Saturday, 6 April 2013

அடிப்படை சமையல்----2


                                             டீ போடத்தெரியுமா.?
                                             -----------------------------
சென்ற பதிவில் காஃபி போடும்முறை பற்றி எழுதி இருந்தேன். ாஃபி குடிக்கும் பக்கம்  பொதுவாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில்தான் அதிகம். மற்ற மாநிலங்களில் பெரும்பான்மையோர் விரும்புவது, டீ அல்லது சாய். முதன் முதலில் டீ போடுவது எப்படி என்று என்னுடைய ஏழு எட்டு வயதிலேயே கற்றேன். நாங்கள் அரக்கோணத்தில் இருந்தபோது , என் சித்தப்பா லிப்டன் டீ கம்பனியின் டெமான்ஸ்ட்ரேடர்- ஆக வேலையில் இருந்தார், வீட்டுக்கு வீடு சென்று டீ போடும் செயல் முறை விளக்குனராக இருந்தார். அப்பொது டீ போடுவது எப்படி என்று கற்றது. டீ போடும்போது தேயிலைத் தூள் அல்லது தேயிலை  இலையாக உபயோகிப்பது என்று இருவகைப் படும். முதலில் தேயிலைத்தூள் கொண்டு தேநீர் தயாரிப்பதைப் பார்ப்போம். நீரை நன்றாகக் கொதி க்க வைக்க வேண்டும். அடுப்பை அணைத்து கொதித்த நீரில் தேயிலைத்தூளை இடவேண்டும் தேயிலையின் அளவு எல்லாம் அவரவர் ருசிக்கு ஏற்றபடி இடுவது போகப் போகப் பழகிவிடும், தேயிலைத் தூள் இறங்க சற்று நேரம் அனுமதிக்க வேண்டும். பிறகு அதை வடிகட்டியில் விட்டு  கசடை எடுக்க வேண்டும். வடிகட்டிய நீரில் தேவைக் கேற்ப காய்ச்சிய பாலை ஊற்ற வேண்டும். சர்க்கரை யும் தேவைக்கேற்ப சேர்க்கவும். நல்ல தேநீர் தயார். இதில் நான் எந்த குறிப்பிட்ட அளவும் கொடுக்கவில்லை. ருசி என்பது ஆளாளுக்கு மாறு படும். தேயிலையை உபயோகிக்கும்போது கொதி நீரில் தேயிலையை கலந்து நீருடன் கொதிக்க வைக்க வேண்டும். இருந்தால்தான் தேநீர் நன்றாக இருக்கும். முக்கியமாக பார்க்க வேண்டுவது உபயோகிப்பது தேயிலையா இல்லை டீத்தூளா என்பதாகும்.
எந்தமுறையில் செய்தாலும் காய்ச்சும் பால் ஃப்ரெஷ்ஷாக இருந்தால் சுவை கூடும். சிலர் தேயிலை தயாரிக்கும்போது சிறிது சுக்குப் பொடியும் ஏலக்காய் பொடியும் கலப்பார்கள். மசாலா டீ என்று சொல்வார்கள். எந்த பொருளும் அதன் ஒரிஜினல் சுவையோடு இருந்தால்தான் நல்லது.
சிலருக்கு லெமன் டீ என்றால் விருப்பம்.பால் சேர்க்காத தேத்தண்ணீரில் எலுமிச்சை சாறை ஊற்றி அதன் சுவையில் திளைப்பவரும் உண்டு.
காஃபி ,மற்றும் டீ குடிப்பவர்கள் பலரகம். டபரா டம்ளரில் நுரை வரும்படி ஆற்றிக் குடிப்பவர் ஒரு வகை என்றால் ஒரு கப் டீயை அரை மணிநேரத்துக்குமதிகமாக வைத்துக் குடிப்பவர் ஒரு ரகம். காஃபி ,டீ குடிக்குமளவும்  வேறுபடும். சில வீடுகளில் காஃபி பூனா டம்ளர் என்று சொல்லப் படும் பெரிய டம்ளரில் குடிப்பார்கள் கொடுப்பார்கள். இப்போது பெஙகளூரில் கடைகளில் 15-லிருந்து 25 மில்லிலிட்டர் அளவு காஃபியும் டீயும் விற்கப் படுகிறது.

எங்களுக்குத் தெரிந்த மங்களூர் குடும்பத்தினர் நீர்த்தோசை என்று தோசை சுடுகிறார்கள். செய்வதற்கு எளிது. முயற்சி செய்து பாருங்களேன். வெறும் பச்சை அரிசியை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து மிக்சியில் அரைத்துக்
 கொள்ளவும்  நீர்த்த பதமாக இருக்கலாம். தேங்காய் த் துருவலையும் சேர்த்துக் கொள்ளவும். உப்பு போட்டு அரைத்த மாவை தோசைக் கல்லில் ஓரத்திலிருந்து ஊற்றவும். மெலிசாக இருக்கவே நீர்த்த நிலையில் மாவு இருக்க வேண்டும். சாதா தோசைக்கல்லே பரிந்துரைக்கப் பட்டது. நான் ஸ்டிக்கர் கூடாது. இருபக்கமும் வெந்தவிடன் எடுத்தால் மெல்லிய நீர்த்தோசை ரெடி.
இனி அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

11 comments:

  1. நீர் தோசை விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் தேநீர் பல முறையில் போடலாம். நீங்க சொல்லி இருப்பது பாரம்பரிய முறை. வேறு முறைகளும் உள்ளன. நீர்த்தோசை எனக் கேட்டதில்லை. கூழ் தோசை தெரியும்.

    ReplyDelete
  3. நீர் தோசை சாப்பிட்டே ஆக வேண்டும்

    ReplyDelete
  4. சுவையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. சமையலறையிலும் இப்ப உங்க ஆதிக்கம்தானா ஐயா?

    ReplyDelete
  6. இங்கு உணவகங்களிலும் இப்போது இந்த நீர் தோசை கிடைக்கிறது. இதற்குத் தொட்டுக் கொள்ள வெல்லம் கலந்த தேங்காய் துருவல் ஒரு கிண்ணத்தில் கொடுக்கிறார்கள்.
    டீ தயாரிப்பு செய்முறை நன்றாக இருக்கிறது.
    எங்கள் வீட்டில் பாதி அளவு தண்ணீர், பாதி அளவு பால் எடுத்துக் கொண்டு அதில் தேயிலை, சர்க்கரை போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டிவிடுவோம்.
    டீயை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது என்கிறார்கள்.

    ReplyDelete
  7. நீர்த்தோசை இந்த ஊரில் பிரபலமாயிற்றே. குறிப்புக்கு நன்றி.

    ReplyDelete
  8. விரத நாட்களில் குறிப்பாக வரலக்ஷ்மி விரதத்தின்போது பச்சரிசி தோசை வார்ப்பதுண்டு. ஆனால் அந்த நேரத்தில் தேங்காய்த் துருவல் எல்லாம் போடுவதில்லை! இது ஒரு முறை முயற்சித்துப் பார்த்து விடுவோம்! நன்றி, லிங்க் கொடுத்ததற்கு.

    டீ போடும்போது கொதிக்கும் தண்ணீரை அடுப்பை அனைக்காமலேயே நாங்கள் டிகாக்ஷன் எடுப்போம்.

    ReplyDelete
  9. ஸ்ரீராம், தேயிலை என்றால் ஊற நேரம் கொடுக்க வேண்டும். அநேகமாய் பாட் டீ கொடுக்கும்போது தேயிலையைப் போட்டுத் தான் ஊற வைத்த பாட்கள் வரும். கூடவே சூடான பால் ஒரு பீங்கான் பாட்டில், சர்க்கரை தனியாக. அந்தத் தேநீரின் சுவை தான் அபாரமாக இருக்கும். இங்கே தின்சரி வீடுகளில் போடுவது தூள் தான். அதிலே அவ்வளவு சுவை இருக்காது.

    ReplyDelete
  10. விரத நாட்களில் எங்க வீடுகளில் எல்லாம் பச்சரிசி இட்லி தான் செய்வோம். :)

    ReplyDelete
  11. பச்சரிசி இட்லிதான். தோசை என்று தவறாகச் சொல்லி விட்டேன்.

    நாங்கள் டீத்தூள்தான். இலை போட்டு எல்லாம் குடிப்பதில்லை. மேலும் டீயே மிக அதிசயமாகத்தான். மற்றபடி காபி, காபி, காபிதான்!

    ReplyDelete