Saturday 25 March 2017

காராமணி புளிக்குழம்பு


                                    காராமணி புளிக்குழம்பு
                                   ----------------------------------


கடந்த நான்கைந்து நாட்களாக என்  இன்னொரு தளம் gmb writes  திறப்பதில்லை. எனக்கு கை ஒடிந்தமாதிரி இருக்கிறது இருந்தாலும்  இந்த வலைப் பூ நினைவுக்கு வந்தது மேலும்  இதில் எழுதியும் நாட்களாகி விட்டதுஆகவேஎன் எழுதும் உத்வேகத்தைக் குறைக்க இதில் ஒரு பதிவு காராமணி புளிக்குழம்பு எனக்குப் பிடித்தது. செய்யவும்  எளிது  ஆகவெ பகிர்கிறேன் 
காராமணியை (அல்லது தட்டைப்பயறு என்றும்  சொல்லப்படும்) முதலில் வேகவைத்துக் கொள்ளவும்  என் குறிப்புகளில் அளவு கூறுவதைத் தவிர்க்கிறேன்  செய்ய வேண்டிய அளவு ஒவ்வொருவர் ருசி போல் அளவுகள் வேறு படும்  புளிக்கரைசலில்  மஞ்சப்பொடி உப்பு  போட்டுக் கொதிக்கவைக்கவும் நன்கு கொதி வந்து பச்சை வாசனை போன பின்  வேகவைத்திருக்கும்  காராமணியை அதில் சேர்க்கவும் சிறிதுநேரம் கொதித்தபின் அதற்குபிறகு தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தது சேர்க்கவும் பிறகு சிறிது கொதித்தபின்  கடுகு நறுக்கிய சின்ன வெங்காயம் சீரகம்  கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
 எனக்கு சாதத்துடன்  இந்தகுழம்பில் எள் எண்ணை கலந்து சாப்பிடப் பிடிக்கும்   நீங்களும்  செய்து சாப்பிட்டுப்பாருங்களேன் 
               
                                          





18 comments:

  1. நல்ல குறிப்பு. செய்து பார்க்கிறேன். வரும் ஞாயிறில்!

    ReplyDelete
  2. gmb writes - உங்களின் இந்த தளம் என்னால் திறந்து பார்க்க முடிகிறதே.... நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள்....

    ReplyDelete
  3. காராமணி எனக்குப் பிடிக்காது. ஒருமுறை செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
  4. அருமையான ரெசிப்பீ பாலா சார். :)

    ReplyDelete
  5. //கடந்த நான்கைந்து நாட்களாக என் இன்னொரு தளம் gmb writes திறப்பதில்லை.//

    அது உங்கள் கொம்பியூட்டரில் ஏதோ லொக் ஆகி விட்டிருக்கிறது போலும். இவ் புளொக் ஓபின் ஆகிறதெனில் அதுக்கு ஏதும் browser problem இருக்குமென நான் நினைக்கவில்லை... ஒரு தடவை சைன் அவுட் பண்ணி, திரும்ப சைன் இன் பண்ணிப் பாருங்கோ அவ் புளொக்கை.

    ReplyDelete
  6. மிக அருமையான புளிக்குழம்பு. இதில் காராமணி என்பது black eyed beans ஐத்தானே சொல்வார்கள். தட்டைப் பயறு என்பது -பாசிப்பயறு- green gram தானே.

    https://en.wikipedia.org/wiki/Black-eyed_pea

    ReplyDelete
    Replies


    1. ஐய்யே இந்த அம்மாவிற்கு காரமணி என்னவென்றால் தெரியவில்லையே....ஆமாம் இவங்க மழைக்குகூட கிச்சன் பக்கம் ஒதுங்கியது கிடையாது போல ஹீஹீ

      Delete
    2. haa ahaa :) ஒரு மணத்தக்காளியை விளக்கப்படுத்தறதுக்குள் நான் பட்ட பாடு இருக்கே இந்த மேடத்துக்கு :)

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
  7. இங்கு குளிருக்கு ஏற்றக் குழம்பாக இருக்கும்
    ஞாபகப் படுத்தியமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. நல்ல சமையல் குறிப்பு என்று சகதர்மினி சர்டபிகேட் தருகிறாள்ஜி!

    ReplyDelete
  9. @Athira green gram is mung dhal //pasiparuppu

    ReplyDelete
  10. மன்னிக்கவும். சமைக்கிற அளவுக்கு எனக்கு பொறுமையில்லை. அந்த நேரத்தில் உங்கள் blogs மூன்று முறை படித்துவிடலாம்.(I mean the other blog.)
    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  11. எனக்கு பிடித்த குழம்பு இதை நான் இங்கு அடிக்கடி செய்வதுண்டு

    ReplyDelete
  12. சப்பாத்திக்கு இம்முறையில் தக்காளி சேர்த்துச் செய்வதுண்டு.

    ReplyDelete
  13. வருகைதந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  14. தங்களின் தளம் திறக்கவில்லையா
    கவலை வேண்டாம் ஐயா
    வலைச் சித்தரைத் தொடர்பு கொள்ளுங்கள்
    அவரது எண்
    99 44 34 52 33 ,

    90 43 93 00 51

    ReplyDelete