Wednesday 3 April 2013

அடிப்படை சமையல்

                                            
                                  அடிப்படை சமையல்.
                                  ------------------------------
ு ஒரு பியைப் பூ.பெரும்பாலானைப் பூக்கில் சையும் சிலிவுகாகுகிறு. ஆனால் இந்தைப்பூவில் சையைப் பற்றியிவுகள் ட்டுமே வும். ோ ஒரு உந்தில் ஆரம்பிக்கிறேன். இன் பின்னியில் எனக்கு உி செய்ய என் மைவி இருக்கிறாள் என்ற ைரியம்ான். இன் அடிநை வாசிப்பர்குக்கும் ெரியு என்ற எண்ணம்ான். ( assumption ) ெரிந்தர்கும் பிக்காம். குறைகள் இரந்தால் ாராளாகத் ெரியப் பத்ாம். cooking is an ever learning process.

முதலில்  சில முன் குறிப்புகள். gas அடுப்பில் சமைக்கும்போது கவனம் மிகவும் தேவை. பர்னர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். வேலை துவங்கும்போது காஸை திறந்தால் போதும். வேலை முடிந்தவுடன். காஸை மூடிவிடவும். இண்டக்‌ஷன் ஸ்டவ் -ஆக இருந்தால், அது உபயோகிக்கும் வழிமுறைகளைத் தெரிந்து கொள்ளவும். தேவை இல்லாதபோது ஸ்டவ்வை அணைத்து விடவும்.

முதலில் காஃபி , மற்றும் டீ போடும் முறைகளைப் பார்ப்போம். காஃபிகுடிப்பவர்கள் பல ரகம். காப்பி காய்ச்சுபவர்களும் இருக்கிறார்கள். டிகிரி காஃபி தேவைப் படுபவர்களும் இருக்கிறார்கள். காஃபி போட முக்கியமாகத் தேவைப்படுவது காஃபி பௌடர், நல்ல பால், சர்க்கரை. and of course water..!காஃபி நன்றாக திக்காக இருக்கவேண்டும் என்பவர்கள், சிக்கரி அதிகம் கலந்த காஃபித் தூளை உபயோகிக்கிறார்கள். சிக்கரியே கலக்காத ப்யூர் காஃபி நீர்த்தது போல் இருக்கும். என் பரிந்துரை. புதிதாக காஃபிக் கொட்டையை வறுத்து அரைக்கப்பட்ட காஃபித் தூளில் சுமார் 15% சிக்கரி கலக்கலாம். நன்றாக இருக்கும். டிகிரி காஃபிக்கு நல்ல ஃபில்டர் தேவை. ஃபில்டரில் துவாரங்கள் பெரிதாக இருந்தால் நீரில் காஃபி இறங்காது. இரண்டு டம்ளர் காஃபி போட ஒரு டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்கவைத்து ஃபில்டரில் நான்கு டீஸ்பூன் காஃபி தூள் போட்டு  ஊற்றவும். அது  இறங்கும் நேரத்தில் நல்ல பாலைக் கொதிக்க வைத்துக் கொள்ளவும் பிறகென்ன. அவரவர் ருசிக்கு ஏற்றார்போல் டிகாக்க்ஷனுடன் பாலும் சர்க்கரையும் சேர்க்கவும். லேசான கசப்புடன் இருக்கும் சூடான காஃபி குடித்துவிட்டுச் சொல்லுங்கள்.  ‘பேஷ், பேஷ், ஜோர் ஜோர்.”
மீதி அடுத்தபதிவில்...!  

9 comments:

  1. புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...

    சூடான காஃபியுடன் ஆரம்பமே அருமை... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. /// இது ஒரு புதிய வலைப் பூ.பெரும்பாலான வலைப் பூக்களில் சமையலும் சில பதிவுகளாக வருகிறது. ஆனால் இந்த வலைப்பூவில் சமையலைப் பற்றிய பதிவுகள் மட்டுமே வரும். ஏதோ ஒரு உந்துதலில் ஆரம்பிக்கிறேன். இதன் பின்னணியில் எனக்கு உதவி செய்ய என் மனைவி இருக்கிறாள் என்ற தைரியம்தான். இதன் அடிநாதமே இதை வாசிப்பவர்களுக்கு ஏதும் தெரியாது என்ற எண்ணம்தான். ( assumption ) தெரிந்தவர்களும் படிக்கலாம். குறைகள் இருந்தால் தாராளமாகத் தெரியப் படுத்தலாம். cooking is an ever learning process. ///

    இது பதிவின் முதல் பத்தி... எழுத்து (Font) மாறி உள்ளதால்...

    http://www.google.com/intl/ta/inputtools/cloud/

    மேலே உள்ளத்தில் நீங்கள் விரும்பும் மொழியில், விரும்பும் நேரத்தில் தட்டச்சு செய்வதை மேகக்கணி உள்ளீட்டு கருவிகள் எளிதாக்குகின்றன.

    அந்த இணைப்பில் "Chrome நீட்டிப்பை நிறுவுக" சொடுக்கி Google Chrome-ல் Extension -ஆக பயன்படுத்தலாம்...

    ReplyDelete
  3. Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்...

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
  4. புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ஐயா, நான் அம்மாதான் தொடங்கினாங்களோன்னு நெனைச்சேன். ஆரம்பமே சுவாரஸ்யம், பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு.

    ReplyDelete
  6. என்னோட பின்னூட்டம் எங்கே காணவில்லை?? வரலையா? சிக்கரி இல்லாத ப்யூர் காஃபி எங்க வீட்டில் சாப்பிட்டால் நல்லா இருக்கும்னு எழுதி இருந்தேன். ஃபாலோ அப் எல்லாம் வருது. ஆனால் என்னோட பின்னூட்டத்தைக் காணவில்லை.

    புதிய பதிவு ஆரம்பிச்சதும் உங்களைக் காணவே காணோம். பிசியாயிட்டீங்க போல!:)))))

    ReplyDelete
  7. புதிய தளம் பூவாய் மணக்கிறது.முதல்ல காஃபியா? என்ன காஃபிப்பொடி உங்க வீட்ல? நாம் இருக்கும் பெங்கலூரின் கோதாஸ் காஃபி அல்லது கூர்க் காஃபி தான் பெரும்பாலும் எங்க வீட்டில்... பாலைக்காய்ச்சி நுரைததும்ப ஆற்றி சூடு குறையும் முன் அதில் துளித்துளியாய் ஸ்ட்ராங்க் டிகாஷன் சேர்க்கணும் சக்கரைகொஞ்சமாய்(எனக்கு சக்கரை கூட இருக்கணும்:) அப்போதான் மணம் எட்டூருக்கு செல்லும்:) ஆனாலும் காபி போடுவதும் ஒரு கலைதான்..அழகா சொல்லிருக்கீங்க திருமதி உதவியால்தானே?:) அவங்க கைமன(ண)ம் தான் நான் ருசித்திருக்கேனே அருமை!

    ReplyDelete
  8. பில்டர் காபி ? .... ஓ இது ப்ரூ-வா பேஷ் ... பேஷ் ... ரொம்ப நன்னா இருக்கு.!!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete