும் நன்றி
Deleteஇது கொஞ்சம் அறியாத பதார்த்தமாயிருக்கிறது
ReplyDeleteசேர்மானக்களை படிக்க சுவை வித்தியாசமானதாக
இருக்கும் எனப் படுகிறது
செய்து பார்க்க வேண்டும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete"பெசல் தோசை" யாக இருக்குமோ என்று வந்தால் "பெசரெட்" என்று புதிதாக ஒரு பெயர் சொல்கிறீர்கள் ... இருக்கட்டும் இருக்கட்டும் ... எதுக்கும் செய்முறை விளக்கத்தை கொஞ்சம் எட்ட நின்னு எஜமானி[என் மனைவிதான் ... ஹி..ஹிஹி]காதுல போட்டு வைப்போம் ... வந்தா தோசை ... இல்லன்னா ... வழக்கம்போல பூசை .. அவ்வளவுதான். >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete