Monday 10 December 2018

கொத்தமல்லி கட்டி


                                       கொத்தமல்லி  கட்டி                                     ------------------------------------

கொத்துமல்லிக் கட்டி  தேவையான பொருட்கள்
கொத்தமல்லி தழை ஒரு கட்டு 
உளுத்தம்பருப்பு 
சிறிது புளி
காய்ந்த மிளகாய்
உப்பு  தாளிக்க சிறிது  எண்ணை
செய் முறைமிக எளிது
எண்ணையில் உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாயை வறுத்தெடுக்கவும்  கொத்தமல்லித்தழையை  அலம்பி பொடியாக  நறுக்கவும் மிக்சியில் உளுத்தம்பருப்புமிளகாயை போட்டு அரைக்கவும் அதிகம் அரைக்க வேண்டாம் அதிலேயே கொத்தமல்லி புளி உப்பு சேர்த்து ஓட விடவும்  அரைத்ததை  விழுதாகக் கூடாது எடுத்து சிறு சிறு உருண்டைகளாக்சப் பிடித்து கொள்ளவும்  இதைசாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம் இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்  சில நாட்கள் கெடாமல் பாது காக்கலாம்  

8 comments:

  1. செய்த அனுபவம் உண்டு.

    ReplyDelete
  2. கொத்துமல்லி மிளகாய்ப்பொடி என்போம் எங்க வீட்டில். முன்னெல்லாம் கல்லுரலில் போட்டு இடித்தது உண்டு. இப்போக் கழுவி நீரை நன்கு வடிகட்டிக் கொஞ்சம் உலர்ந்தாற்போல் ஆனதும் மிக்சியில் போட்டு அரைக்கிறோம். கஞ்சிக்குத் தொட்டுக்க ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டில் எப்போதுமே துவையல் வகைகளும் ஊறுகாய் வகைகளும் அடிக்கடி பண்ணும்படி இருக்கும். கொஞ்சமாகத் தான் செய்வோம். வீணாகக் கூடாது என! ஆகவே அடிக்கடி பண்ணும்படி இருக்கும்.

    ReplyDelete
  3. கீதா சொல்வது போல் இடித்து செய்வோம்.
    தவணப்புளி என்று சொல்வோம்.
    கொத்தமல்லியை கழுவி துணி விரிப்பில் ஈரம் போக செய்துவிட்டு பின் மிளகாய் உளுந்து, கடுகு கொஞ்சம் வறுத்து அதனுடன் , புளி மல்லியை லேசாக வதக்கி ஆறியவுடன் இடித்து கைபடாமல் ஜாடியில் எடுத்து வைப்போம்.

    இப்போது மிக்ஸியில் செய்கிறேன்.

    நார்த்தங்காய் இலையில் இப்படி கட்டி செய்வார்கள்.

    ReplyDelete
  4. கொத்தமல்லிதளை, கருவேப்பிலை, புதினா இலைகளை வதக்கியும் இது போல் செய்வேன். லேசாக வதக்கி செய்வேன்.

    ReplyDelete
  5. எனது வீட்டிலும் அடிக்கடி செய்வார்கள்...

    ReplyDelete
  6. நானும் செய்வேனே.. அருமையான சுவை.

    ReplyDelete
  7. "சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்" ... என்று சொல்லியுள்ளீர்கள் ... எனவே இதை "கொத்தமல்லி உருண்டை" என்று சொல்வதே பொருத்தமாகும் ... நீங்கள் வைத்துள்ள தலைப்பில் எழுத்துப்பிழையோடு இலக்கணப் பிழையும் கலந்தே உள்ளது ஐயா... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete