அவனின்றி கேக் “பேக்”கலாம்
------------------------------------------
சென்ற பதிவில் கேக் செய்யும் முறை
பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன். கேக் செய்முறை விளக்கங்கள் ஏராளமாக
வந்திருக்கும். கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டின் போது செய்து மகிழ இவனது
கேக் செய்முறை. இதில் என்ன வித்தியாசம் என்றால் மிகச் சாதாரண உபகரணங்களுடன்
அவனின்றி(oven) கேக் செய்யலாம்.
கேக்
செய்யத் தேவையான பொருட்கள்.
மைதா மாவு, சர்க்கரை, முட்டை
வெண்ணை, சிறிது பாலேடு, வெனிலா எசென்ஸ், முந்திரிப்பருப்பு பேக்கிங் சோடா
இவற்றின் அளவுகள் –வெண்ணை,
சர்க்கரை மைதா இம்மூன்றும் ஒரே எடையில் இருக்கவேண்டும். உ-ம் கால் கேஜிமைதா
என்றால் கல் கேஜி வெண்ணையும் கால் கேஜி சர்க்கரையும் தேவைப் படும். வீட்டில் எடை
போட்டுப் பார்ப்பது கடினம் என்பதால் ஒரு டம்ப்ளர் மாவுக்கு அதற்கும் சற்றுக்
குறைவாகச் சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம். நான் டம்ப்ளர் என்று சொல்லும் போது அது
250 ml ( கால் லிட்டர் அளவு கொண்டது, வெண்ணை கால் கேஜிக்கும் சற்று
குறைவாக இருக்கும். . இந்த அளவுக்கு இரண்டு முட்டைகள் தேவை படும்.
முதலில் முட்டையை உடைத்து வெள்ளை
மஞ்ச்ள் தனித்தனியே வைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளையை நன்றாகச்
சிலும்பவும் நன்றாகச் சிலும்பிய முட்டையின் வெள்ளை பொங்கி எழுந்து ஒரே நுரைபோல்
காண வேண்டும். சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும் பொடித்த சர்க்கரையை வெண்ணையில்
நன்றாக மிக்ஸ் செய்யவும் மைதாமாவில் சிறிது ( முக்கால் டீஸ்பூன்.?) பேக்கிங்
சோடாவை நன்றாகக் கலக்கவும் பேக்கிங் சோடா தூள் பரவலாக நன்றாகவே கலந்திருக்க
வேண்டும்.
வெண்ணை சர்க்கரை மிக்சில் கொஞ்சம்
கொஞ்சமாக மைதாமாவைப் போட்டு கிளறவும். இந்த கிளறல்தான் சற்றுக் கடினமான வேலை.
இந்தக் கலவை இறுக்கம் அதிகம் போல் தோன்றினால் அதில் சிறிது பாலேடு கலக்கலாம். நன்றாகக்
கிளறியபின் அதில் அடித்து வைத்த முட்டையின் வெள்ளையைக் கலக்கவும் அதன் பிறகு
முட்டையின் மஞ்சளைச் சேர்த்துக் கலக்கவும் இந்தக் கலவை ஒரு homogeneous mix ஆக இருக்க வேண்டும் அதில் பொடியாக நறுக்கிய
முந்திரிப் பருப்பையும் சேர்த்துக் கடைசியில் ஒரு டீஸ்பூன் வெனிலா எஸ்ஸென்ஸையும்
கலக்கினால் கேக் செய்ய “ பாட்டர் “ரெடி.
பொதுவாக கேக் செய்ய oven வேண்டுமென்பார்கள். அது இல்லாமலேயே கூட கேக்
செய்யலாம். குக்கரில் வரும் சாதம் வைக்க வரும் பாத்திரத்தின் உட்புறம் சிறிது
வெண்ணை எடுத்து தடவவும் அப்படித்தடவிய பாத்திரத்தில் மைதா பொடி தூவி அது தடவிய
வெண்ணையில் ஒட்டிக் கொள்ளுப்படியாக இருக்கும். அதாவது பாத்திரத்தின் உட்புறம் மாவு
பூசிக் கொண்ட மாதிரி இருக்க வேண்டும். இந்தப் பாத்திரத்தில் கேக் பாட்டரை போட்டு (
ஒரு இன்ச் உயரத்துக்கு ) சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும் முக்கியமாக
பாட்டரில் காற்றுத் துளைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இப்போது கேக் பேக் செய்யத்தயார்.
குக்குரின் (நான் பான் (pan) உபயோகித்தேன்) உள்ளே இந்தப் பாத்திரம்
வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது பாத்திரம் குக்கரின் எந்த பகுதியிலும்
தொடாதபடி அடியில் குடம் வைக்கும் base கம்பி
வைத்து அதன்மேல் வைக்க வேண்டும் முக்கியமாக மிதமான தணலில்தான் கேக் பேக்காக
வேண்டும். குக்கரின் gasket-ஐ எடுத்து விட்டு குக்கரை மூடவும்.வெயிட்
வைக்கக் கூடாது இரண்டு நிமிட சூட்டுக்குப் பின் ஸ்டவ்வை சிறிதாக்கி அந்த சூட்டில்
கேக் வேகட்டும். பதினைந்து இருபது நிமிடங்களில் கேக்கின் வாசனை வரும். குக்கரின்
மூடியை எடுத்து கேக் பேக்காகி இருக்கிறதா என்று சோதிக்கவும் கேக் பாட்டரில் ஒரு
கத்தியைச் சொறுகினால் ஒட்டக் கூடாது. ஒட்டினால் இன்னும் சிறிது நேரம் கழிந்து
சோதனை செய்யலாம். நன்றாக பேக் ஆனபின் எடுத்து
ஒரு வட்டத்தட்டில் கவிழ்க்கவும் . நன்றாக பேக் ஆன கேக் பொன்னிறமாக
இருக்கும்
கைவேலை தெரிந்தவர்கள் அதன் மேல்
ஐசிங் செய்து அலங்கரிக்கலாம். கேக் அவனே
இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே கேக் தயாரிக்கும் முறை பற்றிக்
கூறி இருக்கிறேன். எங்கள் வீட்டில் நான் செய்யும் இம்மாதிரி கேக் எல்லோராலும்
விரும்பி உண்ணப் படும்
முட்டையின் வெள்ளையை சிலும்ப |
முட்டை வெள்ளை சிலும்பியது |
குக்கர் பான் |
குக்கர் பாத்திரம் |
குக்கர் பான் பாத்திர சப்போர்ட்டுடன் |
கேக் பாட்டர் பாத்திடத்தில் |
கேக் பாட்டர் போடுமுன் பாத்திரம் |
கேக் பாட்டர் ஸ்டவ்வில் மூடும் முன் |
cake pieces |
baked cake |
மூன்றாண்டுகளுக்கு முன் நான் செய்த கேக்குடன் என் மாமியாரின் பிறந்தநாள்
அருமையாக கேக் செய்யும் முறை.
ReplyDeleteகிருஸ்துவின் பிறந்த நாளில் பொதுவாக கேக் செய்யப் படுகிறது. அதுவே எல்லோர் பிறந்த நாளிலும் கேக் செய்யும் பழக்கமாகிவிட்டதோ. அண்மையில் நண்பர் வைகோவின் பதிவில் பெரியவரின் சிந்தனையாக படித்தது நினைவில் வருகிறது. ஜேஷுவா என்னும் பெயர் மருவி ஏசு என்று உச்சரிக்கப் பட்டு வருகிறது. இந்த ஏசுவே ஈசன் ஆகவும் மருவலாம். கிருஸ்து என்னும் பெயர் மருவி கிருஷ்டினன் ஆகவும் நினைக்கலாம் ஆக ஏசு கிருஸ்து ஈச கிருட்டினன் ஆகவும் கொள்ளலாம் என்று படித்த நினைவு. ஆக இந்த கேக்செய்முறை எல்லா தெய்வங்களுக்கும் சமர்ப்பிக்கப் படுகிறது.//
அருமையான விளக்கம்.
தெய்வத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கேக் சுவைக்கு கேட்க வேண்டுமா!
வணக்கம்...
ReplyDeleteவிளக்கமான செய்முறைக்கு நன்றி ஐயா...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...
ஐயா... இப்படி அசத்திடீங்களே ஐயா!..:)
ReplyDeleteசூப்பர்!
அவன் இல்லாமலே கேக் செய்யும் குறிப்பு மிக அருமை!
உங்கள் கைவண்ணம் கண்டு இன்னும் திகைப்பில் நான்...
ஐயா எல்லாக் கடவுளும் ஒன்றே!
உருவங்கள் வேறெனினும் அருள் ஒன்றுதான்!
அந்த அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
நிறைவாகக் கிடைத்திட உளமார வாழ்த்துகிறேன் ஐயா!
sir, cake pathivu super '
ReplyDeletelost week than vengaya pajji seyya try pani athu uppuma mathiri poidichi
intha week neega sonna cake try pani pakuren
கேக் பதிவு அருமை. சிறு வயதில் அம்மா கேக் பண்ணுவார்கள். இன்னும் பல சுவாரசியமான நிகழ்வுகளும் உண்டு. இறுதியில் உள்ள காணொளி அருமை. எனக்கே ஒரு துண்டு கேக் கிடைத்தது போன்ற உணர்வு.
ReplyDelete
ReplyDelete@ கோமதி அரசு
நான் வேறு சில அலுவல்களில் இருந்து விட்டதால் பின்னூட்டங்களைப் பார்ப்பதிலும் மறுமொழி எழுதுவதிலும் தாம்தமாகி விட்டது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
@ திண்டுக்கல் தனபாலன்
வலைச்சர அறிமுகம் தெரிவித்ததற்கு நன்றி. நான் இன்னும் பார்க்கவில்லை. வேறு அலுவல்களில் இருந்த காரணத்டால் வலைப் பதிவு பக்கமேவர முடியவில்லை.
@ இளமதி
திகைக்க என்ன இருக்கிறது சகோதரி.?நமக்கும் சமையல் வரும் என்று தெரிவித்துக் கொள்ள இது போல் பதிவுகள். இதைச் செய்து பார்த்து கருத்துச் சொன்னால் இன்னும் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
@ காயத்ரி
வருகைக்கு (முதல்.?) நன்றி. செய்து பார்த்துச் சொல்லுங்கள். வெங்காய பஜ்ஜி அனுபவம் போல் இருக்கக் கூடாது என்று வேண்டுகிறேன்.
@ உமேஷ்.
என் கேக் பதிவு நெகிழ்ச்சியான நினைவுகளைக் கொண்டு வந்தது தெரிகிறது.வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. .
வணக்கம்
ReplyDeleteஐயா.
சிறப்பான செய்முறை விளக்கம் பதிவு அருமை வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நாவில் எச்சில் ஊறும் கேக் கொஞ்சம் கிடைக்குமா?
ReplyDeleteதெரிந்துககொன்டேன் ஐயா
ReplyDeleteதிருமதி GMB பிறந்த நாள் ஆகையால் 'பூவையின் எண்ணங்கள் 'தளத்தில் இதை பதிவு செய்தது பொருத்தமே :)
ReplyDeleteமுன்னர் நான் குக்கரில் கேக் செய்தபோது அதன் சேஃப்டி வால்வ் உருகி விட்டது. அப்போதெல்லாம் சேஃப்டி வால்வ் ஈயத்தில் உருக்கி வார்த்திருப்பது தான் வரும். இப்போது தான் சிலிகன்/ரப்பர்(?) வருகிறது. இம்முறையில் ஒரு முறை குக்கரில் வைத்துப் பார்க்கிறேன். சாதம், பருப்புப் போன்றவை கூடக் குக்கரில் வைப்பதில்லை. நேரடியாகவே சமைக்கிறேன். :)
ReplyDeleteஅவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பார்கள் ... ஆனால் நீங்களோ அவனின்றி கேக் செய்ய டிப்ஸ் கொடுக்கிறீர்கள் ... ம் ...ம்ம் .. செம தில்லுதான் உங்களுக்கு !!! ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete