ஏழு கோப்பை இனிப்பு
-------------------------------------
பூவையின் எண்ணங்களுக்காக மாதமொரு பதிவாவது
இடவேண்டாமா இம்முறை ஒரு இனிப்பு, இதை ஏழு கோப்பை இனிப்பு எனலாமா செய்முறை எளிது
தேவையான பொருட்கள்
கடலை மாவு, பால் நெய் நன்கு துருவிய
தேங்காய்
மற்றும் சர்க்கரை இதற்கு செவென் கப்ஸ் இனிப்பு என்று பெயர் வரக் காரணமே ஏழு கோப்பைப் பொருட்கள் இருப்பதால்தான் கடலை
மாவு பால் நெய் தேங்காய் ஒவ்வொன்றும் ஒரு
கப் என்றால் சர்க்கரை மூன்றுகப் ஆஅ ஏழு கோப்பைகள்
கனமான அடியுள்ள பாத்திரத்தில் கடலை மாவு தேங்காய்த்
துருவல் ல் சேர்த்துமிதமான சூட்டில் கரைய விடவும் கரைசலில் சர்க்கரை சேர்க்கபாவும் அடிக்கடி கிளறவும்கிளறி கொண்டே நெய்
சேர்க்கவும் இது சிறிது நேரத்தில் சற்றே
கேட்டியாகும் நல்லபதம் ( அது
சமைப்பவர்களுக்குத் தெரியும் ) வந்ததும்
ஒருநெய் பூசிய தட்டில் போடவும்
பதம் சரியாக வந்தால் ரொம்பவும்
கெட்டி இல்லாமல் துண்டு போட முடியும்
பதம் முருகினால் மிகவும்
கெட்டியாகி விடும் அனுபவம் கை
கொடுக்கும் இப்படி போடப்படு ம்துண்டுகள்
எடுத்து சாப்பிடவும் நல்ல இனிப்புப்
பண்டம்
இன்றுதான் என் வீட்டில் செய்தார்கள் ஆகவே சுடச்சுட இப்பதிவு
இன்றுதான் என் வீட்டில் செய்தார்கள் ஆகவே சுடச்சுட இப்பதிவு
ஏழு கோப்பை இனிப்பு |
7 கப் கேக் தீபாவளிச் சிறப்புப் பலகாரம். ஆனால் நான் அதிகம் செய்வதில்லை! என் பிறந்த வீட்டில் செய்வார்கள்.
ReplyDeleteஇதற்கு மைதா மாவு, ரவை போன்றவையும் சேர்க்கலாம்.
ReplyDeleteசுடச் சுட ஸ்வீட்டைப் பார்த்ததிலே, சாப்பிடும் அவசரத்தில் புகைப்படம் கொஞ்சம் ஆடிவிட்டது.
ReplyDeleteஎன் ஹஸ்பண்ட் செய்வாள். நானும் நேரம் இருக்கும்போது செய்துபார்க்கிறேன்.
தீபாவளி சமயங்களில் செய்வார்கள். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது.
ReplyDeleteஇது எங்கள் வீட்டில் அடிக்கடிச் செய்வதுண்டு இனிப்புப் பிரியர்கள் அதிகம் இருப்பதால்....எல்லாம் கைவசம் இருக்கும் பொருட்கள் என்பதாலும்...இப்போதுதான் செய்வது குறைந்துவிட்டது. இதில் மில்க் பௌடர் சேர்த்துச் செய்தால் அது தனிச் சுவையுடன் நன்றாக இருக்கும் ஸார்.
ReplyDeleteகீதா
சூப்பர்.. ஏழு கோப்பை இனிப்பு.. பெயரே புதிதாக இருக்கு.
ReplyDeleteபடிக்கவே சுவையாகஇருக்கிறது
ReplyDeleteபார்க்கும்போதே சாப்பிட தூண்டுகிறது.
ReplyDeleteநானோ நீரிழிவுக்காரன் - தங்கள்
ReplyDeleteஏழு கோப்பை இனிப்பு - எனக்கு
நீரிழிவைக் கூட்டும் போல...
அருமையான பதிவு ஐயா!
ஏழு கோப்பை இனிப்பு .... நமக்கு கேப்பை தான் வெகு சிறப்பு ... ஏனென்றால் நீரழிவு கொஞ்சம் இருக்கு ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete