இடித்து பிழிந்த பாயசம்
-------------------------------------
இடித்து பிழிந்த
பாயசம்
என் சிறியதாயார்
செய்து பார்த்திருக்கிறேன் பாயசங்களில் பல
வகை அதில் இதுவும் ஒருவகை ஆனால் சற்றே மெனக்கெட்டாலும் சுவையாக இருக்கும் என்பது காரண்டி. நானே ப்ராக்டிகலாக செய்து பார்க்கவில்லை. தீரடிகலாக
அறிந்ததை ப்ராக்டிகலாக செய்து
பார்ப்பேன் எனக்குப் பிடித்தது ஆனால் அதில் இருக்கும் வேலைக்காக
என் மனைவி செய்யத் தயங்குகிறாள் வேலை அதிகமென்று எனக்குத் தோன்ற வில்லை வேலை என்று பார்த்தால் தேங்காய்ப்பால் எடுப்பதுதான் சிரமமாக மனைவி நினைக்கிறாள் அளவுகள்
அவர்களது எக்ஸ்பீரியன்ஸ் பிரகாரம் இருக்கட்டும் நல்ல தேங்காய் களை உடைத்து துருவிக் கொள்ளவும் அதை மிக்சியில் இட்டு சிறிது நீருடன்
அரைக்கவும் அரைத்ததை எடுத்து நன்கு
பிழிந்து பாலை எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி எடுக்கப்படும்பால் முதல் பால் தனியே
வைக்கவும் மீண்டும் நீர்விட்டு தேங்காயை அரைக்கவும் நீர் சற்றுக் கூடுதலாக
இருக்கலாம் அதை மீண்டும் எடுத்த்ப் பிழிந்து நீர் எடுக்கவும் இது சிறிது அதிகமாக நீராக இருக்கும் இது இரண்டாம்பால் இதே போல் தேங்காயின் பாலை பூராவும் எடுக்கவும் இது இன்னும்
நீர்த்து இருக்கும் இதுமூன்றாம்
பால் அளவில் கூட இருக்கும் அடுப்பில் சிறிது அரிசியை வேக வையுங்கள் அதில் இருக்கும் நீர் தேங்காயின் பாலாக
இருந்தால் சுவை கூடும் அதாவது அரிசியைதேங்காய்ப் பாலில் வேக வைக்கவும் நீர் குறைவாக இருந்தால் தேங்காயின் இரண்டாம் பாலைச் சேர்க்கலாம் அரிசி நன்கு
வெந்து வரும்போது தேவையான அளவு வெல்லம்
சேர்க்கவும் நன்றாக வெந்த தை எடுத்து
கடைசியாக தேங்காயின் முதல் பாலைச் சேர்க்கவும்
அதில் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து இடவும் வாசனைக்கு சிறிது ஏலக்காய்ப் பொடியும் சேர்க்கலாம்
இதுவே இடித்து பிழிந்த பாயசம் என்ன
நேயர்களே செய்து பாருங்கள் சுவையைக் கூறுங்கள்
அதற்குள் நானும் என்
மனைவியின் உதவியுடன் செய்த்து
பார்க்கிறேன்
அப்ப வரட்டா ….!
பூவையின் தளத்துக்கு வாரீர் வாசித்துக் கருத்து கூறுவீர் நன்றி
ReplyDeleteசித்திரை விஷுவுக்கு ஒவ்வொரு வருஷமும் இந்தப் பாயசம்தான் எங்க வீட்டில்! :) நெய்யிலே அரிசியை வறுத்துக் கொண்டு தேங்காய்ப் பாலில் கரைய விடுவேன்.
ReplyDeleteஇடித்து பிழிந்த பாயசம் என்பதை விட அரைத்துப் பிழிந்த பாயசம் என்பதே சரி :)
ReplyDeleteஅருமையான பாயசம்.
ReplyDeleteஎங்கள் வீட்டில் செய்வோம்.
பால் எடுக்க கஷ்டபட்டால் அரிசியை தேங்காயுடன் சேர்த்து அரைத்து செய்யலாம். அதே ருசியை தரும்.
ஓ... இதுதான் இடித்துப் பிழிந்த பாயாசமா? செய்துடுவோம்.
ReplyDeleteநான் அப்பவே வந்திருக்கேனே... அடடே....
Deleteஜி.எம்.பி சார். அநியாயம். நான் இரண்டு வகை பாயாசங்கள் செய்வதற்காக தீர்மானித்திருக்கிறேன் (நாளை அல்லது மறுநாள்). சரி.. பரவாயில்லை. நான் படத்தோட போடப்போகிறேன்.
ReplyDeleteதேங்காயை, 1/2 கப் தண்ணீரில் நன்கு அரைத்து எடுக்கும் பால் முதல் தரம். இதனை பாயசத்தின் கடைசியில்தான் விடவேண்டும். அப்புறம் பாயசம் கொதிக்கக்கூடாது (ரொம்ப). முதல் பால் எடுத்தபின், 3/4 கப் தண்ணீரைச் சேர்த்து திரும்ப அரைத்தால் 2வது பால். பின், 1 கப் தண்ணீரைச் சேர்த்தால் 3வது பால். இந்த 3வது பாலை, அரிசி வேகவைக்க உபயோகிக்கலாம். 2வது பாலை, வெல்லம், குழைந்த அரிசியோடு சேர்த்துக் கொதிக்கவைக்கும்போது சேர்க்கவேண்டும். இறக்குவதற்கு சற்று முன்னால் முதல் பாலைச் சேர்த்துப் பின் இறக்கவேண்டும். அப்போதான் தேங்காய் பாலின் நறுமணம் கிடைக்கும். நான் தேங்காய் பால் பவுடர் வாங்கியுள்ளேன்.
நீங்களே ஒரு நாள் செய்து அசத்துங்கள் (கேக் செய்ததுபோல்)
ahaa payasam arumai !
ReplyDeleteவருகை தந்து மேலான கருத்துகளைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்
ReplyDeleteபடிக்கும்பொழுதே தெரிகிறது, சுவையாக இருக்கும் என்பது. அம்மாவிடம் சொல்கிறேன்.
ReplyDeleteஅளவுகள் அவரவர் எக்ஸ்பீரியன்ஸ் சொல்ல வேண்டும்
Deleteசபரிமலையில் பம்பா சத்தியில் இந்தப் பாயசம் ஒரு அண்டா செய்வோம். இந்தப் பாயசத்தை 'சத சதயம்' என்று கல்லிடைக்குறிச்சி பக்கம் சொல்வார்கள். அம்பாளுக்கு நைவேத்தியம் செய்ய உகந்தது.
ReplyDeleteஇந்தப் பெயரை என் பாட்டி பாலக் காட்டில் சொல்லக் கேட்டிருக்கிறேன் எனக்குப் பிடித்தது
Deleteசெய்து சுவைத்துப் பார்த்து விடுகிறோம்...
ReplyDeleteசுவைக்க செய்ய வேண்டுமே
Deleteமலையாளி நண்பர்களின் வீட்டில் சுவைத்ததுண்டு. செய்து பார்க்கும் ஆசை இதுவரை வந்ததில்லை!
ReplyDeleteஇனிப்பு பிடிக்குமானால் இதுவும் பிடிக்கும் செய்து பார்ப்பது சற்றுக் கடினம்
Deleteயாராவது செய்து கொடுத்தா சாப்பிடுறேன்..
ReplyDeleteஇடித்து பிழிந்த பாயாசம் பெயர் வித்தியாசமானது ஆனால் எங்கள் ஊரில் சவ்வரிசியிலும் இப்படித்தான் செய்வார்கள்.
ReplyDeleteதினம்தினம் சமையலுக்கு தேங்காய்ப்பால் எடுத்துத்தான் சமைக்கின்றோம்.