காராமணி புளிக்குழம்பு
----------------------------------
கடந்த
நான்கைந்து நாட்களாக என் இன்னொரு தளம் gmb
writes திறப்பதில்லை. எனக்கு கை
ஒடிந்தமாதிரி இருக்கிறது இருந்தாலும் இந்த
வலைப் பூ நினைவுக்கு வந்தது மேலும் இதில்
எழுதியும் நாட்களாகி விட்டதுஆகவேஎன் எழுதும் உத்வேகத்தைக் குறைக்க இதில் ஒரு பதிவு
காராமணி புளிக்குழம்பு எனக்குப் பிடித்தது. செய்யவும் எளிது
ஆகவெ பகிர்கிறேன்
காராமணியை
(அல்லது தட்டைப்பயறு என்றும் சொல்லப்படும்)
முதலில் வேகவைத்துக் கொள்ளவும் என் குறிப்புகளில்
அளவு கூறுவதைத் தவிர்க்கிறேன் செய்ய
வேண்டிய அளவு ஒவ்வொருவர் ருசி போல் அளவுகள் வேறு படும் புளிக்கரைசலில் மஞ்சப்பொடி உப்பு போட்டுக் கொதிக்கவைக்கவும் நன்கு கொதி வந்து
பச்சை வாசனை போன பின்
வேகவைத்திருக்கும் காராமணியை அதில்
சேர்க்கவும் சிறிதுநேரம் கொதித்தபின் அதற்குபிறகு தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய்
சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தது சேர்க்கவும் பிறகு சிறிது கொதித்தபின் கடுகு நறுக்கிய சின்ன வெங்காயம் சீரகம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
எனக்கு சாதத்துடன் இந்தகுழம்பில் எள் எண்ணை கலந்து சாப்பிடப்
பிடிக்கும் நீங்களும் செய்து சாப்பிட்டுப்பாருங்களேன்