Sunday, 1 December 2019

பேசன் லட்டு


                                               பேசன் லட்டு
                                                ---------------------
 

பூவையின்  எண்ணங்களில்  பதிவிட்டு நாட்கள் ஆகி விட்டது ஒருஇனிப்புடன் மீண்டும் தொடர்கிறேன் 

பேசின்  லட்டுவா பேசன் லட்டுவா  கன்ஃப்யூஷன்   பெயரில் என்ன இருக்கிறது  எ ரோஸ் இஸ் எ  ரோஸ் ஸெ ரோஸ்  பெயரா முக்கியம்
தேவையானபொருட்கள் 
கடலை மாவு ஒரு கப்
பொடித்த சர்க்கரை அதே அளவு
 நெய்  தேவைக்கு ஏற்ப
முந்திரி பருப்பு  நறுக்கியது  தேவைக்கேற்ப
செய்முறை 
 கடலை மாவை நெய்யில் வறுத்தெடுக்கவும் நெய் அளவு குறையக் கூடாது மாவு கரியாமல் இருக்க வேண்டும் பொன்னிறமாக  வறுத்து முடியும் நெரம்பொடித்து வைத்தமுந்திரியும்சேர்த்து  வறுக்கவும்   அடுப்பை அணைத்து பொடித்தசர்க்கரையைஅதில் சேர்த்து நன்கு கலக்கவும் சூட்டோடு  லட்டு பிடிக்கவும் சூட்டில் கை பத்திரம் தாங்கும்   சூடோடு  பிடிக்கவும் சிறிது ஆறியதும்சாப்[பிடலாம்  எப்படி இருக்கிறது சொல்லுங்கள்   





         


Thursday, 1 August 2019

அவல் புட்டு



                                            அவில் புட்டு
                                            ---------------------
   ஒரு தின்பண்டக் குறிப்பு
இதை அவல் புட்டு என்று அழைக்கலாமா  செய்வது மிகஎளிது
 அவலை வறுத்துப் பொடிசெய்து
கொள்ளவும் சுவைக்கு ஏற்ப ஏலக்காய் முந்திரிப்பருப்பு போன்றவையும் சேர்க்கலாம்  ஒரு கப் அவல் பொடிக்கு ஒரு கப் வெல்லம்  என எடுத்துக் கொள்ளலாம் வெல்லத்தை அது சற்றே கரைய நீர் ஊற்றி  அதை சூடு செய்யும்போது அவல் பொடியையும் சேர்த்துக்கிளரவும்  நன்கு மிக்ஸ் ஆனபின் எடுத்துசற்றே பொடியாய் இருக்க வேண்டும் சாப்பிடலாம்                              

Saturday, 16 March 2019

காரட் கீர்


                                                        காரட் கீர்
                                                        --------------
காரட் கீர்
 பூவையின் எண்ணங்கள் இருப்பதையே மறக்காமல் இருக்க ஓர் பதிவு செய்வதற்கு மிக எளிது
காரட்டைக் கட் செய்து (வழக்கம்போல் அளவுகள் சொல்வதைத் தவிரிக்கிறேன்)அதனுடன்   முந்திரி  பாதாம் போன்றவற்றைச் சேர்த்து  குக்குரில் வெல்லம் சேர்த்து வேக வைக்கவும் வெந்தானதும்  அதை மிக்சியில் போட்டுநன்கு அரைக்கவும் அரைத்து வந்ததைப் பால் சேர்த்துக் கலக்கிக் குடிக்கலாம்  

Friday, 8 February 2019

ரிப்பன்பக்கோடா



                                                        ரிப்பன் பக்கோடா
                                                         --------------------------

ரிப்பன் பக்கோடா
 மதிய நேரம் மழைக்காலங்களில் பக்கோடா செய்து சாப்பிடுவது பிடிக்கும் ஒரு முறை கோவையில் என் நண்பன்  ஒருவன்வீட்டில் பக்கோடா தந்தார்கள் நல்ல மொறுமொறுவென இருந்தாலும் வாயில் வைத்ததும் கரைந்தது  அது முதல் என் மனைவியிடம் அதே மாதிரி பக்கோடா செய்து தர கேட்பேன் அதன் அடிப்படையே நாம் அதில் சேர்க்கும் மாவின் கலவைதான் என்பாள் என் மனைவி  சில நாட்களுக்கு முன் ரிப்பன் பக்கோடா செய்தாள்  நன்றாக இருந்தது பூவையின் எண்ணங்களில்  பதிவிட செய்முறை கேட்டேன் 
தேவையான பொருட்கள்
 அரிசி மாவு கடலைமாவு பொட்டுக்கடலை மாவு வெண்ணை  சீரகப் பொடி மிளகாய்ப் பொடி பெருங்காயப்பொடி  உப்பு எண்ணை  
அளவுகள் ஓரொர் இடத்தில் மாறு படும்நல்ல க்ரிஸ்பான ரிப்பன்பக்கோடாவுக்கு  பொட்டுக்கடலை மாவு துணை போகும்   சாதாரணமாக ரெசிப்பிகளில் பொட்டுக்கடலை மாவு சொல்ல மாட்டார்கள்
எந்த அளவானாலும் மூன்றுக்கு இரண்டுக்கு ஒன்று என்னும்வீததில் கடலை மாவு அரிசி மாவு பொட்டுக்கடலைமாவு  இருக்க வேண்டும்  முதலில் செய்யும் போது சிறிதே குவாண்டிடியில் செய்யவும் சரியாக வந்தால் அடுத்தமுறை அதிகம் செய்யலாம்
 முதலில் எல்லா மாவையும்சிறிது வெண்ண கலந்து நன்றாக மிக்ஸ்செய்யவும் இந்தக்கலவையை நீர் ஊற்றி  சற்று கெட்டியாகவே பிசையவும்  அப்போதே  மிளகாய்ப் பொடிசீரகப் பொடி பெருங்காப்பொடி உப்பு  எல்லாம்சேர்த்து நன்கு கலக்கவும்  அச்சில் போட்டு பிழியும்  அளவுக்கு கெட்டியாக இருக்கட்டும்  நீர்க்க வேண்டாம்  வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன்ரிப்பனச்சில் எண்ணையில் பிழியவும் மொறு மொறுவெனவரும்போது எடுத்து விடவும்
என்னதான் ரெசிப்பி கொடுத்தாலும் செய்பவரின் ஞானமும்   இருக்கிறது என்பதே அனுமானம் 
 என்ன நண்பர்களே ரிப்பன் பக்கோடா அல்லது ஓலைப்பக்கோடா  எப்படி வந்தது என்று
சொல்லுங்கள் 


Friday, 11 January 2019

கட்லெட் செய்யலாமா



                                                   கட்லெட் செய்ய லாமா
                                                   ------------------------------------

 ஒரு எளிமையான ரெசிப்பி
 தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலைப் பொடி, வேக வைத்த  உருளைக் கிழங்கு  ப்ரெட் ஸ்லைசெஸ் தேவையான உப்பு  சிறிது மிளகாய்ப் பொடி  எண்ணை
 செய்முறை
 வேக வைத்த உருளைக் கிழங்கை பொட்டுக் கடலை மாவில்  ப்ரெட்  ஸ்லைசும்   சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு பிசையவும்  சிறிது மிளகாய்த் தூளுடன்   உப்பும் சேர்த்து பிசையவும்  வடை தட்டும்  பதத்துக்கு  இருக்கட்டும்  பிசைந்தமாவை  வடைக்கு தட்டுவது போல் தட்டி  கடாயில் எண்ணை காய்ந்தவுடன் தட்டிய மவைப் பொறித்து எடுக்கவும்   ருசியான கட்லெட் தயார்
 என்ன ரசித்தீர்களா செய்ய எளிதான வாய்க்கு ருசியான ரெசிப்பி இல்லையென்றால்  தோசைத் தவாவில்  தட்டிய மாவை நன்கு எண்ணை ஊற்றி சுட்டு எடுக்கவும்   
     

Monday, 7 January 2019

நேந்திர ஜாமூன்



                                            நேந்திர ஜாமூன்
                                            --------------------------

 நேந்தரப்பழத்தை கேரளத்தில் ஏத்தப்பழம் என்பார்கள்  எனக்கு நேந்திரப் பழத்தை  சாப்பிடப்பிடிக்காது  என்மனைவிக்குப்பிடிக்கும் எப்படியாவதுஅப்பழத்தை நான்  சாப்பிட வேண்டும் என்று என்மனைவி அதை வைத்து ஜாமூன் செய்து என்னை சாப்பிட வைத்தாள்  யான்பெற்ற இன்பம் வலை உலகோரும் பெற அதன் ரெசிப்பி இதோ மிக எளிது செய்து சாப்பிட
 தேவையான பொருட்கள்
 நேந்திரம் பழம்வெல்லம் பொடி செய்தது பொடி செய்தஏலக்காய்  தேங்காய் துருவினது  நெய்
நான் வழக்கம்போல் அளவுகளை கூறப்போவது இல்லை  அவரவர் ருசிக்கு ஏற்ப /எடுத்துக் கொள்ளலாம்  பொதுவாக இதைச்செய்து பார்க்கப்போகிறவர்சள்  சமையலில் தேர்ந்தவராய் இருப்பவர்களே ஒரு வித்தியாசமான ரெசிப்பி செய்து பார்க்கலாமே நேந்திரம்பழத்தை தோலுறித்து  நறுக்கிக் கொள்ளவும்  சைஸ் வாயின்  அளவு பொறுத்தது நறுக்கிய பழத்துண்டுகளை கடாயில் நெய் ஊற்றி வதக்கவும்  வதக்கி யபின்   பொடி செய்த வெல்லத்தைப் போடவும்  வெல்லம் பழத்துண்டுகளில் நன்கு இளகி பிடிக்கும்  தேங்காய்த் துறுவலையும் ஏலக்காய் ப்டியையும்  சேர்க்கவும் பழம்  வெல்லத்துடன் கலந்து அதில் தேங்காய் துறுவலும்  சேர்ந்து வரும்போது இறக்கி வைக்கவும்  சிறிது ஆறியவுடன்சாப்பிடலாம்
எனக்குப் பிடித்தது அப்ப உங்களூக்கு…?   
      

Wednesday, 26 December 2018

PUDDING



                  PUDDING
                  --------------

இந்தமுஇந்த முறை பூவையின்   எண்ணங்கள் புட்டிங்  செய்முறை பற்றியது இதுஒரு ஒரு எளிமையான ரெசிப்பி  விருப்பத்துக்கு ஏற்றபடி வேறு வேறு  பொருட்பொருட்களை சேர்க்கலாம்
 தே    தேவையான பொருட்கள்
 பால் –பால் சர்க்கரை முட்டை ( தேவைப்பட்டால்  பிடித்தால்) ப்ரெட்
        செய்முறை
பாலில் சர்க்கரை முட்டை சேர்த்து நன்கு அடிக்கவும்   முடிவில் ப்ரெட் க்ரம்ப்ஸ் சேர்க்க சேர்க்கவும் நன்கு கலக்கி ஆவியில் வேக வைக்கவும்   சிறிது நேரத்தில் புட்டிங்  புட்டிங் தயார் கலவையில் ருசி சேர்க்க முந்திரிப்பருப்பு பொடியாய் நறுக்கி சேர்க்க  சேர்க்கலாம்    
செய்வ  செய்வதற்கு  எளிதானது  

Wednesday, 19 December 2018

அல்வா எத்தனை ரகமடி





                                                          அல்வா எத்தனை ரகமடி
                                                            ------------------------------------
-
அல்வா எத்தனை ரகமடி
-------------------------------------------
என் மனைவி இந்த இனிப்பை என்னிடம் கொடுத்து எதுகொண்டு  செய்தது
என்று கெட்டாள்  எனக்குத் தெரியவில்லை  பின்  அது பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டேன்   சாதாரணமாகச் செய்யாதது என்று தோன்றியதால் பூவையின்  எண்ணங்களில் பதிவிடுகிறேன்
தேவையான பொருட்கள்
 உருளைக் கிழங்கு தேவைக்கேற்றபடி  எடுத்து நன்கு வேக வைக்கவும் 
சர்க்கரை-- உருளைக் கிழங்கின் அளவு 
நெய் --- முந்திரி பருப்பு—கேசரி பௌடர்
செய்முறை 
வேகவைத்த உருளைக்க்கிழங்கையும்   சர்க்கரையையும் நன்றாக  மிக்சியில் அடித்துக் கொள்ளவும்
நல்ல கெட்டியான அடிப்பாகம்  கொண்ட பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
அதே பாத்திரத்தில் நெய்யுடன் கிழங்கு சர்க்கரை விழுதை  கிண்டிக் கொண்டே இருக்கவும் நெய்யில்விழுது  சுருண்டுவரும்போது  சிறிது கேசரிப் பௌடரையும் சேர்க்கவும்  வறுத்து வைத்திருக்கும் முந்திரியையும் சேர்த்துகிளறவும் 
அடுப்பை அணைத்து விடுங்கள் அல்வா ரெடி


Monday, 10 December 2018

கொத்தமல்லி கட்டி


                                       கொத்தமல்லி  கட்டி                                     ------------------------------------

கொத்துமல்லிக் கட்டி  தேவையான பொருட்கள்
கொத்தமல்லி தழை ஒரு கட்டு 
உளுத்தம்பருப்பு 
சிறிது புளி
காய்ந்த மிளகாய்
உப்பு  தாளிக்க சிறிது  எண்ணை
செய் முறைமிக எளிது
எண்ணையில் உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும்  கொத்தமல்லித்தழையை  அலம்பி பொடியாக  நறுக்கவும் மிக்சியில் உளுத்தம்பருப்புமிளகாயை போட்டு அரைக்கவும் அதிகம் அரைக்க வேண்டாம் அதிலேயே கொத்தமல்லி புளி உப்பு சேர்த்து ஓட விடவும்  அரைத்ததை  விழுதாகக் கூடாது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக்சப் பிடித்து கொள்ளவும்  இதைசாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்  சில நாட்கள் கெடாமல் பாது காக்கலாம்  

Sunday, 31 December 2017

உருளைகிழங்கு முறுக்கு



                                   உருளைக்கிழங்கு முறுக்கு
                                  ------------------------------------------
வெகு நாட்களுக்குப் பின்  பூவையின்  எண்ணங்களில் ஒரு ரெசிபி 

உருளைக்கிழங்கு முறுக்கு
 தேவையான பொருட்கள்
பெரிய உருளைக்கிழங்கு -----4
அரிசி மாவு……………………………………………….3 மேஜைக்கரண்டி
எள்……………………………………………………………………….1 மேஜைக்கரண்டி
சீரகம்  ……………………………………………………………….1 தேக்கரண்டி
உப்பு ……………………………………………………………………….ருசிக்கேற்ப
எண்ணை ……………………………………………………….1 மேஜைக்கரண்டி
செய்முறை
உருளக்கிழங்கை வேக வைத்து  தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும் 
அரிசி மாவுடன் சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும் அத்துடன்  உப்பு சீரகம்  எள் ஆகியவற்றைச் சேர்க்கவும் ஆறவைத்து மசித்த உருளைக் கிழங்குடன் சேர்க்கவும் சிறிது எண்ணை கலந்து நன்கு பிசையவும்சிறு உருண்டைகளாக  உருட்டி முறுக்கு அச்சில் போட்டு ஈரத்துணியில் பிழிந்து கொள்ளவும் இதை வெயிலில் காய வைத்து தேவைப்படும்போது எண்ணையில் பொரித்துக் கொள்ளலாம் பிழிந்த முறுக்குகளைக் காய வைப்பது தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவே  இல்லையென்றால் உடனே பொரித்து எடுத்து உண்ணலாம்

 செய்து பார்த்துக் கருத்து சொல்லுங்கள் நட்புகளே








Thursday, 31 August 2017

ஏழு கோப்பை இனிப்பு


                                            ஏழு கோப்பை இனிப்பு
                                            -------------------------------------
 பூவையின் எண்ணங்களுக்காக மாதமொரு பதிவாவது இடவேண்டாமா  இம்முறை ஒரு இனிப்பு,  இதை  ஏழு கோப்பை இனிப்பு எனலாமா செய்முறை எளிது
 தேவையான  பொருட்கள்  கடலை மாவு,  பால் நெய் நன்கு துருவிய  தேங்காய்  மற்றும் சர்க்கரை இதற்கு செவென்  கப்ஸ் இனிப்பு என்று பெயர் வரக் காரணமே  ஏழு கோப்பைப் பொருட்கள் இருப்பதால்தான் கடலை மாவு பால் நெய் தேங்காய் ஒவ்வொன்றும்  ஒரு கப் என்றால் சர்க்கரை மூன்றுகப் ஆஅ ஏழு கோப்பைகள்

 கனமான அடியுள்ள பாத்திரத்தில் கடலை மாவு தேங்காய்த் துருவல் ல் சேர்த்துமிதமான சூட்டில் கரைய விடவும்  கரைசலில் சர்க்கரை சேர்க்கபாவும்   அடிக்கடி கிளறவும்கிளறி கொண்டே நெய் சேர்க்கவும்   இது சிறிது நேரத்தில் சற்றே கேட்டியாகும் நல்லபதம்  ( அது சமைப்பவர்களுக்குத் தெரியும் ) வந்ததும்  ஒருநெய் பூசிய தட்டில் போடவும்  பதம் சரியாக வந்தால் ரொம்பவும்  கெட்டி இல்லாமல் துண்டு போட முடியும்  பதம்  முருகினால் மிகவும் கெட்டியாகி விடும்  அனுபவம் கை கொடுக்கும்   இப்படி போடப்படு ம்துண்டுகள் எடுத்து சாப்பிடவும்  நல்ல இனிப்புப் பண்டம் 

இன்றுதான்  என் வீட்டில் செய்தார்கள் ஆகவே சுடச்சுட இப்பதிவு 

ஏழு கோப்பை இனிப்பு 
         

Saturday, 22 July 2017

பாயசம் படங்கள்

    இந்த தளத்தில் என்  சென்றபதிவில்  இடித்து பிழிந்த பாயசம் பற்றி எழுதி இருந்தேன் இது பலருக்கும் அறிமுகமானதே என்று தெரிகிறது. நெல்லைத் தமிழன்  அவர்கள் படங்கள் இல்லை என்று குறைபட்டார்  மோகன் ஜி இதனை சத  சதயம் என்று கல்லிடைக் குறிச்சியில் சொல்வார்கள்  என்றார்  நானுமென் பாட்டி பாலக்காட்டில் இந்தப் பெயரைத்தான் கூறுவார்  எழுதும்போது நினைவுக்கு வரவில்லை  செய்து பார்க்காத போது படங்களுக்கு எங்கே போவது. எனக்கும்  செய்து பார்க்கும் ஆவல் வந்தது. சனிக்கிழமை யன்று செய்தேன் ( இன்று )   அதன்  படங்கள் சிலவற்றைப் பகிர்கிறேன்  காணொளியாக என் மனைவி எடுத்தார் நீளம் அதிகமாக இருந்ததால் பகிர முடியவில்லை
                                                  தேங்காய் துருவும்போது



தேங்காய் துருவியது 

தேங்காய் பால் எடுக்கும் போது
பாயச  அரிசி மூன்றாம் பாலில் வேகிறது

பாயசம் ரெடி 

எல்லாப் படங்களும் பதியவில்லை  காணொளிகள்  பதிய முடியவில்லை












எல்லாப்படங்களும்  பதியவில்லை  காணொளிகள்

Thursday, 20 July 2017

இடித்து பிழிந்த பாயசம்


                                          இடித்து பிழிந்த பாயசம்              
                                          -------------------------------------
 இடித்து பிழிந்த பாயசம்
 என் சிறியதாயார் செய்து பார்த்திருக்கிறேன்  பாயசங்களில் பல வகை அதில் இதுவும் ஒருவகை ஆனால் சற்றே மெனக்கெட்டாலும்  சுவையாக இருக்கும் என்பது காரண்டி.  நானே ப்ராக்டிகலாக செய்து பார்க்கவில்லை.  தீரடிகலாக  அறிந்ததை ப்ராக்டிகலாக  செய்து பார்ப்பேன்  எனக்குப் பிடித்தது  ஆனால் அதில் இருக்கும்  வேலைக்காக  என் மனைவி செய்யத் தயங்குகிறாள் வேலை அதிகமென்று எனக்குத் தோன்ற வில்லை  வேலை என்று பார்த்தால் தேங்காய்ப்பால் எடுப்பதுதான்  சிரமமாக மனைவி நினைக்கிறாள் அளவுகள் அவர்களது  எக்ஸ்பீரியன்ஸ்  பிரகாரம் இருக்கட்டும்  நல்ல தேங்காய் களை உடைத்து   துருவிக் கொள்ளவும்  அதை மிக்சியில் இட்டு சிறிது நீருடன் அரைக்கவும்  அரைத்ததை எடுத்து நன்கு பிழிந்து பாலை எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி எடுக்கப்படும்பால் முதல் பால் தனியே வைக்கவும்  மீண்டும் நீர்விட்டு தேங்காயை  அரைக்கவும் நீர் சற்றுக் கூடுதலாக இருக்கலாம்  அதை மீண்டும்  எடுத்த்ப் பிழிந்து நீர் எடுக்கவும்  இது சிறிது அதிகமாக நீராக இருக்கும்   இது இரண்டாம்பால் இதே போல் தேங்காயின்  பாலை பூராவும் எடுக்கவும்  இது இன்னும்  நீர்த்து இருக்கும்   இதுமூன்றாம் பால் அளவில் கூட இருக்கும் அடுப்பில் சிறிது அரிசியை வேக வையுங்கள்  அதில் இருக்கும் நீர் தேங்காயின் பாலாக இருந்தால் சுவை கூடும் அதாவது அரிசியைதேங்காய்ப் பாலில் வேக வைக்கவும்  நீர் குறைவாக இருந்தால் தேங்காயின்  இரண்டாம் பாலைச் சேர்க்கலாம் அரிசி நன்கு வெந்து வரும்போது  தேவையான அளவு வெல்லம் சேர்க்கவும்  நன்றாக வெந்த தை எடுத்து கடைசியாக தேங்காயின் முதல் பாலைச் சேர்க்கவும்   அதில் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து இடவும்  வாசனைக்கு சிறிது ஏலக்காய்ப் பொடியும்  சேர்க்கலாம்  இதுவே இடித்து பிழிந்த பாயசம்  என்ன நேயர்களே செய்து பாருங்கள் சுவையைக் கூறுங்கள்  அதற்குள் நானும்  என் மனைவியின்  உதவியுடன் செய்த்து பார்க்கிறேன் 
 அப்ப வரட்டா ….!              





Monday, 10 April 2017

எரிசேரி (மனைவி ஸ்டைல் )


                                          எரிசேரி
                                          -----------


ஒன்றிலிருந்து இன்னொன்று  என்பது போல் அண்மையில் ஏஞ்செலின் எழுதி இருந்த அவியல் லண்டன் ஸ்டைல்  என்பதைப் படித்த போது எனக்கும்  என் மனைவி செய்யும் எரிசேரி பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது ஓணம் சமயம்  எங்கும் பல நாட்களுக்கு இந்த அவியல் ஓடுமாதலால் அது குறித்து ஒரு அவெர்ஷன் என்று எழுதி இருந்தேன்  அதை ஏஞ்செல் எனக்கு அவியல் பிடிக்காது என்று புரிந்து கொண்டுள்ளார்  எனக்கு அவியல் பிடிக்கும் ஆனால் எதுவும்  அளவுக்கு மீறினால் அவெர்ஷந்தானே இங்கு நான்கொடுக்கும் சமையல் குறிப்பு என் மனைவி செய்வதை ஒத்து இருக்கும்  எரிசேரி ஒரு கேரள பதார்த்தம்   வெவ்வேறு வகையில் செய்கிறார்கள் ஆகவே இதுதான்  ஆதெண்டிக் முறை என்று கூற மாட்டேன் எரிசேரி என் மனைவி ஸ்டைல்  என்றுசொல்லட்டுமா  செய்து பாருங்கள் பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள் முன்னுரைக்குப் பின்  இப்போது செய்முறை
வழக்கம் போல் அளவுகள்குறிக்க வில்லை அவரவர் சுவைக்கு ஏற்ப என எடுத்துக் கொள்ளலாம் இது ஒரு எளிய செய்முறை
 சிறிது துவரம்பருப்போடு சேனை கிழங்கை ( தோல் சீவி நறுக்கியது ) வேகவைக்கவும்  அதில் சிறிது தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய்  சேர்த்து அரைத்ததைச் சேர்க்கவும் உப்பு போட மறக்க வேண்டாம்  கொதித்து வந்த கூட்டில் சிறிது கடுகு உளுத்தம்  பருப்பு தேங்காய் துருவியது சேர்த்து தாளிக்கவும் எரிசேரி மனைவி ஸ்டைல் ரெடி  பலரும் எரிசேரி இப்படி அல்ல என்றெல்லாம் சொல்லலாம் இது ஸ்பெஷல்    
                                          


Wednesday, 29 March 2017

பெசரெ ட்

                                   பெசரெட்
                                  --------------

இன்னும்  ஒரு எளிய சமையல் குறிப்பு
தோசை வகையில் இதுவும்  ஒன்று ஆந்திரா ஸ்பெஷல்  செய்வது எளிது ஒரு டம்ளர்  பாசிப்பருப்புடன்  இரண்டு ஸ்பூன்  பச்சரிசியும் கலந்து ஊறவைத்து அரைக்கவேண்டும்  அரைக்கும் போது சிறிது இஞ்சியும் பச்சை மிளகாயும்  சேர்த்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து  கொள்ளவும் அரைத்த மாவில்  பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன்  சிறிது கொத்துமல்லித்  தழையும்  சேர்க்கவும்   உப்பு சேர்த்து கலக்கவும்  அதன்  பின்  என்ன  தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்  தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி அல்லது சற்றே உரைக்கும்  சட்னி ஏதாவது அவரவர் சுவைக்கேற்ப  செய்து பார்த்து சாப்பிடுங்கள்
               

Saturday, 25 March 2017

காராமணி புளிக்குழம்பு


                                    காராமணி புளிக்குழம்பு
                                   ----------------------------------


கடந்த நான்கைந்து நாட்களாக என்  இன்னொரு தளம் gmb writes  திறப்பதில்லை. எனக்கு கை ஒடிந்தமாதிரி இருக்கிறது இருந்தாலும்  இந்த வலைப் பூ நினைவுக்கு வந்தது மேலும்  இதில் எழுதியும் நாட்களாகி விட்டதுஆகவேஎன் எழுதும் உத்வேகத்தைக் குறைக்க இதில் ஒரு பதிவு காராமணி புளிக்குழம்பு எனக்குப் பிடித்தது. செய்யவும்  எளிது  ஆகவெ பகிர்கிறேன் 
காராமணியை (அல்லது தட்டைப்பயறு என்றும்  சொல்லப்படும்) முதலில் வேகவைத்துக் கொள்ளவும்  என் குறிப்புகளில் அளவு கூறுவதைத் தவிர்க்கிறேன்  செய்ய வேண்டிய அளவு ஒவ்வொருவர் ருசி போல் அளவுகள் வேறு படும்  புளிக்கரைசலில்  மஞ்சப்பொடி உப்பு  போட்டுக் கொதிக்கவைக்கவும் நன்கு கொதி வந்து பச்சை வாசனை போன பின்  வேகவைத்திருக்கும்  காராமணியை அதில் சேர்க்கவும் சிறிதுநேரம் கொதித்தபின் அதற்குபிறகு தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தது சேர்க்கவும் பிறகு சிறிது கொதித்தபின்  கடுகு நறுக்கிய சின்ன வெங்காயம் சீரகம்  கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
 எனக்கு சாதத்துடன்  இந்தகுழம்பில் எள் எண்ணை கலந்து சாப்பிடப் பிடிக்கும்   நீங்களும்  செய்து சாப்பிட்டுப்பாருங்களேன்