Sunday 16 June 2013

முளைப் பயறு கூட்டு...                                                    முளைப் பயறு  கூட்டு...
                                                     -----------------------------இன்றைக்கு எளிமையான , ருசியான, உடலுக்கு ஏற்றதான ஒரு ரெசிபி.   பாசிப்பயறில் தண்ணீர் ஊற்றிவைத்து மறுநாள் நீரைவடித்து வைத்தால் மறுநாள் பயறு முளை விட்டிருக்கும். முளைவிட்ட பயறை வேகவைக்கவும். வெங்காயத்தை  எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும் கடாயில் சிறிது எண்ணை ஊற்றி கடுகு, சிறிது சீரகம் போட்டுத் தாளிக்கவும் அதில் நறுக்கிய வெங்காயத்தையும் நறுக்கிய தக்காளியும்  போட்டு வதக்கவும். அதில் வெந்த பயறைப் போட்டு சிறிது நீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சத்தூள் தேவையான உப்பு சிறிது மிளகாய்த் தூள் போட்டுக் கொதிக்க விடவு.ம்.நன்றாகக் கொதி வந்ததும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.
( விருப்பமுள்ளவர்கள் தாளிதத்தில் சிறிது சோம்பு சேர்க்கலாம் ) 

இதில் நான் அளவுகள் கூறவில்லை.எத்தனை பேருக்கு என்று பார்த்து அளவுகள் எடுத்துக் கொள்ளலாம். நீர் நிறைய விட்டு குழம்பாகவோ, நீரைக் குறைத்து சிறிது கெட்டியாகவும் வைக்கலாம். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாய் இருக்கும். செய்து பார்த்துக் கருத்து சொல்லலாமே.  

18 comments:

 1. எங்க வீட்டில் அடிக்கடி உண்டு. :)))) எல்லாப் பயறு வகைகளுமே முளைக்கட்டிச் செய்வோம். பச்சைப் பயறை அப்படியே சாலடாகக் காரட், வெங்காயம், தக்காளி சேர்த்து மிளகு பொடி, உப்புப் போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து, கொத்துமல்லியும் சேர்த்து சாலடாக அடிக்கடி சாப்பிடுவோம்.

  ReplyDelete
 2. செய்து பார்ப்போம்... நன்றி ஐயா...

  ReplyDelete
 3. மிக மிக நன்றி. பயத்தம்பருப்பு ஒன்றுதான் எங்கள் இருவருக்கும் ஒத்துவருவது. நீங்கள் அளித்திருக்கும் ரெசிபி படிக்கவே சுவையாக இருக்கிறது. இன்றே ஊறப் போட்டு நாளை செய்துவிடுகிறேன்.
  அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 4. பேச்சுலர் சமையல்ல பெரும்பாலும் பாசிப்பயறு குழம்புதான் பண்ணுவேன்.
  என்ன ஒன்னு முளை விடுற வரைக்கும் பொறுமை இல்ல . இன்ஸ்டன்ட் தான் .

  ReplyDelete

 5. @ கீதா சாம்பசிவம்
  @ திண்டுக்கல் தனபாலன்
  @ வல்லிசிம்ஹன்
  @ ஜீவன் சுப்பு
  அனைவரது வருகைக்கும் நன்றி. எத்தனையோ சமையல் வகைகள். படிக்கவும் செய்து பார்க்கவும் மனம் இருக்குமானால் பதிவிட நான் தயார்.

  ReplyDelete
 6. அடடடா... ரொம்ப நாள் தனியாவே குடுத்தனம் செஞ்சிருப்பீங்களோ? இவ்வளவு அழகா ரிசிப்பீ எல்லாம் தறீங்க? நானும் ஒருவகையில் அப்படித்தான் சுமார் எட்டு வருசம் கேரளாவிலும் மும்பையிலும் தனியா இருந்து சமைச்சி சாப்ட்ருக்கேன். ஆனா ஒங்கள மாதிரி வகை, வகையா செஞ்சிருப்பேன்னு சொல்ல முடியாது. என் சமையல நாந்தான் சாப்ட்டுக்கணும்:))

  ReplyDelete
 7. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா!

  ReplyDelete
 8. Visit : http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_27.html

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. வணக்கம் ஐயா .தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்து
  வைத்துள்ளேன் .முடிந்தால் வருகை தாருங்கள் .மிக்க நன்றி !
  http://blogintamil.blogspot.ch/2013/07/blog-post_27.html

  ReplyDelete
 10. வணக்கம்.. ஐயா!.. தங்கள் வலைத்தளத்திற்கு இன்று தான் முதல் வருகை. பச்சைப் பயிறு முளைகட்டி வெள்ளரி அல்லது காரட் இவற்றைப் சன்னமாக நறுக்கிப் போட்டு - இயற்கையாகவே உண்ணும் பழக்கம் உண்டு. எனினும் தங்கள் குறிப்பின்படியே பாசிப்பயறு ஊற வைத்து விட்டேன்!..

  ReplyDelete
 11. நல்ல குறிப்பு.... வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 12. அடிக்கடி நான் விரும்பிச் சாப்பிடும் அயிட்டம் இது!

  ReplyDelete
 13. இது போல உணவு வகைகள் இப்போது இல்லை அல்ல்து பார்ப்பது அரிதாவே/

  ReplyDelete
 14. செய்து பார்க்கலாமே அய்யா, தங்களது பதிவு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. அரிதான தகவலுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 15. செய்து பார்க்கலாமே அய்யா, தங்களது பதிவு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. அரிதான தகவலுக்கு நன்றி அய்யா.

  ReplyDelete
 16. நல்ல சத்தான உணவுக்குறிப்பு.
  நன்றி.

  ReplyDelete
 17. வணக்கம் ஐயா

  இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறேன்...

  நேரம் இருக்கும் போது சென்று பாருங்கள்...

  அதற்கான இணைப்பு கீழே...

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_4.html

  நன்றி.

  ReplyDelete