Wednesday 29 March 2017

பெசரெ ட்

                                   பெசரெட்
                                  --------------

இன்னும்  ஒரு எளிய சமையல் குறிப்பு
தோசை வகையில் இதுவும்  ஒன்று ஆந்திரா ஸ்பெஷல்  செய்வது எளிது ஒரு டம்ளர்  பாசிப்பருப்புடன்  இரண்டு ஸ்பூன்  பச்சரிசியும் கலந்து ஊறவைத்து அரைக்கவேண்டும்  அரைக்கும் போது சிறிது இஞ்சியும் பச்சை மிளகாயும்  சேர்த்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து  கொள்ளவும் அரைத்த மாவில்  பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன்  சிறிது கொத்துமல்லித்  தழையும்  சேர்க்கவும்   உப்பு சேர்த்து கலக்கவும்  அதன்  பின்  என்ன  தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்  தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி அல்லது சற்றே உரைக்கும்  சட்னி ஏதாவது அவரவர் சுவைக்கேற்ப  செய்து பார்த்து சாப்பிடுங்கள்
               

Saturday 25 March 2017

காராமணி புளிக்குழம்பு


                                    காராமணி புளிக்குழம்பு
                                   ----------------------------------


கடந்த நான்கைந்து நாட்களாக என்  இன்னொரு தளம் gmb writes  திறப்பதில்லை. எனக்கு கை ஒடிந்தமாதிரி இருக்கிறது இருந்தாலும்  இந்த வலைப் பூ நினைவுக்கு வந்தது மேலும்  இதில் எழுதியும் நாட்களாகி விட்டதுஆகவேஎன் எழுதும் உத்வேகத்தைக் குறைக்க இதில் ஒரு பதிவு காராமணி புளிக்குழம்பு எனக்குப் பிடித்தது. செய்யவும்  எளிது  ஆகவெ பகிர்கிறேன் 
காராமணியை (அல்லது தட்டைப்பயறு என்றும்  சொல்லப்படும்) முதலில் வேகவைத்துக் கொள்ளவும்  என் குறிப்புகளில் அளவு கூறுவதைத் தவிர்க்கிறேன்  செய்ய வேண்டிய அளவு ஒவ்வொருவர் ருசி போல் அளவுகள் வேறு படும்  புளிக்கரைசலில்  மஞ்சப்பொடி உப்பு  போட்டுக் கொதிக்கவைக்கவும் நன்கு கொதி வந்து பச்சை வாசனை போன பின்  வேகவைத்திருக்கும்  காராமணியை அதில் சேர்க்கவும் சிறிதுநேரம் கொதித்தபின் அதற்குபிறகு தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தது சேர்க்கவும் பிறகு சிறிது கொதித்தபின்  கடுகு நறுக்கிய சின்ன வெங்காயம் சீரகம்  கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
 எனக்கு சாதத்துடன்  இந்தகுழம்பில் எள் எண்ணை கலந்து சாப்பிடப் பிடிக்கும்   நீங்களும்  செய்து சாப்பிட்டுப்பாருங்களேன்