Friday 7 June 2013

பாகற்காய் பொரிச்ச குழம்பு....!


                                  பாகற்காய் பொரிச்ச குழம்பு....!
                                 -------------------------------------------




 நான் மொளகூட்டல் இஞ்சிப்புளி செய்முறையை கடந்த பதிவில் எழுதி இருந்தேன். திரு. அப்பாதுரை செய்து பார்த்து நன்றாக இருந்தது என்று கூறிவிட்டு பொறிச்ச குழம்பு போலிருந்தது என்றார். என் மனைவி அவள் சமைக்கும் பொறிச்ச குழம்பின் செய்முறையைக் கூறினாள் This PORICHA KUZHAMPU is entirely different. !

பாகற்காயை அதன் கசப்பு தெரியாதபடி ருசியாக சமைக்க இந்த முறை.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு- சுமார் இரண்டு கைப்பிடி அளவு.
புளிக் கரைசல் ஒன்றரைக் கப்(அதிக நீராகவோ , அல்லது கெட்டியாகவோ கூடாது. )
பொடியாய் நறுக்கிய பாகற்காய் ஒரு கப்.
தனியா,மூன்றிலிருந்து நான்கு டீஸ்பூன்
 உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, ஒவ்வொன்றிலும் ஒரு டீஸ்பூன்
வெந்தயம் கால் டீஸ்பூன், சிறிது பெருங்காயம் ஐந்தாறு காய்ந்த மிளகாய்
தேங்காய் சிறிது
உப்பு தேவையான அளவு.
தாளிக்கக் கடுகு கறிவேப்பிலை, துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன், எண்ணை
சிறிது வெல்லம் ( விரும்பினால் )


செய் முறை.
தனியா உ. பருப்பு, க. பருப்பு,வெந்தயம் காய்ந்தமிளகாய், பெருங்காயம் இவற்றை எண்ணையில் வறுத்து எடுத்து தேங்காயுடன் சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்

துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
புளிக் கரைசலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடவும் நறுக்கிய பாகற்காயை அதில் போட்டு வேக விடவும். சிறிது மஞ்சத்தூள் உப்பு சேர்க்கவும் புளியின் பச்சை வாசனை போனபிறகு , பாகற்காய் வெந்தபிறகு வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்க்கவும்சிறிது விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்கவும் எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து எண்ணையில் கடுகு தாளிக்கும்போது துருவிய தேங்காயையும் சேர்த்து நன்றாக வதக்கித் தாளிக்கவும். ( அவரவர் ருசிக்கு ஏற்றபடி தேவைப் பட்டால் பொறிச்ச குழம்பை இறக்கும் முன் சிறிது வெல்லம் சேர்க்கலாம்)
சாதாரணமாக துவரம் பருப்பு போட்டுச் செய்யும் தக்காளி ரசத்தை , ஒரு மாற்றத்துக்கு பாசிப் பருப்பு போட்டு செய்து பாருங்களேன். சூப்பராக இருக்கும்.  

9 comments:

  1. துருவிய தேங்காய் மட்டும் சேர்க்கா விட்டால், சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கும் நல்ல குழம்பு இது... நன்றி ஐயா...

    பாகற்காயின் கசப்பு தனி சுவை... (எனக்கு...!)

    ReplyDelete
  2. நாங்க இதைப் பிட்லைனு சொல்லுவோம். வறுத்து அரைக்கும் சாமான்களோடு அரை டீஸ்பூன் மிளகும் சேர்ப்போம். :))) பாகற்காயை நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துச் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்னர் காயைத் தனியாக வேக விட்டுக் குழம்பில் சேர்த்தால் துளிக்கூடக் கசக்காது. வடிகட்டிய நீரைக் கொட்டாமல் சூப் மாதிரி உப்பு,மிளகுத்தூள் சேர்த்துக் குடிக்கலாம்.(பிடித்தால்)கேரளாப் பக்கம்/ பாலக்காட்டுத் தமிழர்கள் இதைப் பொரிச்ச குழம்புனு சொல்லிப் பார்த்திருக்கேன்.

    பாசிப்பருப்பில் எலுமிச்சை ரசம், வெறும் தக்காளி மட்டும் சேர்த்துச் செய்தால் நன்றாக இருக்கும். பாசிப்பருப்புக் குழைய வேகணும்.

    ReplyDelete
  3. டிடி, தேங்காய் சேர்த்தால் சர்க்கரை நோய் அதிகமாகும் என்பது அலோபதி மருத்துவத்தில் மட்டுமே. உண்மையில் தேங்காய் அதுவும் பச்சைத் தேங்காய் உடலுக்கு ரொம்பவே நல்லது. தேங்காய் எண்ணெய் கொலஸ்ட்ரால், தேங்காய் சர்க்கரைக்கு ஆகாதுனு சொல்லிச் சொல்லி நல்ல உணவுகளைச் சாப்பிடமுடியாதபடி பண்ணிட்டாங்க! இது குறித்த ஒரு ஃபார்வர்ட் மடல் இணையத்திலே கூட உலாவிட்டு இருந்தது. :)))))

    ReplyDelete
  4. இது நல்லாருக்கே. டிரை பண்ணச் சொல்லனும்.

    ReplyDelete

  5. வருகை தந்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றி. ஐயப்பன், இதுமட்டுமல்ல மற்ற ரெசிபிக்களையும் ட்ரை செய்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  6. இது பிட்லா/லை இல்லையோ?

    ReplyDelete
  7. ஓகே.. கீதாம்ம கமென்ட் பார்த்தேன் :)

    என்ன பேர் வச்சாலும் சரிதான்.

    தேங்காயும் மிதமாகச் சேர்க்க வேண்டும் - உடலில் இயல்பாக உருவாகும் கொலஸ்டிராலை விட தேங்காயில் அதிகம் வந்துவிடப் போவதில்லை. (ஆனால் தேங்காய் இனிப்புகள் நிச்சயம் தவிர்க்க வேண்டும் - சர்க்கரை நோயிருப்பவர்கள்)

    எனக்குப் பாகற்காயை வேக வைத்து பீனட் பட்டரோடு தொட்டுச் சாப்பிடப் பிடிக்கும்.

    ReplyDelete
  8. கீதா சொல்வது போல் இந்த முறையில் செய்வதை பாகற்காய் பிடலை என்போம்.

    அருமையான சமையல்குறிப்புகள் தருகிறீர்கள்.இனி பூவையர் பக்கமும் வருவேன்.

    ReplyDelete
  9. சிலர் பாகற்காயை கசப்பு என்று ஒதுக்குவர் ... ஆனால் சாப்பிட்டு பழகி விட்டால் அதன் கசப்பு கூட அலாதியான சுவைதான்... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete