Tuesday, 20 May 2014

பிசி பேளா ஹுளி அன்ன


                                      பிசி பேளா ஹுளி அன்ன
                                    =========================  


இது என்னவோ என்று பயபடவேண்டாம். கர்நாடகாவில் பிரசித்தமான உணவு வகை முதலில் இதன் பொருள் என்னவென்று காண்போம் பிசி என்றால் சூடான , பேளா என்றால் பருப்பு, ஹுளி என்றால் புளி அன்னா என்றால் சாதம் . அதாவது சூடான பருப்பு புளி சாதம் செய்து முடித்தபின் பிசைந்து வைத்த தளராக இருக்கும் சாம்பார் சாதம் போல் இருக்கும்  தனியாக சாதம் சாம்பார் வைத்து கலந்து சாப்பிடுவதற்குப் பதில் ஒரு ரெடி மேட் சாம்பார் சாதம்

 இது இருவிதமான செய்முறைகளில் செய்யலாம் முதலில் அரிசி துவரம் பருப்பு ஒன்றுக்குப் பாதி என்னும் அளவில் குக்கரில் வேகவைக்கப் படுகிறது ஒன்றுக்கு மூன்று என்று நீரின் அளவை நிர்ணயிக்கலாம் தளரான சாதம் தயார்.
ஒரு கடாயில்எண்ணை ஊற்றித் தாளித்து தேவைப்பட்ட காய்கறிகளை நறுக்கியதை வதக்கி எடுக்கவும் ( பிரியப் பட்ட காய்கறிகளை உபயோகிக்கலாம்) பொதுவாக சின்ன வெங்காயம் தக்காளி  காரட் முருங்கைக்காய் எடுத்துக் கொள்ளலாம் வதக்கி  வைத்த காயில் அவரவர் ருசிக்கேற்ப புளிக் கரைசலை ஊற்றி உப்பு மஞ்சப் பொடி போட்டு கடாயில் காய்களை வேகவிடவும் இந்தப் புளிக் குழம்பை வேக வைத்த சாதத்தில் ஊற்றி நன்கு கிளறவும் இதில் நான் நீரின் அளவோ புளியின் அளவோ தரவில்லை. சிலருக்கு  கெட்டியாக இருந்தால் பிடிக்கும். சிலருக்குத் தளராக இருந்தால் பிடிக்கும் ஆனால் பொதுவாக பிசிபேளா ஹுளி அன்னா சற்றுத் தளராகவே இருக்க வேண்டும். சாதம் புளிக் கரைசலில் பிசி பேளா பொடி போட்டு இறக்கி வைக்கலாம்.
ஆனால் புளிக்கரைசலிலேயே மல்லி மிளகாய் வெந்தயம் உ. பருப்பு வதக்கிப்மிக்சியில் சிறிது தேங்காய் சேர்த்து அரைத்துக் கொண்டு  கலக்கி அதை வேகவைத்த சாதத்தில் கலக்கவும் செய்யலாம் பிசி பேளா பொடிக்கு பதில் இவ்வாறு செய்யலாம்  இறக்கி வைத்த அன்னத்தில் சிறிது நெய் ஊற்றி கருவேப்பிலையும் தூவலாம்

இரண்டாவது செய்முறையில் குக்கருக்குப்பதில் ஒருபெரிய பாத்திரத்தில் அரிசி பருப்பு வதக்கிய காய்கறிகளுடன் புளிக் கரைசலையும் ஊற்றி உப்பு மஞ்சள் பொடி போட்டு  ஒன்றாக வேகவைக்கலாம் நன்றாக வெந்து வரும் சமயம் சாம்பார்பொடியுடன் அரைத்து வைத்த தேங்காயையும் சேர்க்கலாம்
இறக்கி வைத்து நெய்யில் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கலாம்          

11 comments:

 1. வழக்கமாக சமைப்பதுதான்..பகிர்வுக்கு நன்றிகள்..

  ReplyDelete
 2. ஹுளி என்று பொதுவாக குழம்பிற்கு சொல்லுகிறார்கள். நாம் இதேபோல கதம்ப சாதம் செய்கிறோம், இல்லையா?
  இந்த சாதத்திற்கு இப்போதெல்லாம் MTR பொடி கிடைக்கிறது. அதைப்போட்டு செய்து முடித்து விடுகிறார்கள். ஆனால் தனியாக சாமான்களை வறுத்து அரைத்துச் செய்தால் ரொம்ப பிரமாதமாக இருக்கும்.

  சுட சுட இந்த சாதத்தின் மேல் பூந்தியை தூவிக் கொண்டு சாப்பிடுவார்கள். அதைக் குறிப்பிட மறந்து விட்டீர்களே!

  ReplyDelete
 3. குழந்தைகள் இருக்கையிலே அடிக்கடி செய்வேன். இங்கே இப்போ நாங்க ரெண்டே பேர் தான். செய்தால் மிஞ்சிப் போகும். எனக்கு சாம்பார் சாதமே பிடிக்காது! :)

  ReplyDelete
 4. நீங்க சொன்ன இரு முறைகளிலும் செய்திருக்கேன். ஆனால் மி.வத்தல், கொத்துமல்லி, கடலைப்பருப்பு, வெந்தயம், தேங்காய்த் துருவலோடு ஒரு துண்டு லவங்கப்பட்டை, ஒரு கிராம்பு, ஒரு பெரிய (கறுப்பு) ஏலக்காயும் சேர்த்து வறுத்துப் பொடி செய்து தூவுவேன். இது எங்க வீட்டில் செய்யும் முறைனு நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. நான் சாப்பிட்டவரை சாம்பார் சாப்பிடும் ஆசை வந்தது காசியிலும், கர்நாடகாவின் மேல்கோட்டையில் பெருமாளைப் பார்க்கச் சென்ற போது அங்கிருந்த பட்டாசாரியார் ஒருத்தர் வீட்டில் செய்து கொண்டு வந்த சாம்பார் சாதமும் தான் சுவையானது. பொதுவாப் பிடிக்காத எனக்கே சாப்பிடப் பிடித்துச் சாப்பிட்டேன். நன்றாக இருந்தது.

  ReplyDelete
 6. இது போல் செய்து சுவைக்க வேண்டும்...

  நன்றி ஐயா...

  ReplyDelete
 7. ஆஹா, ஞாபகப்படுத்தி விட்டீர்களே, இனி இதற்காக பெங்களூர் வரவேண்டுமே?

  ReplyDelete
 8. Baalaa channagi bisibele baath madodu bagege baradidira!naaligeyalli neeru surithayide!

  ReplyDelete
 9. நாக்கில் எச்சில் ஊறவைத்து விட்டீர்கள்.
  ஐயா நேரமிருந்தால் எனது பதிவை கொஞ்சம் காணவும், காரணம் தங்களை போன்றவர்களால்தான் குறைகளை உண்மையாக சொல்லமுடியும்,,,,, நன்றி.
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
 10. புதிய வித்தியாசமான உணவு வகையை அறிமுகப்படுத்தி ஆசையைத் தூண்டிவிட்டீர்கள். இதனை ருசிக்கும் நாள் எந்நாளோ?

  ReplyDelete
 11. PRAYER IS CONDITIONAL BY STEVE FINNELL

  There are times when men pray and their prayers are not granted; why not? Because prayer is conditional.

  1 John 5:14 This is confidence which we have before Him, that, if we ask anything according to His will, He hears us.

  Our petitions to God must be according to His will. PRAYER IS CONDITIONAL.

  John 15:7 If you abide in Me, and My word abide in you, ask whatever you wish, and it will be done for you.

  Jesus said staying faithful to Him is a factor in having prayers granted. PRAYER IS CONDITIONAL.

  Mark 11:25-26 Whenever you stand praying, forgive, if you have anything against anyone, so that your Father who is in heaven will also forgive you your transgressions. 26 [But if you do not forgive, neither will your Father who is in heaven forgive your transgressions."]

  Failing to forgive others can be an impediment to having your prayer requests granted. PRAYER IS CONDITIONAL.


  Proverbs 15:29 The Lord is far from the wicked, But He hears the prayers of the righteous.


  Clothing yourself with the righteousness of Jesus and living a Christians lifestyle is necessary for God to acknowledge your prayers. PRAYER IS CONDITIONAL.


  James 4:3 You ask and do not receive , because you ask with the wrong motives, so that you may spend it on your pleasures.


  God did not promise Christians that they would have unlimited wealth to spend on their pleasures. Praying for wealth, having the wrong motives, might be why your prayers are not answered. PRAYER IS CONDITIONAL.


  1 Peter 3:7 You husbands in the same way, live with your wives in an understanding way, as with someone weaker, since she is a woman; and show her honor as a fellow heir of the grace of life, so that your prayers will not be hindered.


  Men's prayers being answered are contingent upon the attitude and treatment of their wives. PRAYER IS CONDITIONAL.


  James 1:5-7 But if any man lacks wisdom, let him ask God, who gives to all generously and without reproach, and it will be given him. 6 But he must ask in faith without doubting, for the one who doubts is like the surf of the sea, driven and tossed by the wind. 7 For that man ought not to expect that he will receive anything from the Lord,


  Answered prayers are contingent on our faith. PRAYERS ARE CONDITIONAL.


  (All Scripture quotes are from:NEW AMERICAN STANDARD BIBLE)


  YOU ARE INVITED TO FOLLOW MY BLOG. http//:steve-finnell.blogspot.com

  ReplyDelete