அல்வா எத்தனை ரகமடி
------------------------------------
-
அல்வா எத்தனை ரகமடி
-------------------------------------------
என் மனைவி இந்த இனிப்பை
என்னிடம் கொடுத்து எதுகொண்டு செய்தது
என்று கெட்டாள் எனக்குத் தெரியவில்லை பின் அது
பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டேன் சாதாரணமாகச்
செய்யாதது என்று தோன்றியதால் பூவையின் எண்ணங்களில்
பதிவிடுகிறேன்
தேவையான பொருட்கள்
உருளைக் கிழங்கு தேவைக்கேற்றபடி எடுத்து நன்கு வேக வைக்கவும்
சர்க்கரை-- உருளைக் கிழங்கின்
அளவு
நெய் --- முந்திரி பருப்பு—கேசரி
பௌடர்
செய்முறை
வேகவைத்த உருளைக்க்கிழங்கையும் சர்க்கரையையும் நன்றாக மிக்சியில் அடித்துக் கொள்ளவும்
நல்ல கெட்டியான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து
எடுத்துக் கொள்ளவும்
அதே பாத்திரத்தில் நெய்யுடன்
கிழங்கு சர்க்கரை விழுதை கிண்டிக் கொண்டே இருக்கவும்
நெய்யில்விழுது சுருண்டுவரும்போது சிறிது கேசரிப் பௌடரையும் சேர்க்கவும் வறுத்து வைத்திருக்கும் முந்திரியையும் சேர்த்துகிளறவும்
அடுப்பை அணைத்து விடுங்கள்
அல்வா ரெடி