Friday 24 July 2015

மத்தூர் வடை

                         
                                         மத்தூர் வடை
                                         ------------------
மத்தூர் வடை
--------------
இரண்டு தளங்களையும் பராமரிப்பதில் நேரச்சிக்கல் நேரிடுகிறது. அதற்காகஎன்னைக் கைவிட்டு விடுவாயா என்று தளம் பூவையின் எண்ணங்கள் கேட்கிறது. சமையலுக்காக ஒரு தளம் இருக்கும்போது சமையல் குறிப்புகளை அதில் எழுதுவதுதானே நியாயம்
மணப்பாறை என்றாலேயே முறுக்கு நினைவுக்கு வருகிறது. அது போல்கர்நாடகாவில் மத்தூர்(MADDUR) என்றால் நினைவுக்கு வருவது மதூர் வடை. செய்வதும் எளிது.  தேவையான பொருட்கள்
ரவை, அரிசி மாவு மற்றும் சேர்க்க பச்சை மிளகாய், பொடியாக அரிந்த வெங்காயம் பச்சைக் கொத்துமல்லி. சுவை சேர்க்க நிலக்கடலை அல்லது முந்திரிப் பருப்பு,,   .  மற்றும் வடையைப் பொறித்தெடுக்க எண்ணை. ரவை அரிசிமாவு மற்ற பொருட்கள் எல்லாம் செய்யும் அளவைப் பொறுத்தது ஆதலால் குவாண்டிடி கொடுக்கவில்லை. ஆனால் ஒரு பங்கு ரவைக்கு கால் பங்கு அரிசிமாவு. இந்த ரவை அரிசி மாவை சிறிது வெண்ணை சேர்த்துப் பிசையவும்  இந்தக் கலவையில் அரிந்த வெங்காயம் பச்சை மிளகாய் முந்திரி அல்லது நிலக்கடலை போன்றதைக் கலக்கவும் சிறிதே நீரூற்றி  உப்பு சேர்த்து வடை தட்டும் பதத்துக்கு கொண்டுவரவும்
பிறகு என்ன.? காய வைத்த எண்ணையில் தட்டிய வடையைப் பொறித்தெடுக்கவும் சுவையான மத்தூர் வடை தயார்.


14 comments:

  1. கேள்விப் பட்டதில்லை. ரவை வடை! ஒருமுறை முயற்சி செய்துடலாம்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சாப்பிட்டிருக்கிறேன். கர்நாடகாச் சுற்றுலாவின் போது! கொஞ்சம் எண்ணெய் குடிக்குதோனு சந்தேகம். அதே போல் அக்கி ரொட்டியும் முழுதும் அரிசிமாவில் கொத்துமல்லி, வெங்காயம் சேர்த்துச் செய்வாங்க. அது சாப்பிட்டதில்லை. :)

    ReplyDelete
  4. கேள்விப்பட்டதுமில்லை
    சாப்பிட்டதுமில்லை
    சுவைக்க முயற்சிக்கணும்

    ReplyDelete
  5. @ ஸ்ரீராம்
    செய்வதற்கு எளிது. சுவையாய் இருக்கும்

    ReplyDelete
  6. @ கீதா சாம்பசிவம்
    அரை மணிநேரத்தில் செய்து விடலாம் முதலில் கொஞ்சமாகச்செய்து பாருங்கள் பிடிபட்டுவிடும்

    ReplyDelete
  7. @ ரமணி
    இங்கு கர்நாடகாவில் பெயர் பெற்றது அதற்குத்தான் மணப்பாறைக்கு முறுக்கு போல் என்றேன் செய்து பார்த்துச்சொல்லுங்கள்

    ReplyDelete
  8. இப்பொழுதுதான் உங்களின் இந்தத் தளம் தெரியும்.

    சமையல் என்றால் அது சாப்பிடும் திறமைதான் என்னிடம் இருக்கிறது.


    வீட்டில் சொல்கிறேன்.


    நன்றி.

    ReplyDelete
  9. 'மொரு மொரு'வென்று இருக்கும் என்று நினைக்கிறேன்... செய்து பார்க்கிறோம்... நன்றி ஐயா...

    ReplyDelete
  10. மத்தூர் வடை செய்ததுண்டு....செய்வதும் மிகவும் எளிது...சுவையும் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  11. சூப்பரான வடை இது. நானும்
    மத்தூர் வடை பதிவிட்டு இருக்கிறேன். நன்றி

    ReplyDelete
  12. மத்துர்ர் வடை.... கேள்விப்பட்டதில்லை.

    குறிப்பு கிடைத்திருக்கிறது. செய்து பார்த்து விடுகிறேன். விரைவில்! :)

    ReplyDelete
  13. நான் செய்து இருக்கிறேன். நன்றாக இருக்கும். செய்முறை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  14. மத்தூர் வடையா ? பெயர்தான் ஒரு மாதிரி இருக்கு , ஆனா ரெசிபி புது மாதிரி இருக்கே !!! வடையில் முந்திரிபருப்பு, நிலக்கடலை பருப்பு... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete