எரிசேரி
-----------
ஒன்றிலிருந்து
இன்னொன்று என்பது போல் அண்மையில் ஏஞ்செலின்
எழுதி இருந்த அவியல் லண்டன் ஸ்டைல்
என்பதைப் படித்த போது எனக்கும் என்
மனைவி செய்யும் எரிசேரி பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது ஓணம் சமயம் எங்கும் பல நாட்களுக்கு இந்த அவியல் ஓடுமாதலால்
அது குறித்து ஒரு அவெர்ஷன் என்று எழுதி இருந்தேன்
அதை ஏஞ்செல் எனக்கு அவியல் பிடிக்காது என்று புரிந்து கொண்டுள்ளார் எனக்கு அவியல் பிடிக்கும் ஆனால் எதுவும் அளவுக்கு மீறினால் அவெர்ஷந்தானே இங்கு
நான்கொடுக்கும் சமையல் குறிப்பு என் மனைவி
செய்வதை ஒத்து இருக்கும் எரிசேரி ஒரு கேரள
பதார்த்தம் வெவ்வேறு வகையில்
செய்கிறார்கள் ஆகவே இதுதான் ஆதெண்டிக்
முறை என்று கூற மாட்டேன் எரிசேரி என் மனைவி ஸ்டைல் என்றுசொல்லட்டுமா செய்து பாருங்கள் பிடித்திருக்கிறதா என்று
கூறுங்கள் முன்னுரைக்குப் பின் இப்போது
செய்முறை
வழக்கம்
போல் அளவுகள்குறிக்க வில்லை அவரவர் சுவைக்கு ஏற்ப என எடுத்துக் கொள்ளலாம் இது ஒரு
எளிய செய்முறை
சிறிது துவரம்பருப்போடு சேனை கிழங்கை ( தோல்
சீவி நறுக்கியது ) வேகவைக்கவும் அதில்
சிறிது தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய்
சேர்த்து அரைத்ததைச் சேர்க்கவும் உப்பு போட மறக்க வேண்டாம் கொதித்து வந்த கூட்டில் சிறிது கடுகு உளுத்தம் பருப்பு தேங்காய் துருவியது சேர்த்து
தாளிக்கவும் எரிசேரி மனைவி ஸ்டைல் ரெடி
பலரும் எரிசேரி இப்படி அல்ல என்றெல்லாம் சொல்லலாம் இது ஸ்பெஷல்
செய்முறை எளிது..
ReplyDeleteஆனால் இங்கே சேனைக்கிழங்கு கிடைப்பது அரிது..
நல்ல பயனுள்ள குறிப்பு..
சேனையும் வாழைக்காயும் சேர்த்தும் சமைப்பதுண்டு வருகைக்கு நன்றி சார்
Deleteபருப்புச் சேர்த்தது இல்லை. பருப்புச் சேர்த்தால் மொளகூட்டல் என்போம். அதோடு எரிசேரிக்கு நாங்க மிளகு வைப்போம்.
ReplyDeleteஇதுதான் ஆதெண்டிக் எரிசேரி என்று சொல்லவில்லையே சமைப்பது ருசியாக இருந்தது பகிர்ந்துவிட்டேன் நன்றி மேம்
DeleteGood.
ReplyDeleteThanks sir
Delete...சரியான சமயம் பார்த்து கூறினால், என் வீட்டிலும் இதை முயற்சிப்பார்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteஇராய செல்லப்பா (இன்று நியூ ஆர்லியன்ஸ்)
என்ன செய்வது என்று தலையைபொ பிய்த்துக் கொண்டிருக்கும் நேரமே சரியான சமயமோ நன்றி சார்
Deleteசெய்து பார்க்கிறோம் ஐயா... நன்றி...
ReplyDeleteசெய்து பார்த்து கூறுங்கள் ருசித்தீர்களா என்று நன்றி டிடி
Delete..மிளகு வைத்தால்தான் எரிசேரி.
ReplyDeleteஇதுவும் ஒருவகை எரிசேரிதானேநன்றி ஸ்ரீ
Deleteநன்றி ஐயா
ReplyDeleteவருகைக்கு நான் அல்லவா நன்றி கூற வேண்டும்
Deletelets try
ReplyDeleteட்ரை இட் ப்ளீஸ்
Deleteநல்லா இருக்கும் போலிருக்கே சார் !
ReplyDeleteஎனக்குப் பிடித்தது சார்
Deleteதேங்காய் கொஞ்சம் அதிகமாகவும், மிளகும் வேண்டும் எரிசேரிக்கு. இதெல்லாம் எங்கே? சமையல் குறிப்பு கேட்கும்போது மிஸ் பண்ணிவிட்டீர்களான்னு கேட்க ஆசை. நீங்கதான் ஒரே போடாக, இது ஸ்பெஷல் எரிசேரின்னுட்டீங்களே.
ReplyDeleteஎனக்குத் தெரியும் இதுமாதிரி கேள்வி வரும் என்று சமைத்ததுசுவையாய் இருக்கவே பதிவிட்டேன் பெயரில் என்ன இருக்கிறது சார்
Deleteநல்லா இருக்கும் போலிருக்கே சார் !
