Monday 7 January 2019

நேந்திர ஜாமூன்



                                            நேந்திர ஜாமூன்
                                            --------------------------

 நேந்தரப்பழத்தை கேரளத்தில் ஏத்தப்பழம் என்பார்கள்  எனக்கு நேந்திரப் பழத்தை  சாப்பிடப்பிடிக்காது  என்மனைவிக்குப்பிடிக்கும் எப்படியாவதுஅப்பழத்தை நான்  சாப்பிட வேண்டும் என்று என்மனைவி அதை வைத்து ஜாமூன் செய்து என்னை சாப்பிட வைத்தாள்  யான்பெற்ற இன்பம் வலை உலகோரும் பெற அதன் ரெசிப்பி இதோ மிக எளிது செய்து சாப்பிட
 தேவையான பொருட்கள்
 நேந்திரம் பழம்வெல்லம் பொடி செய்தது பொடி செய்தஏலக்காய்  தேங்காய் துருவினது  நெய்
நான் வழக்கம்போல் அளவுகளை கூறப்போவது இல்லை  அவரவர் ருசிக்கு ஏற்ப /எடுத்துக் கொள்ளலாம்  பொதுவாக இதைச்செய்து பார்க்கப்போகிறவர்சள்  சமையலில் தேர்ந்தவராய் இருப்பவர்களே ஒரு வித்தியாசமான ரெசிப்பி செய்து பார்க்கலாமே நேந்திரம்பழத்தை தோலுறித்து  நறுக்கிக் கொள்ளவும்  சைஸ் வாயின்  அளவு பொறுத்தது நறுக்கிய பழத்துண்டுகளை கடாயில் நெய் ஊற்றி வதக்கவும்  வதக்கி யபின்   பொடி செய்த வெல்லத்தைப் போடவும்  வெல்லம் பழத்துண்டுகளில் நன்கு இளகி பிடிக்கும்  தேங்காய்த் துறுவலையும் ஏலக்காய் ப்டியையும்  சேர்க்கவும் பழம்  வெல்லத்துடன் கலந்து அதில் தேங்காய் துறுவலும்  சேர்ந்து வரும்போது இறக்கி வைக்கவும்  சிறிது ஆறியவுடன்சாப்பிடலாம்
எனக்குப் பிடித்தது அப்ப உங்களூக்கு…?   
      

6 comments:

  1. சிறுமலை வாழைப்பழம் or பழனி பஞ்சாமிர்தம்...!

    ReplyDelete
  2. நேந்த்ரபழ சிப்ஸ் திருப்பூரில் 100 கிராம் 130 100 கிமீ தொலைவில் பாலக்காட்டு எல்லையில் ஒரு கிலோ 130 ரூபாய்.

    ReplyDelete
  3. நேந்திரம்பழ சிப்ஸ் எப்போதுமே என் பேவரைட். திருவனந்தபுரம் சென்றபோது நேந்திரம்பழ பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். இது புதிதாக இருக்கிறது.

    ReplyDelete
  4. பொதுவாகப் பழங்கள் மிஞ்சினால் இதைச் செய்வதுண்டு. நெய்யில் வதக்காமல் நெய்யை அப்படியே சேர்த்து!

    ReplyDelete
  5. நேந்தரப்பழத்தை கேரளத்தில் ஏத்தப்பழம் என்பார்கள். உண்மைதான், ஆனால் அவர்கள் அதை ஆவியில் நன்றாக அவித்து அதன்பின்பே சாப்பிடுகின்றனர். >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete