Saturday 26 April 2014

கோபி மஞ்சூரியன்


                                                     கோபி மஞ்சூரியன்
                                                      -------------------------


பெயரிலிருந்தே தெரிகிறது இது ஒரு இந்திய சீனச் சமாச்சாரம் என்று. கோபி என்பது நாம் தமிழில்(?) காலிஃப்லவர் என்று அழைக்கும் பூ. மஞ்சூரியா சீன தேசத்தின் ஒரு பகுதி. அண்மையில் நாங்கள் கேரளா ஒத்தப்பாலத்தில் மஹாராஜாவின் கொட்டாரம் என்று அழைக்கப் பட்ட விடுதியில் தங்கினோம். இரவு உணவுக்கு முன் ஸ்டார்டராக இந்த கோபி மஞ்சூரியன் ஆர்டர் செய்தார்கள். விலை மஹா ராஜாக்கள் கொடுக்கக் கூடியதே. ஒரு ப்லேட் ரூ.200-/ என்று நினைக்கிறேன் அதை உண்ணும்போது என் மனைவி செய்யும் கோபி மஞ்சூரியன் நினைவுக்கு வந்தது. பெங்களூர் திரும்பியதும் அவளிடம் அதை சமைக்கச் சொல்லி கேட்டு உண்டேன். அதன் செய்முறையைத்தான் பூவையின் எண்ணங்களில் பகிர்ந்து கொள்கிறேன் (பின் பதிவில் பதார்த்தத்தையா பகிர முடியும்?)

 நல்ல காலிஃப்ளவர் வாங்கிக் கொள்ளுங்கள். மஞ்சள் நிறத்தில் இருக்கக் கூடாது என்கிறாள் என் மனைவி. பூவை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும் நல்ல நீரைக் கொதிக்க வைக்கவும் ( சிறிது உப்பு கலந்து) அதில் நறுக்கிய பூத்துண்டுகளைப் போட்டு மூடி வைக்கவும் அடுப்பை அணைத்து விட்டு அப்படியே அதை சுமார் இருபது நிமிடங்கள் வரை வைக்கவும்.  அது கொதிநீரில் வேகும் போது .............
 ஒரு பாத்திரத்தில் சிறிது மைதாமாவையும் சிறிது கார்ன் ஃப்ளௌரையும் சிறிது சோயா சாசையும் சிறிது இஞ்சிப் பூண்டு விழுதையும் தேவைக்கேற்ப . ஒரு சிட்டிகை மிளகாய்ப் பொடியையும் தேவையான அளவு உப்புடன் கலந்து பஜ்ஜிக்கு இடும் மாவு பதம் வருமாறு நீர் ஊற்றி கலக்கவும் கடாயில் எண்ணை ஊற்றி அது நன்கு சூடானதும், வேகவைத்த காலிஃப்ளவர்களை நன்கு நீர் வற்றப் பிழிந்து எடுத்து பஜ்ஜிமாவில் கலக்கவும் பின் அவற்றை எண்ணையில் பொரித்து எடுக்கவும்
க்ரேவி செய்ய
--------------
வெங்காயம் பச்சைமிளகாய் ( காரத்துக்கு தக்கபடி)நறுக்கியது  சிறிது,இஞ்சிப் பூண்டு விழுது இவற்றை எண்ணையில் நன்கு வதக்கவும்  சிறிது கார்ன் மாவை நீரில் கலக்கி ( சீராக கட்டி யில்லாமல்) வதக்கிய கலவையில்  கடாயில் தேவையான உப்பு இட்டு ஊற்றவும் ., க்ரேவியின் பதம் தேவைப்பட்ட அளவு வரும் வரை கிளரவும், சரியானபதம் வரும்போது பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் துண்டுகளைப் போட்டுக்கிளரவும் சிறிது அள்வு சோயாசாஸும் சேர்க்கவும்  காலிஃப்ளவர் துண்டுகள் க்ர்ரெவியில் நன்றாக கலந்தபின் கலவையில் டொமாடோ சாஸ் கலக்கவும்
கோபி மஞ்சூரியன் dry யாக இருக்கவேண்டுமானால் க்ரேவியில் நீரின் அளவைக் குறைக்கவும் . க்ரேவியுடன் வேண்டுமென்றால் க்ரேவி கூழான பதம் வருமாறு தயாரிக்கவும்
நன்கு பொடியாக அறுத்த கொத்துமல்லி தழையைச் சேர்க்கவும்
சிலருக்கு காரசாரமாக மஞ்சூரியன் இருக்க வேண்டுமானால் நறுக்கிய பச்சை மிளகாயின் அளவைக்கூட்டலாம் சிலருக்கு இஞ்சிப் பூண்டு வாசனையும் சுவையும் குறைவாக இருக்கப் பிடிக்கும். அதற்கேற்ப அவற்றின் அளவை சேர்க்கலாம் விரும்பிய சுவையில் கோபி மஞ்சூரியன் தயார்.     

       
   

    

9 comments:

  1. செய்து ரசித்துச் சாப்பிட்டிருக்கிறோம்!

    ReplyDelete
  2. குறிப்பு அருமை. சில வித்தியாசங்களுடன் செய்வதுண்டு.

    ReplyDelete
  3. ருசியான குறிப்புகள்..

    ReplyDelete
  4. சில வித்தியாசங்களுடன் செய்வேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வித்தியாசமான குறிப்பு ஐயா... செய்து பார்க்கிறோம்... நன்றி...

    ReplyDelete
  6. பதார்த்தத்தைக் கொடுக்காவிட்டால் போகிறது. அதன் படத்தையாவது கண்ணில் காட்டியிருக்கக்கூடாதா?

    ReplyDelete
  7. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  8. mouth watering recipe! Very well described!

    ReplyDelete
  9. செய்து பார்ப்போம்.

    ReplyDelete