Friday 8 February 2019

ரிப்பன்பக்கோடா



                                                        ரிப்பன் பக்கோடா
                                                         --------------------------

ரிப்பன் பக்கோடா
 மதிய நேரம் மழைக்காலங்களில் பக்கோடா செய்து சாப்பிடுவது பிடிக்கும் ஒரு முறை கோவையில் என் நண்பன்  ஒருவன்வீட்டில் பக்கோடா தந்தார்கள் நல்ல மொறுமொறுவென இருந்தாலும் வாயில் வைத்ததும் கரைந்தது  அது முதல் என் மனைவியிடம் அதே மாதிரி பக்கோடா செய்து தர கேட்பேன் அதன் அடிப்படையே நாம் அதில் சேர்க்கும் மாவின் கலவைதான் என்பாள் என் மனைவி  சில நாட்களுக்கு முன் ரிப்பன் பக்கோடா செய்தாள்  நன்றாக இருந்தது பூவையின் எண்ணங்களில்  பதிவிட செய்முறை கேட்டேன் 
தேவையான பொருட்கள்
 அரிசி மாவு கடலைமாவு பொட்டுக்கடலை மாவு வெண்ணை  சீரகப் பொடி மிளகாய்ப் பொடி பெருங்காயப்பொடி  உப்பு எண்ணை  
அளவுகள் ஓரொர் இடத்தில் மாறு படும்நல்ல க்ரிஸ்பான ரிப்பன்பக்கோடாவுக்கு  பொட்டுக்கடலை மாவு துணை போகும்   சாதாரணமாக ரெசிப்பிகளில் பொட்டுக்கடலை மாவு சொல்ல மாட்டார்கள்
எந்த அளவானாலும் மூன்றுக்கு இரண்டுக்கு ஒன்று என்னும்வீததில் கடலை மாவு அரிசி மாவு பொட்டுக்கடலைமாவு  இருக்க வேண்டும்  முதலில் செய்யும் போது சிறிதே குவாண்டிடியில் செய்யவும் சரியாக வந்தால் அடுத்தமுறை அதிகம் செய்யலாம்
 முதலில் எல்லா மாவையும்சிறிது வெண்ண கலந்து நன்றாக மிக்ஸ்செய்யவும் இந்தக்கலவையை நீர் ஊற்றி  சற்று கெட்டியாகவே பிசையவும்  அப்போதே  மிளகாய்ப் பொடிசீரகப் பொடி பெருங்காப்பொடி உப்பு  எல்லாம்சேர்த்து நன்கு கலக்கவும்  அச்சில் போட்டு பிழியும்  அளவுக்கு கெட்டியாக இருக்கட்டும்  நீர்க்க வேண்டாம்  வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன்ரிப்பனச்சில் எண்ணையில் பிழியவும் மொறு மொறுவெனவரும்போது எடுத்து விடவும்
என்னதான் ரெசிப்பி கொடுத்தாலும் செய்பவரின் ஞானமும்   இருக்கிறது என்பதே அனுமானம் 
 என்ன நண்பர்களே ரிப்பன் பக்கோடா அல்லது ஓலைப்பக்கோடா  எப்படி வந்தது என்று
சொல்லுங்கள் 


8 comments:

  1. பொட்டுக்கடலை மாவு கலக்காமல் ரிப்பன்/நாடாவோ அல்லது தட்டையோ செய்ததில்லை. நாங்கல்லாம் முன்னாடி கல்லுரலில் புழுங்கலரிசியை அரைச்சுச் செய்வோம். அப்போ இருந்தே பொட்டுக்கடலை மாவு தான் பழக்கம். காரத்தைச் சேர்த்தே அரைத்து விடுவோம். தேங்காயும் அரைக்கையில் சேர்க்கலாம். சீரகம் கை முறுக்கு, உளுந்துத் தேன்குழல் ஆகியவற்றில் மட்டும் போடுவோம். ரிப்பன்/தட்டை போன்றவற்றில் போட்டதில்லை. என் மாமியார் எள் போடுவார். நான் எள் அதிகம் சேர்க்க மாட்டேன்.

    ReplyDelete
  2. அருமை ஐயா... உங்கள் அனுமானத்தை அன்பு என்றும் சொல்லலாம்...!

    ReplyDelete
  3. அன்று அமைவதைப் பொறுத்தும் அமையும்! எங்கள் வீட்டில் தீபாவளிக்கு மட்டும் செய்யும் பட்சணம்!

    ReplyDelete
  4. ரிப்பன் பக்கோடா
    அல்லது
    ஓலைப்பக்கோடா
    என்பதை
    இன்று தான் அறிகிறேன்!
    அருமையான பதிவு!

    ReplyDelete
  5. நல்லாயிருக்கு ரெசிப்பி.. செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  6. அருமையான பதிவு. சில விடயங்கள் எமக்குத் தெரியாமல் மறைந்து போகின்றன. உங்கள் போன்றோரின் பதிவுகளே எம்மை எழுப்பி விடுகின்றன

    ReplyDelete
  7. அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே செய்பவருக்கு கொஞ்சம் ஞானமும் இருந்தால்தான் சரியாக வரும் என்று ... பக்கோடாவெல்லாம் படிப்பதோடுசரி ... சாப்பிடமுடியாது போலுள்ளது ஐயா... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete