Sunday, 31 December 2017

உருளைகிழங்கு முறுக்கு                                   உருளைக்கிழங்கு முறுக்கு
                                  ------------------------------------------
வெகு நாட்களுக்குப் பின்  பூவையின்  எண்ணங்களில் ஒரு ரெசிபி 

உருளைக்கிழங்கு முறுக்கு
 தேவையான பொருட்கள்
பெரிய உருளைக்கிழங்கு -----4
அரிசி மாவு……………………………………………….3 மேஜைக்கரண்டி
எள்……………………………………………………………………….1 மேஜைக்கரண்டி
சீரகம்  ……………………………………………………………….1 தேக்கரண்டி
உப்பு ……………………………………………………………………….ருசிக்கேற்ப
எண்ணை ……………………………………………………….1 மேஜைக்கரண்டி
செய்முறை
உருளக்கிழங்கை வேக வைத்து  தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும் 
அரிசி மாவுடன் சிறிது நீர் கலந்து அடுப்பில் வைத்துக் கிளறவும் அத்துடன்  உப்பு சீரகம்  எள் ஆகியவற்றைச் சேர்க்கவும் ஆறவைத்து மசித்த உருளைக் கிழங்குடன் சேர்க்கவும் சிறிது எண்ணை கலந்து நன்கு பிசையவும்சிறு உருண்டைகளாக  உருட்டி முறுக்கு அச்சில் போட்டு ஈரத்துணியில் பிழிந்து கொள்ளவும் இதை வெயிலில் காய வைத்து தேவைப்படும்போது எண்ணையில் பொரித்துக் கொள்ளலாம் பிழிந்த முறுக்குகளைக் காய வைப்பது தேவைப்படும்போது பொரித்துக் கொள்ளவே  இல்லையென்றால் உடனே பொரித்து எடுத்து உண்ணலாம்

 செய்து பார்த்துக் கருத்து சொல்லுங்கள் நட்புகளே
Thursday, 31 August 2017

ஏழு கோப்பை இனிப்பு


                                            ஏழு கோப்பை இனிப்பு
                                            -------------------------------------
 பூவையின் எண்ணங்களுக்காக மாதமொரு பதிவாவது இடவேண்டாமா  இம்முறை ஒரு இனிப்பு,  இதை  ஏழு கோப்பை இனிப்பு எனலாமா செய்முறை எளிது
 தேவையான  பொருட்கள்  கடலை மாவு,  பால் நெய் நன்கு துருவிய  தேங்காய்  மற்றும் சர்க்கரை இதற்கு செவென்  கப்ஸ் இனிப்பு என்று பெயர் வரக் காரணமே  ஏழு கோப்பைப் பொருட்கள் இருப்பதால்தான் கடலை மாவு பால் நெய் தேங்காய் ஒவ்வொன்றும்  ஒரு கப் என்றால் சர்க்கரை மூன்றுகப் ஆஅ ஏழு கோப்பைகள்

 கனமான அடியுள்ள பாத்திரத்தில் கடலை மாவு தேங்காய்த் துருவல் ல் சேர்த்துமிதமான சூட்டில் கரைய விடவும்  கரைசலில் சர்க்கரை சேர்க்கபாவும்   அடிக்கடி கிளறவும்கிளறி கொண்டே நெய் சேர்க்கவும்   இது சிறிது நேரத்தில் சற்றே கேட்டியாகும் நல்லபதம்  ( அது சமைப்பவர்களுக்குத் தெரியும் ) வந்ததும்  ஒருநெய் பூசிய தட்டில் போடவும்  பதம் சரியாக வந்தால் ரொம்பவும்  கெட்டி இல்லாமல் துண்டு போட முடியும்  பதம்  முருகினால் மிகவும் கெட்டியாகி விடும்  அனுபவம் கை கொடுக்கும்   இப்படி போடப்படு ம்துண்டுகள் எடுத்து சாப்பிடவும்  நல்ல இனிப்புப் பண்டம் 

இன்றுதான்  என் வீட்டில் செய்தார்கள் ஆகவே சுடச்சுட இப்பதிவு 

ஏழு கோப்பை இனிப்பு 
         

Saturday, 22 July 2017

பாயசம் படங்கள்

    இந்த தளத்தில் என்  சென்றபதிவில்  இடித்து பிழிந்த பாயசம் பற்றி எழுதி இருந்தேன் இது பலருக்கும் அறிமுகமானதே என்று தெரிகிறது. நெல்லைத் தமிழன்  அவர்கள் படங்கள் இல்லை என்று குறைபட்டார்  மோகன் ஜி இதனை சத  சதயம் என்று கல்லிடைக் குறிச்சியில் சொல்வார்கள்  என்றார்  நானுமென் பாட்டி பாலக்காட்டில் இந்தப் பெயரைத்தான் கூறுவார்  எழுதும்போது நினைவுக்கு வரவில்லை  செய்து பார்க்காத போது படங்களுக்கு எங்கே போவது. எனக்கும்  செய்து பார்க்கும் ஆவல் வந்தது. சனிக்கிழமை யன்று செய்தேன் ( இன்று )   அதன்  படங்கள் சிலவற்றைப் பகிர்கிறேன்  காணொளியாக என் மனைவி எடுத்தார் நீளம் அதிகமாக இருந்ததால் பகிர முடியவில்லை
                                                  தேங்காய் துருவும்போதுதேங்காய் துருவியது 

தேங்காய் பால் எடுக்கும் போது
பாயச  அரிசி மூன்றாம் பாலில் வேகிறது

பாயசம் ரெடி 

எல்லாப் படங்களும் பதியவில்லை  காணொளிகள்  பதிய முடியவில்லை
எல்லாப்படங்களும்  பதியவில்லை  காணொளிகள்

Thursday, 20 July 2017

இடித்து பிழிந்த பாயசம்


                                          இடித்து பிழிந்த பாயசம்              
                                          -------------------------------------
 இடித்து பிழிந்த பாயசம்
 என் சிறியதாயார் செய்து பார்த்திருக்கிறேன்  பாயசங்களில் பல வகை அதில் இதுவும் ஒருவகை ஆனால் சற்றே மெனக்கெட்டாலும்  சுவையாக இருக்கும் என்பது காரண்டி.  நானே ப்ராக்டிகலாக செய்து பார்க்கவில்லை.  தீரடிகலாக  அறிந்ததை ப்ராக்டிகலாக  செய்து பார்ப்பேன்  எனக்குப் பிடித்தது  ஆனால் அதில் இருக்கும்  வேலைக்காக  என் மனைவி செய்யத் தயங்குகிறாள் வேலை அதிகமென்று எனக்குத் தோன்ற வில்லை  வேலை என்று பார்த்தால் தேங்காய்ப்பால் எடுப்பதுதான்  சிரமமாக மனைவி நினைக்கிறாள் அளவுகள் அவர்களது  எக்ஸ்பீரியன்ஸ்  பிரகாரம் இருக்கட்டும்  நல்ல தேங்காய் களை உடைத்து   துருவிக் கொள்ளவும்  அதை மிக்சியில் இட்டு சிறிது நீருடன் அரைக்கவும்  அரைத்ததை எடுத்து நன்கு பிழிந்து பாலை எடுத்துக் கொள்ளுங்கள் இப்படி எடுக்கப்படும்பால் முதல் பால் தனியே வைக்கவும்  மீண்டும் நீர்விட்டு தேங்காயை  அரைக்கவும் நீர் சற்றுக் கூடுதலாக இருக்கலாம்  அதை மீண்டும்  எடுத்த்ப் பிழிந்து நீர் எடுக்கவும்  இது சிறிது அதிகமாக நீராக இருக்கும்   இது இரண்டாம்பால் இதே போல் தேங்காயின்  பாலை பூராவும் எடுக்கவும்  இது இன்னும்  நீர்த்து இருக்கும்   இதுமூன்றாம் பால் அளவில் கூட இருக்கும் அடுப்பில் சிறிது அரிசியை வேக வையுங்கள்  அதில் இருக்கும் நீர் தேங்காயின் பாலாக இருந்தால் சுவை கூடும் அதாவது அரிசியைதேங்காய்ப் பாலில் வேக வைக்கவும்  நீர் குறைவாக இருந்தால் தேங்காயின்  இரண்டாம் பாலைச் சேர்க்கலாம் அரிசி நன்கு வெந்து வரும்போது  தேவையான அளவு வெல்லம் சேர்க்கவும்  நன்றாக வெந்த தை எடுத்து கடைசியாக தேங்காயின் முதல் பாலைச் சேர்க்கவும்   அதில் முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து இடவும்  வாசனைக்கு சிறிது ஏலக்காய்ப் பொடியும்  சேர்க்கலாம்  இதுவே இடித்து பிழிந்த பாயசம்  என்ன நேயர்களே செய்து பாருங்கள் சுவையைக் கூறுங்கள்  அதற்குள் நானும்  என் மனைவியின்  உதவியுடன் செய்த்து பார்க்கிறேன் 
 அப்ப வரட்டா ….!              

Monday, 10 April 2017

எரிசேரி (மனைவி ஸ்டைல் )


                                          எரிசேரி
                                          -----------


ஒன்றிலிருந்து இன்னொன்று  என்பது போல் அண்மையில் ஏஞ்செலின் எழுதி இருந்த அவியல் லண்டன் ஸ்டைல்  என்பதைப் படித்த போது எனக்கும்  என் மனைவி செய்யும் எரிசேரி பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது ஓணம் சமயம்  எங்கும் பல நாட்களுக்கு இந்த அவியல் ஓடுமாதலால் அது குறித்து ஒரு அவெர்ஷன் என்று எழுதி இருந்தேன்  அதை ஏஞ்செல் எனக்கு அவியல் பிடிக்காது என்று புரிந்து கொண்டுள்ளார்  எனக்கு அவியல் பிடிக்கும் ஆனால் எதுவும்  அளவுக்கு மீறினால் அவெர்ஷந்தானே இங்கு நான்கொடுக்கும் சமையல் குறிப்பு என் மனைவி செய்வதை ஒத்து இருக்கும்  எரிசேரி ஒரு கேரள பதார்த்தம்   வெவ்வேறு வகையில் செய்கிறார்கள் ஆகவே இதுதான்  ஆதெண்டிக் முறை என்று கூற மாட்டேன் எரிசேரி என் மனைவி ஸ்டைல்  என்றுசொல்லட்டுமா  செய்து பாருங்கள் பிடித்திருக்கிறதா என்று கூறுங்கள் முன்னுரைக்குப் பின்  இப்போது செய்முறை
வழக்கம் போல் அளவுகள்குறிக்க வில்லை அவரவர் சுவைக்கு ஏற்ப என எடுத்துக் கொள்ளலாம் இது ஒரு எளிய செய்முறை
 சிறிது துவரம்பருப்போடு சேனை கிழங்கை ( தோல் சீவி நறுக்கியது ) வேகவைக்கவும்  அதில் சிறிது தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய்  சேர்த்து அரைத்ததைச் சேர்க்கவும் உப்பு போட மறக்க வேண்டாம்  கொதித்து வந்த கூட்டில் சிறிது கடுகு உளுத்தம்  பருப்பு தேங்காய் துருவியது சேர்த்து தாளிக்கவும் எரிசேரி மனைவி ஸ்டைல் ரெடி  பலரும் எரிசேரி இப்படி அல்ல என்றெல்லாம் சொல்லலாம் இது ஸ்பெஷல்    
                                          


Wednesday, 29 March 2017

பெசரெ ட்

                                   பெசரெட்
                                  --------------

இன்னும்  ஒரு எளிய சமையல் குறிப்பு
தோசை வகையில் இதுவும்  ஒன்று ஆந்திரா ஸ்பெஷல்  செய்வது எளிது ஒரு டம்ளர்  பாசிப்பருப்புடன்  இரண்டு ஸ்பூன்  பச்சரிசியும் கலந்து ஊறவைத்து அரைக்கவேண்டும்  அரைக்கும் போது சிறிது இஞ்சியும் பச்சை மிளகாயும்  சேர்த்து தோசைக்கு அரைப்பது போல் அரைத்து  கொள்ளவும் அரைத்த மாவில்  பொடியாக நறுக்கிய வெங்காயத்துடன்  சிறிது கொத்துமல்லித்  தழையும்  சேர்க்கவும்   உப்பு சேர்த்து கலக்கவும்  அதன்  பின்  என்ன  தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்  தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி அல்லது சற்றே உரைக்கும்  சட்னி ஏதாவது அவரவர் சுவைக்கேற்ப  செய்து பார்த்து சாப்பிடுங்கள்
               

Saturday, 25 March 2017

காராமணி புளிக்குழம்பு


                                    காராமணி புளிக்குழம்பு
                                   ----------------------------------


கடந்த நான்கைந்து நாட்களாக என்  இன்னொரு தளம் gmb writes  திறப்பதில்லை. எனக்கு கை ஒடிந்தமாதிரி இருக்கிறது இருந்தாலும்  இந்த வலைப் பூ நினைவுக்கு வந்தது மேலும்  இதில் எழுதியும் நாட்களாகி விட்டதுஆகவேஎன் எழுதும் உத்வேகத்தைக் குறைக்க இதில் ஒரு பதிவு காராமணி புளிக்குழம்பு எனக்குப் பிடித்தது. செய்யவும்  எளிது  ஆகவெ பகிர்கிறேன் 
காராமணியை (அல்லது தட்டைப்பயறு என்றும்  சொல்லப்படும்) முதலில் வேகவைத்துக் கொள்ளவும்  என் குறிப்புகளில் அளவு கூறுவதைத் தவிர்க்கிறேன்  செய்ய வேண்டிய அளவு ஒவ்வொருவர் ருசி போல் அளவுகள் வேறு படும்  புளிக்கரைசலில்  மஞ்சப்பொடி உப்பு  போட்டுக் கொதிக்கவைக்கவும் நன்கு கொதி வந்து பச்சை வாசனை போன பின்  வேகவைத்திருக்கும்  காராமணியை அதில் சேர்க்கவும் சிறிதுநேரம் கொதித்தபின் அதற்குபிறகு தேங்காய் சீரகம் காய்ந்த மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தது சேர்க்கவும் பிறகு சிறிது கொதித்தபின்  கடுகு நறுக்கிய சின்ன வெங்காயம் சீரகம்  கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
 எனக்கு சாதத்துடன்  இந்தகுழம்பில் எள் எண்ணை கலந்து சாப்பிடப் பிடிக்கும்   நீங்களும்  செய்து சாப்பிட்டுப்பாருங்களேன்