ReplyDeleteநன்றி சார்
Deleteஇதுவரை கேள்விப் பட்டதில்லை.சொல்லிப் பார்க்கிறேன்.
ReplyDeleteஇதுவும் கடந்து போகும் சமைத்துப் பாருங்கள்
Deleteஎனக்கும் பிடித்த ஐயிட்டம்
ReplyDeleteஎப்படியும் மாதம் இரண்டுமுறை
இது எங்கள் வீட்டில் அரங்கேறிவிடும்
செய்முறை கொஞ்சம் வித்தியாசம் இருக்கும்
வாழ்த்துக்களுடன்...
செய்முறை நாட் ஆதெண்டிகேடெட் நன்றி சார்
Deleteஸ்பெஷல் எரிசேரி நல்லாயிருக்குது.
ReplyDeleteசெய்து பார்த்தீர்களா வருகைக்கு நன்றி மேம்
Deleteஎரிசேரி நன்றாக இருக்கிறது.
ReplyDeleteசெய்து பார்த்துச் சொல்ல வேண்டியது அல்லவா நன்றி மேம்
Deleteவந்துட்டேன் :) வித்யாசமா இருக்கு செய்து பார்க்கிறேன் .ஒரு காலத்தில் சேனையையும் சேப்பங்கிழங்கையும் போட்டு குழப்பி வச்சிருக்கேன் அது லாங் லாங் அகோ :) இப்போ தெளிவா எல்லாம் நல்லா படிச்சி செய்றேன் ..பின்னூட்டங்களில் சொன்ன மிளகையும் சேர்த்து செய்து பார்க்கிறேன்
ReplyDeleteமிளகு சேர்த்தால்தா எரிசேரி என்பார்களோ வருகைக்கு நன்றி மேம்
Delete//அளவுக்கு மீறினால் அவெர்ஷந்தானே //very true
ReplyDeleteவித்யாசமா இருக்கு செய்து பார்க்கிறேன் .ஒரு காலத்தில் சேனையையும் சேப்பங்கிழங்கையும் போட்டு குழப்பி வச்சிருக்கேன் அது லாங் லாங் அகோ :) இப்போ தெளிவா எல்லாம் நல்லா படிச்சி செய்றேன் ..பின்னூட்டங்களில் சொன்ன மிளகையும் சேர்த்து செய்து பார்க்கிறேன்
எனக்கு ஊரில் இருக்கும்போது கிறிஸ்த்மஸ் டைம் எங்காவது ஓடிடலாமான்னு இருக்கும் ..எல்லா ஸ்வீட்ஸ் ஸ்நாக்ஸ் கேக் வீடெல்லாம் வாசனை ஹையோ
அது நான் அவியல் பற்றி சொன்ன கருத்தல்லவா
DeleteYeah 😃 whether it's aviyal or any dish when it's seen on the dining table for two or more days I've felt a grip around my throat 😂..
Deleteநீங்கள் சொல்லியிருப்பது போல் நிறைய ஸ்டைலில் செய்கிறார்கள் இந்த ரெசிப்பியை. ஆத்தெண்டிக் என்று இல்லைதான். தட்டைப்பயறு செர்த்தும் செய்கிறார்கள்... உங்கள் ரெசிப்பியும் செய்ததுண்டு. ஆனால் எரிசேரி என்று சொன்னதில்லை. இறுதியில் தேங்காயை வறுத்தும் சேர்ப்பார்கள். கேரளத்தைப் பொருத்தவரை அங்கு கேரளத்து எரிசேரி, பாலக்காடு எரிசேரி என்று அதாவது பாலக்காடு பிராமணர் சமையல்...என்றுதான் சொல்லப்படுவதுண்டு. நான் இதுவரை மிளகு சேர்த்துதான் எரிசேரி என்று செய்தது....நீங்கள் கொடுத்திருக்கும் ஆண்டி கொடுத்திருக்கும் ரெசிப்பியை செய்தது உண்டு என்றாலும்...இன்று என்ன செய்வது என்று குழம்பிய வேளையில் உங்களின் இந்தப் பதிவு அட இதைச் செய்யலாமே என்று சொல்ல...இன்று இதுதான் செய்ய இருக்கிறேன் சார்...
ReplyDeleteமிக்க நன்றி சார்..
கீதா
எரிசேரி பற்றி தற்போதுதான் அறிந்தேன் ஐயா.
ReplyDeleteGMB Sir,
ReplyDeleteநானும் பாலக்காட்டுக்காராளாத்து நாட்டுப் பெண் தான். இந்த மிளகூட்டல், பச்சடி எல்லம் செஞ்சுடுவேன். ஆனா இன்னும் எரிசேரி முயற்சி பண்ணல.
அப்படியே ஒரு PHOTO வும் போட்டிருந்தா நன்னா இருந்திருக்குமே.
நல்ல ரெசிபி சார்/
ReplyDeleteஎன்னாது ... "எரிசேரி" யா? புதுசு புதுசா என்னவெல்லாமோ சொல்லுறாங்க ... விடிஞ்சா பழஞ்சோறும், பச்சைமிளகாயும் கடிக்குற நமக்கு ஒண்ணுமே வெளங்க மாட்டேங்குதே அப்பனே .. முருகா .. ஞானபண்டிதா!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete