Tuesday, 9 April 2013

சென்னா பட்டூராவா, சோலே பட்டூராவா





சென்னா பட்டூராவா, சோலே பட்டுராவா.?


சென்னா பட்டூராவா , சோலே பட்டூராவா.?
---------------------------------------------------------

பெயர் என்னவாக இருந்தால் என்ன..?இந்தப் பதிவைப் படித்து முடித்த பிறகு பெயரை நீங்களே வைக்கலாம். பல பல வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்திருந்தோம். பெசண்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோயில் தரிசனம் செய்ய வந்தபோது  எங்கள் உறவினர் ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இந்த உணவை ஆர்டர் செய்தார்கள். அப்போதிலிருந்தே எனக்கு பெயர் சந்தேகம் இது வரை தீர்ந்தபாடில்லை. A ROSE IS A ROSE BY WHATEVER NAME YOU CALL IT. அன்றையிலிருந்து எனக்கு மிகவும் விருப்பமான உணவு இது. செயல் முறை விளக்கம் தருகிறேன். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள்.

முதலில் சோலே அல்லது சென்னா செய்யும் முறை

தேவையான பொருட்கள். 1.) வெள்ளை கடலை, ( காபுல் சென்னா என்றும் கூறுவார்கள். ) சுமார் ஒரு கப். முதல் நாள் இரவிலேயே ஊறவைத்துக் கொள்ளவும்.2) வெங்காயம் மூன்றோ நான்கோ( பெரியது) 3). தக்காளி சுமாரான சைசில் நான்கு.4) இஞ்சி கொஞ்சம்5) கொத்தமல்லித் தூள் . 6) மிளகாய் தூள்
7) தாளிக்க சீரகம் , கடுகு. 8.) எண்ணை  தேவையான அளவு. 9) பச்சைக் கொத்தமல்லி 10) புளி கொஞ்சம் 11) உப்பு தேவையான அளவு. 

ஊறவைத்த கடலையை நன்றாகக் கழுவிக் குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும் இஞ்சி,வெங்காயம் தக்காளியை நறுக்கி தனித்தனியே மிக்சியில்  அரைத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணைவிட்டுகடுகு சீரகம் தாளிக்கவும். அதில்  அரைத்துவைத்த விழுதை வதக்கவும் அதில் கொத்தமல்லித் தூள் மிளகாய்த்தூள்  சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையில் வேகவைத்த வைத்த கடலையில் சிறிது எடுத்துவைத்து மீதியைப் போடவும்தேவையான அளவு உப்பு சேர்த்து  சிறிது நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். சிறிது எடுத்து வைத்திருந்த கடலையை மிக்சியில் ஒரு சுற்று ஓடவிட்டு அதை வாணலியில் இருக்கும் கலவையில் ஊற்றவும். இதில் சிறிது புளி கரைத்த நீரை  நன்றாகக் கலந்து கொதித்தபிறகு இறக்கி வைத்து அதில்வறுத்துப் பொடி செய்து வைத்த சீரகமும்  பொடியாக நறிக்கிய பச்சைக் கொத்துமல்லியைம் சேர்க்கவும் சுவையான சோலே தயார் ( புளி கரைத்த நீர் சிறிது புளிப்பு சுவை சேர்க்கவே. அதற்குப் பதிலாக ஆம்சூர் பொடி கலக்கலாம்.  இந்த செய்முறையில் அளவுகள் அவரவர் ருசிக்கேற்றபடி உபயோகிக்கலாம். சமையலில் அளவுகள் எல்லாம் கண்பார்த்து கை செய்ய வேண்டியது என்பார் என் மனைவ)

அடுத்து பட்டூரா செய்யும் முறை. 
கோதுமை மாவோ மைதா மாவோ கொண்டு பூரி செய்வது போல் தான். இதில் ஒரே வித்தியாசம் என்னவென்றால் உருளைக் கிழங்கை நன்றாக வேக வைத்து தோலை நீக்கி மசித்துக்கொள்ள வேண்டும். பூரிக்கு மாவு பிசையும்போது நீரே கலக்காமல் மசித்த உருளைக் கிழங்கில் மாவைச் சேர்த்துப் பிசைய வேண்டும் சிறிதே அளவு பொடி உப்பு சேர்த்து. பூரி இடும் பதம் வரும்வரை மாவைக் குழைக்க வேண்டும்ன்ண் ண்டும். பிறகு சப்பாத்திக்கல்லில் பூரிக்கு உருட்ட வேண்டும். மிகவும் மெலிதாகவும் இருக்கக் கூடாது. தடிமனாகவும் இருக்கக் கூடாது. பிறகென்ன ? வாணலியில் தேவையான அளவு எண்ணை ஊற்றி  நன்றாகக் காய்ந்தபிறகு பூரி வார்த்தெடுக்க வேண்டும்.
நண்பர்களே நண்பிகளே யம்மி யம்மி சோலே பட்டூரா ரெடி. 
செய்து பார்த்து ருசியுங்கள்.     

9 comments:

  1. யம்மி யம்மி சோலே பட்டூரா ரெடி.

    ருசியான சமையலுக்கு அருமையான பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இப்போது சரியாக வந்திருக்கின்றன. வாழ்த்துகள். பஞ்சாபில் சோலே என்றே சொல்வார்கள்.

    ReplyDelete
  3. செய்முறை குறிப்புக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  4. ரொம்ப நாளாய் இதை எப்படி செய்றதுன்னு தெரியாம முழிச்சேன் இனிமே கத்துட்டு கலக்கிடமாட்டேன் ?:) நன்றி!

    ReplyDelete
  5. அன்பின் ஜி எம் பி அய்யா - சமையல் குறிப்பு அருமை - பொறுமையாக எழுதப்பட்ட பதிவு - பெங்களூரு வந்து உங்க வீட்ல சோளா பட்டூரா சாப்ப்டணூம் - நல்வாழ்த்துகள் நட்புடன் சீனா

    ReplyDelete
  6. சுவையான சமையல்..

    ReplyDelete
  7. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள் ஐயா!
    உங்களது திருமதியின் உதவியுடன் இந்த தளத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று படித்தேன்.
    அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  8. சோலே பட்டூரா மிக அருமையாக இருக்கிறது.
    உங்கள் மனைவிக்கு வாழ்த்துக்கள்.
    வலைச்சரத்தில் இந்த பதிவை கவிநயா குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    ReplyDelete

  9. @ இராஜராஜேஸ்வரி
    @ கீதா சாம்பசிவம்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ ஷைலஜா
    @ சீனா
    @ மாதேவி
    @ ரஞ்சனி நாராயணன்
    @ கோமதி அரசு.
    வந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. வலைச்சர அறிமுகம் மூலம் அறிந்தவர்கள் தொடர்ந்து வருகை தர வேண்டும். நிறையவே எழுத எண்ணமுண்டு, ரெசிப்பியை செய்து பார்த்து எண்ணங்கள் கூறினால் மகிழ்ச்சி இன்னும் கூடும். மீண்டும் நன்றி.

    ReplyDelete